6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்

6 வகையான பால் மற்றும் அவற்றின் பல பயன்கள்

உங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மையை பொறுத்தது. பால் கால்சியம் மற்றும் புரதத்தின் நன்மைகள் கொண்டிருக்கிறது.நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்க பல்வேறு வகையான பால் பற்றி மேலும் அறியுங்கள்.

பால், இயற்கையின் ஆரோக்கிய பானம். வளர்ந்து வரும் சிறு குழந்தையை முழூ மனிதனாக ஆக்கும் சக்தி கொண்டது.கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சரியான இருப்புடன்,  எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுவதை தவிர,தசைகள் மற்றும் இரத்த நாளங்களின் முறையான செயல்பாட்டிலும்   உதவுகிறது.

தாய்ப்பால் மற்றும் புட்டிபால் ஆகியவை கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன,ஆனால்,

தாய்ப்பால் வயதை எட்டிய குழந்தைக்கு என்ன செய்வது?

சந்தையில் கிடைக்கக்கூடிய மாட்டுப் பால், எருமை பால், சோயா பால், அரிசி பால் மற்றும் ஆட்டுபால் வகைகளில், எடை வளர்ச்சிக்கு தேவையான அளவை பற்றி  எப்படி தெரியும்?

வல்லுனர்களின் கூற்றுப்படி, 12 மாதங்கள் முடிந்தபின் ஒரு குழந்தையின் உணவுக்கு, வெளிப்புற ஆதாரங்களில் இருந்து பால் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.வயிற்றில் மற்ற பாலின் செரிமானத்தை வலுவாகிறது.

"குழந்தையின் சுவை மற்றும் சகிப்புத்தன்மையைப் பொறுத்து, , ஒரு வருடத்திற்குப் பிறகு, தாய்ப்பால் மற்றும் புட்டிபால் நிறுத்தியபின் (இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும் WHO பரிந்துரைக்கும் போதும்),பசு  அல்லது எருமை பால் சேர்க்கப்படலாம்" " என்கிறார் டாக்டர் மனீஷ் மன்னன், ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பீடியாட்ரிக் மற்றும் நியோநேட்டோலாஜி   , தாய் மற்றும் சிறுவர் பிரிவு, பராஸ் மருத்துவமனை, குர்காவோன். மேலும் "ஒரு பாலை இன்னொரு பாலுடன் சாப்பிடக்கூடாது" என்கிறார்.

உங்கள் பிள்ளையின் பால் விருப்பம் அவர் சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வாமையை  பொறுத்தது.

"உதாரணமாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற ஒரு குழந்தைக்கு, சோயாவில் இருந்து பெறப்பட்ட லாக்டோஸ் அல்லாத பால் பயன்படுத்தப்படலாம்" என்று டாக்டர் ருச்சி கோலஷ், கல்கத்தா மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறார்.

மேலும், ஒரு குழந்தையின் வயதிற்கு ஏற்றதுபோல், தேவையான பால் கிடைக்கும்."ஒரு குழந்தைக்கு  ஒரு வயது நிரம்பிவிட்டால், ஒவ்வொரு நாளும் 500 மில்லி பால் தேவைப்படுகிறது.இரண்டு வயதில், குறைந்தபட்சம் 700  மில்லி பால் தேவைப்படுகிறது" என்று டாக்டர் கோலாஷ் கூறுகிறார்

எனினும், அனைத்து வகையான பாலிலும் சில நன்மைகள் உள்ளன. புதிய பால் அல்லது பால் உற்பத்தி பொருளை அறிமுகப்படுத்துவதற்கு முன் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் குழந்தை மருதிவரால் உங்களுக்கு வழிகாட்ட முடியும்.

1. சோயா பால்

பசும்பால் அலர்ஜியால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கும், லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைகளுக்கும் சோயா பால் பரிந்துரைக்கப்படுகிறது.ஒரு தாவரத்திலிருந்து பெறப்பட்டு, ஊறவைத்து, உலர் சோயாபீன்ஸை கொதிக்கவைத்து, பின்னர் தண்ணீரால் அரைக்க படுகிறது. பசும்பாலிலிருக்கும் புரதம் சோயா பாலிலும் உள்ளது.,

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் ஃபைபர் இயற்கையாகவே இதில் அதிகமாக உள்ளது.குழந்தைக்கு ஒரு வருடமாக பிறகு, பிள்ளையின் உணவில் சோயா பால் சேர்க்கப்படலாம். இருப்பினும், "குறைந்த கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளடக்கம் காரணமாக, கலப்பு உணவின் ஒரு பாகமாக பால் பரிந்துரைக்கப்படுகிறது" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.

சந்தையில் பலவிதமான  சோயா பால் கிடைக்கிறது.ஆனால், உங்கள் குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னால் கவனத்தில் கொள்ளுங்கள்.இரண்டு வருடங்களுக்கு குறைவான குழந்தைகளின்   மூளை வளர்ச்சிக்கு கொழுப்பு முக்கியம் என்பதால் கொழுப்பு இல்லாத சோயா பாலை வாங்க வேண்டாம்.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, மற்றும் கால்சியம் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட சோயா பாலை அவசியம் வாங்குங்கள்" என்கிறார் டாக்டர் மன்னன்.

