ஷில்பா ஷெட்டி குந்த்ராவின் சிறப்பு சம்மர் ஸ்மூத்தி ரெசிபி!

ஷில்பா ஷெட்டி குந்த்ராவின்  சிறப்பு  சம்மர் ஸ்மூத்தி ரெசிபி!

ஷில்பா, தொடர்ந்து தன் சேனலில் சுவாரஸ்யமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் ரெசிபியை வெளியிடுவார்.

உங்கள் கோடைகால தாகத்தை தணிக்க, ஷில்பா ஷெட்டி அற்புதமான ரெசிபிக்களை வெளியிட்டுள்ளார்.

அவரது யூடியூப் சேனலில், அத்தி மற்றும் வாழை ஸ்மூத்தி செய்யும் விடியோவை வெளியிட்டார். வீடியோ டுடோரியலில்,தனது சமையல் நுட்பத்தை பயன்படுத்தி சில நிமிடங்களில் எப்படி சுவைமிக்க ஸ்மூத்தி தயாரிப்பது என்பதை செய்து காட்டிருக்கிறார்.

ஷில்பாவின் அத்தி மற்றும் வாழை ஸ்மூத்தி செய்முறை

தேவையான பொருட்கள்

வாழை 1

அத்தி 2 (நீங்கள் உலர்ந்த அத்திப்பழங்களைப் பயன்படுத்தலாம்)

பாதாம் பால் - 1 கிளாஸ்

தேன் -1 தேக்கரண்டி

ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பிளெண்டரில், சில துணுக்கு ஐஸ் கியூபிகளுடன்  எல்லாத்தையும் சேர்த்து கலக்குங்கள். முடித்தபின், ஒரு கிளாசில் ஊற்றி பரிமாறுங்கள்.

ஷில்பாவின் " ஆரோக்கியம்- உற்சாகம்" கொள்கை

ஷில்பா, தொடர்ந்து தன் சேனலில் சுவாரஸ்யமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் ரெசிபியை வெளியிட்டு வருகிறார். தன் உடற்கட்டிற்கு பெயர்போன ஷில்பா, அவரது ஆரோக்கியமான உணவு ரெசிப்பிகளுக்கும் பெயர்போனவர்.அவோகேடோ அல்லது நட்ஸோடு தினமும் அவர் காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவார்.

ஐந்து வயது குழந்தைக்கு தாயாக இருப்பதால், குழதைகளுக்கு தேவையான  சத்தான சிற்றுண்டியின் பயன்களை நன்கு அறிவார்.ஒரு ஸ்மூத்தியை பிறேக்பாஸ்ட்டாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ அனைத்து வயதினராலும் சாப்பிடலாம்.இருந்தாலும், குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான உணவாக இருக்கக்கூடும்.

சில ஆளி ​​விதைகளை அரைப்பதின் மூலம் , குழந்தைகளால் தெரியாமல் தங்கள் உணவில் சேர்த்துவிடலாம். இதே தந்திரத்தை பயன்படுத்தி, அவர்கள் ஸ்மூத்தியில் நட்ஸ் சேர்த்துவிடலாம்.

நீங்கள் கிச்சனுக்கு சென்று ஸ்மூத்தி செய்வதற்குமுன், ஷில்பாவின் ஸ்மூத்தியின் ஊட்டச்சத்தை மதிப்பிட்டு பார்க்கலாம்.

ஏன் ஸ்மூத்தி ஆரோக்கியமானது?

சாறு போலல்லாமல், பழம் மற்றும் காய்களிகளின் நார்ச்சத்தும் இதில் சேர்க்கப்படும்.இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்களின் ஊக்கத்துடன் உடனடி சக்தியை அளிக்கிறது

தோல், பால் மற்றும் தாயில் சேர்த்து கலப்பதால் , செரிமான அமைப்பை சீராக்கி உடம்பில் கால்சியமும் சேர்கிறது.சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்ப்பதால்,அதிக  கலோரிகளை .தவிர்க்கலாம்

வாழையின்  நன்மைகள்

வாழை, வைட்டமின்கள் B6 மற்றும் சி நிறைந்தது.பொட்டாசியம், மாங்கனீசு, ஃபைபர் மற்றும் புரதம் நிறைந்தது.வலுவான எலும்புகள் மற்றும் நல்ல கண்பார்வை உருவாக்க உதவுவதால், குழந்தைகளுக்கு முக்கியமாக பரிந்துரைக்க படுகிறது.வாழை, இரத்த சோகை  ஏற்படாமல் தடுக்கிறது.
ஷில்பா ஷெட்டி குந்த்ராவின்  சிறப்பு  சம்மர் ஸ்மூத்தி ரெசிபி!

அத்தியின் நன்மைகள்

செரிமானத்திற்கு உதவுவதற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கும், அத்திப்பழங்கள் அதிகமாக உதவுகின்றன.அத்தியை அடித்து பசைபோல் ஆக்கினால், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்தை குழந்தைகளுக்கு அளிக்கும்.வளர்ந்த குழந்தைகள் இதை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

ஆளி விதை நன்மைகள்

ஆளி விதை, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டது. ஆளி விதைகள் ஒரு குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன.புரதம் மற்றும்  ஃபைபர் நிறைந்தது.சலாடுடன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அல்லது, ஸ்மூத்தி/ சூப்பில் சேர்த்து கொள்ளலாம்.

தேன் நன்மைக

ள்பொட்டுலிசம் தவிர்க்க,ஒரு வயது ஆன குழந்தைக்கு அவசியம் தேன் சேர்க்க வேண்டும்.அத்தியாவசிய கனிமங்களை வழங்குவதன் மூலம் வளர்ந்த குழந்தைகளுக்கு, இருமல் போக்க உதவுகிறது.காயங்களை விரைவாக  குணப்படுத்துகிறது.குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரை வகைகளை உள்ளடக்குகிறது .

அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது.பேன்கேக் மற்றும் சீரியல்களில் சேர்ப்பது மூலம் குழந்தையின் சாப்பாட்டில் ஹனி சேர்த்துக்கொள்ளலாம்.

பாதாம் பால்

இதில்  கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளன. இது லாக்டோஸ் சகிப்புத் தன்மை இல்லாத குழந்தைகளுக்கு குறிப்பாகப் பொருந்தும்.

Source: theindusparent

Written by

theIndusparent