குழந்தைகள் மீதான மறுமணத்தின் விளைவுகள்! இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா?

குழந்தைகள் மீதான மறுமணத்தின் விளைவுகள்! இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா?

உங்கள் குழந்தையின் பார்வையில் மறுமணம் தவறாக தென்படலாம். பெற்றோர்களுக்கு இந்த செயல்முறையை சுலபமாக்க சில வழிகளை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம், முழு தேசமும் ஒரு பரபரப்பான செய்திக்கு விழித்தது. மூன்று பெண்களின் தாயான , செய்தி நிறுவனர் இந்திராணி முகர்ஜி,அவரது முதல் கணவருக்கும் தனக்கும் பிறந்த மகளை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவர் பணம் மற்றும்  புகழின் உச்சிக்கு செல்லவேண்டிய ஆசையின் விளைவு, கணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் உள்ள உறவை சிக்கலாகியது.

இந்திராணி முகர்ஜியின் பொய்களால் சூழ்ந்த மறுமணங்கள் அவரது குழந்தைகளிடம் பெரும் அறுவெறுப்பை தூண்டியது.ஆனால் எல்லா மருமணங்களும் இந்த விதியை சந்திக்குமா? இத்தகைய மறுமணங்களால் குழந்தையின் வாழ்க்கை வீணாகுமா?  

" இது போன்ற நிலைக்கு எப்படி பெற்றோர்கள் குழந்தைகளை தயார் செய்கிறார்கள் என்பதுதான் இதற்குப் பதில்".மும்பை சார்ந்த உளவியலாளர் டாக்டர் சீமா ஹிங்கோரானி இவ்வாறு கூறுகிறார்." இப்படி  செய்வதன் மூலம், அவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்ததுபோல் உணருவார்கள்.ஒரு புதிய தந்தை அல்லது ஒரு புதிய தாயை ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறையை எளிதாக்கும்"

குழந்தைகள் மீதான மறுமணத்தின் விளைவுகள்!

இந்தியாவில் மறுமணங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு சிக்கல் உண்டாகும்.முக்கியமாக, இது  குழந்தைகளை பெரிதாக பாதிக்கிறது.தில்லி சார்ந்த உளவியலாளர் மற்றும் சோசலிஸ்ட் அனஜா கபூர்" பெற்றோர் மோதல், பிரித்தல், விவாகரத்து மற்றும்  மறுமணம் , பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகைய மாற்றங்களால் நீடித்த பாதிப்புகள் ஏற்படும்.ஒரு தந்தை அல்லது தாய்க்கு மாற்றாக எதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அம்மா அப்பாவின் துன்பகரமான மணவாழ்வில் வாழ்ந்துகொள்வது பிரிவினை அல்லது விவாகரத்தை விட நல்லது என்று நினைக்கிறார்கள்" என்கிறார்.
effects of remarriage on children

குழந்தைகள் மீது  மறுமணங்கள் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.எனவே, குழந்தைகளும்  இந்த மறுமணம் ஏற்றுக்கொள்ளும் முடிவில் ஈடுபட வேண்டும்.

குழந்தைகள் மீதான பின்வரும் ஐந்து விளைவுகளை கபூர் பட்டியலிடுகிறார்

  • உடைந்த குடும்பங்களின் குழந்தைகள், தங்கள் சகாக்களுடன் பழக முடியாமல் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
  • உடல்நலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
  • குறைந்த சுய மரியாதை மற்றும் நண்பர்களுடன் பழக சிரமங்கள் கொண்டிருப்பார்கள்.
  • மன அழுத்தம் , தலைவலி, படுக்கை ஈரமாக்குதல், வயிறு வலிகள், போன்ற மன அழுத்தம் தொடர்பான சுகாதார பிரச்சினைகளால்  பாதிக்கப்படுகின்றனர்.
  • பள்ளிக்கு செல்ல விரும்பாமல் இருப்பது,
  • 'துன்பகரமான உணர்தல்"

இருப்பினும், உணர்திறனுடன்  கையாளப்பட்டால்,பெற்றோர்கள், குழந்தைகளை மறுமணம் பாதிக்காமல் இருப்பதற்கு உதவலாம்.மும்பை ஊடக நிபுணர் தீபிகா ட்ரிலோக்கெகர் (28) தன் ஊக்கமூட்டிய வாழ்க்கை கதையை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.

"நீண்ட காலமாக  என் பெற்றோர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்து போகாமல் இருந்தது.அவர்களிடையே ஒரு அமைதியின்மை கவனித்தேன். கட்டுப்பாட்டை மீறி விஷயங்கள் வெளிவந்தபோது, என் தாய் திருமணத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததோடு, 2000 ஆம் ஆண்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். எனினும், என் தந்தையை விட்டு வந்தபோது, நானே என் தாயை ஆதரித்தேன்! சில வருடங்களுக்கு பிறகு, 2011 -இல் மறுமணம் செய்து கொண்டார். என் இரண்டாவது "அப்பா" எங்களுக்கெல்லாம் ஒரு வரம் போல் அமைந்தார்"என்று ட்ரிலோக்கெகர் கூறுகிறார்.

விவாகரத்து ஏற்பட்டபோது அவருக்கு வளர்ச்சியும் முதிர்ச்சியும் ஏற்பட்டது. இதன் காரணமாக டிரிலோக்கெக்காரால் தன் தாய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிந்தது.இதனால் வளர்ந்த குழந்தைக்கு  இந்த சிக்கலான சூழ்நிலை சமாளிப்பது எளிது என்று அர்த்தமா?

டாக்டர்  ஹிங்கோரனி " பெற்றோரின் தேவையை புரிந்து கொள்ள ஒரு வளர்ந்த குழந்தையால் முடியும்.அதனால் இந்த சிக்கலை எளிதில் இவர்களால் கடக்க முடியும்.ஆனால், ஒரு இளம் குழந்தைக்கு இந்த மறுமணம் அச்சுறுத்தும்" ஒரு நேர்மையான சூழலை உருவாக்குவதன்மூலம் அத்தகைய நிலைமை வரக்கூடும். "பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு,அவர்கள் விருப்பு வெறுப்பை அறியவேண்டும்.புதிய பெற்றோரை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நீங்கள் மறுமணம் செய்வதற்கு முன் கொஞ்சம் காக்க வேண்டும்"

பெற்றோர்கள் பிரிவதற்கு முன் கண்டிப்பாக செய்யவேண்டிய சில விஷயங்கள்

ஒருவருக்கொருவர் பிரச்சினைகள் இருந்தாலும்கூட, பிள்ளைகளுக்கு பெற்றோருடன் நல்ல உறவு இருக்கும்.அனால்  குடும்பம் உடைந்து போகும் போது அந்த பந்தத்தை  இழக்கிறார்கள். எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு அவசியம்.

ஒரு குடும்பத்தை இறுக்கமாக்கவும், மறுமணத்தின் எதிர்மறை பாதிப்புகளை குறைக்கவும் டாக்டர் கபூர் 9 கருத்துகள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

1  உங்கள் குழந்தையுடன் வெளிப்படையாக பேசுங்கள்:

நீங்கள் மறுமணம் செய்ய தயாராக இருந்தாலும், நீங்கள் இன்னும் அவர் மேல் பாசமும் அன்பும் கொண்டிருக்கிறீர்கள் என்று அடிக்கடி உணர்த்துங்கள்.அவரது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்.மாற்றத்தை  கையாள உங்கள் குழந்தைக்கு நீங்கள் வேண்டும்.

2 உங்கள் குழதையின் உணர்விற்கு பரிவு காட்டுங்கள்

உங்கள் குழந்தைக்கு எந்த வயதானாலும், சில உணர்ச்சிகளை வார்த்தையால் சொல்ல முடியாது.மறுமணத்தை ஒரு குடும்ப இழப்பாக குழந்தைகள் கருதலாம்.உங்கள் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரது கவலைகளை காது கொடுத்து கேளுங்கள்.

3 உங்கள் குழந்தைக்கு புது உறவுகளோடு ஒத்துப்போக கால அவகாசம் கொடுங்கள் :  

புதிய உறவுகளைத் தழுவிகொள்ள குழந்தைகளால் முடியும் என்றாலும், சில குழந்தைகளுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.உங்கள் குழந்தையை புது  நிலைமையை ஏற்றுக்கொள்ள வற்புடுத்தவேண்டாம்.இருப்பினும், மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள்.

4 அவருடன் நேர்மையாக இருங்கள்:

உங்கள் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உண்மையைச் சொல்வது மிக முக்கியம்.உங்கள் திருமணம் ஏன் தோல்வியடைந்தது என்று அவரிடம் சொல்லுங்கள்.அனால் உங்கள் முன்னால் கணவன்/ மனைவியை ஏசாமல் சொல்லுங்கள். உங்கள் சொந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளை ஒப்புக்கொள்வது யார்மீதும் குற்றம் சொல்லாமல், உங்கள் சொந்த தவறுகள் மற்றும் குறைபாடுகளை ஒப்புக்கொள்வது மிக முக்கியம்.இதில் குழந்தையின் தவறு எதுவும் இல்லை என்று சொல்லி புரிய வையுங்கள்.

5 உங்கள் பிள்ளையை எதிர்மறை விளைவுகளிலிருந்து காப்பாற்றுங்கள்:

அவருடன்  நேர்மையாக இருப்பதால், உணர்ச்சி கலவையின் வன்முறைக்கு ஆளாகாமல்,.இந்த எதிர்வினை பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.

6 உங்கள் பிள்ளை உங்களை உளவாளி அல்ல

உங்கள் முன்னால் கணவர்/மனைவியிடம் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்கள் பிள்ளையை அனுப்ப கூடாது.

பிள்ளைகள் மீது மறுமணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தால், பின்னர் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான மற்றும் இறுக்கமற்ற  சூழலை உருவாக்குங்கள்.

"குழந்தையின் நலனிற்காக நிபுணர்களிடம் ஒரு உணர்ச்சி மதிப்பீட்டிற்கு அனுப்பலாம். ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனப்பக்குவத்தின் அளவீடு என்று இரண்டை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேறு ஏதேனும் அறிகுறிகள் காட்டினால் ஆழமாக யோசித்து அவர்களை தொந்தரவு செய்யும் விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் "என்கிறார் டாக்டர் ஹிங்கோரானி.

Source: theindusparent

Written by

theIndusparent