2. ஆட்டுப்பால்

ஆட்டுப் பாலின் ஊட்டச்சத்து மதிப்பு பசும்பாலிற்கு சமமாகத்தான் உள்ளது.எனவே, 12 மாதங்களுக்குப் பிறகு உங்கள் பிள்ளையின் உணவின் ஒரு பகுதியாக  இது செய்யலாம்." எனினும், மாடு அல்லது எருமை பாலுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக்டோசும்  வைட்டமின் B6, வைட்டமின் A, பொட்டாசியம், நியாசின், செப்பு, மற்றும் ஆக்ஸிஜனேற்ற செலினியம் அதிகமாக உள்ளது.

ஆட்டுப்பாலில் ஃபோலிக் அமிலம் (ஃபோலேட்) இல்லை."ஆகையால், இந்த குறைபாட்டைக் கடக்க, குழந்தைகளுக்கு காய்கறிகள், பழம் மற்றும் ஃபோலேட் நிறைந்த தானியங்கள் கொடுங்கள்"டாக்டர் கோலாஷ் கூறுகிறார். குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் கொதிக்கவைத்து கொடுங்கள்.

சில சந்தர்ப்பங்களில், செரிமானப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு பசும்பாலைவிட ஆட்டுப்பால் பரிந்துரைக்க படுகிறது.

பல்வேறு வகையான பால் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள்

 

types of milk

3. தேங்காய் பால்

தேங்காய் பால் உண்மையான பால் வகை அல்ல. மற்ற பால்வகைகளை போல், இதில் அதிக ஊட்டச்சத்து இல்லை."எனினும்,பால் ஒவ்வாமை மற்றும் சகிப்பின்மை கொண்ட குழந்தைகளுக்கு ஏற்றது" என்று டாக்டர் கோலாஷ் தெரிவிக்கிறார்.பசும்பாலுடன் ஒப்பிடும்போது, இதில் மிகவும் குறைவான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

"இது மட்டுமல்லாமல், தேங்காய் பாலில் கொழுப்புக்கள் நிறைந்திருக்கும். எனவே, தேங்காய் பால் கொண்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது உணவளிப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு ஏற்ற பால் இல்லை..  நிச்சயமாக  பாலாக  பயன்படுத்த முடியாது"

4. எருமை பால்

" எருமை  பாலில் அதிக அளவு கொழுப்பும் கால்சியமும் உள்ளது" என்கிறார்  டாக்டர் மன்னன்.இது தவிர, வைட்டமின் ஏ- யும் நிறைந்திருக்கிறது.அதிக புரதம் செயல்திறன் விகிதம் மற்றும் மாட்டுப்பாலை விட  அதிகம் இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.

எனினும், கொஞ்சம் கொஞ்சமாக  எருமை பால் அறிமுகப்படுத்துவது நல்லது.  ஒரு சிறிய அளவாக தொடங்கி  படிப்படியாக அதை அதிகரிக்க வேண்டும்.கார்ன் பிலேக்ஸ்,  கஞ்சி, சூப்கள் மற்றும்  பாயசம் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தவும்.

5. பசும்பால்

" எந்தவித ஒவ்வாமையும் சகிப்பின்மையும் இல்லை என்றால், ஒவ்வொரு குழந்தைக்கும் பசும்பால் பரிந்துரைக்கப்படுகிறது" என்று டாக்டர் மன்னன் கூறுகிறார்.இருப்பினும், அதிக அளவு இரும்பு சத்து இல்லாததால், குழந்தைக்கு  ஒரு வயதாகும்வரை பசும்பால் கொடுக்கவேண்டாம்.

6. அரிசி பால்

அரிசியை கொதிக்கவைத்து தயாராகும் இந்த பாலில் , கலோரிகள் குறைவாக உள்ளது (ஒவ்வொரு 100 மில்லி யிலும் சுமார் 52 கலோரிகள் உள்ளது)இது தவிர,குறைவான லாக்டோஸ் இருப்பதால்,லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற குழந்தைக்கு ஏற்றது," டாக்டர் கோலாஷ் கூறுகிறார்.

இருப்பினும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கும் பசும்பாளிற்கும் ஏற்ற மாற்று இல்லை."கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் புரதங்கள் ஆகியவவை இல்லாததால், இது ஏற்ற மாற்று இல்லை" என்று டாக்டர் மானன் கூறுகிறார். ருப்பினும், சந்தையில் கிடைக்கக்கூடிய அரிசி பாலில் கால்சியம் உள்ளது.

அரிசி பாலில்  கொழுப்பு குறைவாக உள்ளது. அதனால், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடாது." மற்ற பாலும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளும் வரையில். தளர்நடை பருவத்தில் உள்ள குழந்தைகள் அரிசி பாலை அவ்வப்போது குடிக்கலாம்."என்கிறார் டாக்டர் மன்னன்.

Source: theindusparent

Written by

theIndusparent