ஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

lead image

இளம் அம்மா ஷில்பா ஷெட்டி குந்த்ரா, வீட்டில் எளிய விஷயங்களை கைப்பற்றி,எப்படி தன் எடையை தொடர்ந்து பராமரிக்கிறார் என்பதை பகிர்ந்துகொள்கிறார்.

இளம் அம்மா ஷில்பா ஷெட்டி குந்த்ரா, வீட்டில் எளிய விஷயங்களை கைப்பற்றி,எப்படி  தன் எடையை தொடர்ந்து பராமரிக்கிறார் என்பதை பகிர்ந்துகொள்கிறார்.

ஷில்பா ஷெட்டி குந்த்ராவின் பெயர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒத்ததாக உள்ளது. தன் உடலை மிகச்சிறந்த முறையில் பராமரிக்கிறார். தனது சொந்த உடல்நலனையும்  , தனது குடும்பத்தினரிடம் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான செய்முறை குறிப்புகளும்,உடற்பயிற்சி ஆலோசனையும்  தன் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கிறார் .

இந்தியாவில் மிகவும் பிரபலமான உடற்கட்டு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் ஷில்பா.பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான ஆலோசனையை அவரிடம் கேட்டுகொள்கிறார்கள்.

எனவே, ரசிகர்களுக்கு உதவ, ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் பேஸ்புக்கில் நேரடி சந்திப்பை  ஒன்றை ஏற்பாடு செய்தார்,இதில் கொழுப்பு குறைப்பு,ஆரோக்கியமான உணவு பற்றிய மிக முக்கியமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.மிக முக்கியமாக,அவர் தன் உடலை மெலிதாக பராமரிப்பதற்கான இரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார்.

நல்ல உடல் ஆரோக்கியதிற்காக ஷில்பாவின் 5 பொன் மந்திரங்கள்

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், ஷில்பா தனது ஐந்து தங்க விதிகளை பகிர்ந்து கொண்டார்.

1.காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே சாப்பிடுங்கள்

காலை உணவை சாப்பிட உறுதிகொள்ளுங்கள். காலை 7.30 - 8 00 மணியளவில் என் காலை உணவை சாப்பிடுகிறேன். என் இரவு உணவு மாலை  7.30 மணியளவில்  முடித்துக்கொள்வேன்.

.7-8 மணி நேரம் தூங்கி உண்ணாமல் இருந்து, காலையில் சாப்பிடுவதுதான் "பிரேக்" " பாஸ்ட்". ஒரு உண்ணாவிரதத்தை உடைப்பதற்கு சமம்.நாள் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக ஆற்றலை அளிக்கவும் காலை உணவு உதவுகிறது. இதனால்தான் காலை உணவை நன்கு சாப்பிட வேண்டும்.

இரவு 7.30 க்கு முன் உணவை தினமும் முடிக்க வேண்டியது அவசியம். இரவு உணவை தாமதமாக உட்கொண்டு, முழு வயிற்றில் தூங்குவது

 உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் விஷயம்.ஆழ்ந்த தூக்கத்திற்கும்

செரிமானத்திற்கும்  உங்கள் உடலிற்கு நேரம் தேவை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

2.உங்கள் உணவில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்

நான் என் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்கிறேன். அதை வைத்துதான் காலையில் கொப்பளிக்கிறேன்.பாக்டீரியா, எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. உங்கள் குடலுக்குள் பாக்டீரியா செல்ல அனுமதிக்காமல், வாயிலே கொன்றுவிடும்.நோயெதிர்ப்பு அமைப்பை உறுதி செய்வதோடு, தேங்காய் எண்ணெய், சமையலுக்கும் நறுமணத்தை சேர்கிறது.

3.வாரத்திற்கு  மூன்று முறை உடற்பயிற்சி செய்யுங்கள்

இதுதான் நான் ஆரம்பித்த மூன்றாவது விஷயம்.நான் ஒரு வேலைக்கு போகும்  தாயாக இருப்பதால், நிறைய வேலை செய்யும் பெண்களும், ஆண்களும்  தனக்கென்ன நேரம் ஒதுக்கி கொள்வது  கடினமாக இருக்கும் என்பதை உணர்கிறேன்.அனால்,ஒரு வாரத்தின் மூன்று நாள் 45-50 நிமிடங்கள் உடற்பயிற்ச்சி செய்ய முயற்சிக்கிறேன்.

நான் எல்லா நாட்களும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அது கிடையாது.நான் சுவாசிப்பதில் கூட அதிகம் கவனம் செலுத்துவேன்.இது மனம் , உடல் மற்றும் ஆத்மாவை ஒழுங்குபடுத்துகிறது .வேகமாக ஓடும் இந்த வாழ்க்கையில், ஒரு நிமிடம் மூச்சை இழுத்து விட நேரம் ஒதுக்குவது அவசியம்.

4.சோடா மற்றும் குளிர்பானத்தை தவிர்க்கவும்

10 ஆண்டுகளுக்கு முன்னாலே, எனக்கோ அல்லதுஎன் பிரியமானவர்களுக்கோ குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்த்தேன்.இது என் வீட்டிலோ, அல்லது விருந்தினர்களுக்குகூட அறிமுகப்படுத்தியதில்லை .

இந்தியாவில், நிம்பு-பாணி, லஸ்ஸி மற்றும் மோர் ஆகியவற்றைப் பற்றி பெருமையாக பேசுகிறோம்..ஏனென்றால் அவை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.நீங்கள் குடிக்கும் குளிர்பானத்தில் பாஸ்போரிக் அமிலத்தை தவிர்த்து, புரதம் உள்ள இந்திய பானங்களை குடியுங்கள்.

நிறைய மக்கள், டயட் சோடா நல்லதென்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது கால்சியம் அளவைக் குறைத்து, செயற்கை இனிப்பான்களுடன் தயாரிக்கப்படுகிறது. எனவே தயவுசெய்து குழந்தைகள் அதை ஊக்குவிக்க வேண்டாம்.

5.உணவை மெல்லுங்கள்

க்கள் உணவை மென்று நான் பார்த்ததே இல்லை.மெல்லுவது என்னவென்றால்,  உணவைக் குடித்து, தண்ணீரை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம். உமிழ்நீர் உங்கள் வயிற்றுக்குச் செல்லும் ஒவ்வொரு பருக்கையிலும் கலக்க வேண்டும்.எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) அல்லது அல்சரேட்டிவ் பெருங்குடல்  போன்ற ஒவ்வாமைகள், உணவு போதிய அளவு உமிழ்நீர் இல்லை என்பதால் உணவை உடைக்க உடலுக்கு கடினமாக இருக்கும்.

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள 32 பற்கள்,  32 முறை உணவை மெல்லுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பது ஆயுர்வேத கருத்து.அதனால், குறைந்தபட்சம் 25 முறையாவது மெல்லுவதற்கு  தயாராக இருக்க வேண்டும்.

இந்த அழகான அம்மா, தன்னை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

" நான் 5  வாரத்தில் 32  கிலோ எடையை குறைத்தேன்"

அவர் ஐந்து வாரங்களுக்குள் 32 கிலோ எடையை குறைத்தார் என்று அவர் ரசிகர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டார்.உணவு மற்றும் உடற்பயிற்சியில்  கவனம் செலுத்தினால் ஒரு நபரால் எவ்வளவு எடையை குறைக்க முடியும் என்று கூறினார்.

" என் பிரசவத்திற்கு பின், நான் 30  கிலோ அதிகமாக எடை கூட்டினேன்.அனால் ஐந்தே வாரங்களில் அதை இழந்தேன்.என் மெட்டபாலிசம் மற்றவர்களிடமிருந்து வேறுபடலாம். இருந்தாலும், 21-28 நாட்களில் நன்கு சாப்பிட்டு சரியான உடற்பயிற்சி செய்தால், ஐந்து கிலோ எடையை குறைக்கலாம்."

வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு மூன்று  முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தினார்.

முழு உடல் உடற்பயிற்சி கவனம்
வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு மூன்று  வழிகள்

வயிற்றுப்பகுதி உடற்பயிற்சி மற்றும் செய்துகொண்டு, வயிற்று கொழுப்பை குறைக்க முடியாது.கால் பயிற்சி எடையை குறைக்க உதவும்.நவுகாசனா என்னும் யோகா பயிற்சி, வயிற்று கொழுப்பைக் குறைக்கும். 70 சதவிகிதம் உணவு 30 சதவிகிதம் உடற்பயிற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள், அதிக நார்ச்சத்து நிறைந்த  உணவை சாப்பிடுங்கள், இரவு 7.30 க்கு பிறகு சாப்பிடுவதை நிறுத்துங்கள். இது வீக்கம் மற்றும் நீர் தக்கவைப்பு ஆகியவற்றில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும்., உடல் வளர்ச்சி மேம்பட க்ரீன் டீ குடியுங்கள்.மூன்று முதல் ஐந்து முறை ஒரு நாளில், இரண்டு தின்பண்டங்கள் அடங்கும்.

நான் ஒரு மங்களூரியன்.நான் அரிசி சாப்பிடுவேன். அனால் அதை இரவில் சாப்பிடமாட்டேன்.அரிசியில் நார்ச்சத்து இருக்கிறது.நீங்கள் நன்கு சாப்பிட்டால், உங்கள் உடலால் நன்கு ஜீரணிக்க முடியும். இதற்காக நீங்கள் டயட்டை கொண்டு பயப்படவேண்டாம். உங்கள் உடலுக்கு என்ன தேவையோ அதை சாப்பிடுங்கள்.

வயது ஒரு எண்

வயதாக, உங்கள் உடல் பல மாற்றங்களுக்கு உட்படும்.நீங்கள் சாப்பிடுவது பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.நீங்கள் உட்கொள்ளும் உணவுதான்

உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.உங்கள் வாழ்க்கைமுறையை  மாற்றுங்கள்.தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து, யோகா பயிற்சி செய்யுங்கள். வயது ஒரு எண் மட்டும்தான் என்று நினைவில் கொள்ளுங்கள்.

நான் ஒரு ஆரோக்கியமான 41 வயதுள்ள பெண்.ஆரோக்கியம்

மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்கள்

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner