ருசியான மாங்காய் சமையல் குறிப்புகள்

ருசியான மாங்காய் சமையல் குறிப்புகள்

மாங்காய்கள்! கூடை நிறைய பறித்து, சுவையான மாங்காய் கொண்ட உணவை தயாரித்து மகிழுங்கள்!

raw mango

மாங்காய், கோடைக்காலத்தின் மிக பெரிய வரபிராசதமாக இருப்பதில் சந்தேகமே இல்லை.எனவே இந்த கோடை பருவத்தில் இதன் பலனை அனுபவிக்க, சுவையான மாங்காய் ஊறுகாய் செய்து மகிழுங்கள்!

உடனடி மாங்காய் ஊறுகாய் Mango Pickle

இந்த உணவுவகை  தென்னிந்திய சிறப்பு.தயிர்சாதத்துடன் இந்த ஊறுகாயை பரிமாறுங்கள்.
raw mango

Ingredients

தேவையான பொருட்கள்

 • 1 கப் நறுக்கப்பட்ட மாங்காய்
 • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
 • 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • கருவேப்பிலை (விருப்பமானது)
 • உப்பு

செய்முறை

நறுக்கப்பட்ட மாங்காய் துண்டுகளில் உப்பு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்குங்கள்.அதில் கடுகு விதைகள் சேர்க்கவும்.கடுகு வெடித்தவுடன்  மிளகாய் தூள், கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும்.சுமார் 10 விநாடிகளுக்கு காலரா பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

நறுக்கப்பட்ட மாங்காயை கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

உதவிக்குறிப்பு: குளிர்சாதன பெட்டியில் ஒரு உலர் ஜரில் ஊறுகாயை போட்டு வைக்கவும், ஒரு வாரத்திற்குள் சாப்பிடுங்கள்.

கைரிவாலி பிண்டி ( வெண்டைக்காயுடன் மாங்காய்)

சரியான வழியில் சமைத்தால், வெண்டைக்காயும் மிகவும் ருசியான காய்கறிகளில் ஒன்றாகும்.இந்த சாதாரண காய்க்கு கொஞ்சம் மாங்காயை சேர்த்து புதுப்பித்து பாருங்கள்.
raw mango bhindi

தேவையான பொருட்கள்

 • 500 கிராம் வெண்டைக்காய், மெலிதாக வெட்டப்பட்டது
 • 1 மாங்காய் : தோல் சீவப்பட்டு, கோட்டை எடுக்கப்பட்டு, மெலிதாக வெட்டியா மாங்காய்
 • 1/2 தேக்கரண்டி  பெருஞ்சீரகம்
 • 1/2 தேக்கரண்டி கருஞ்சீரகம்
 • 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட இஞ்சி
 • 2 நறுக்கப்பட்ட வெங்காயம்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • எலுமிச்சை சாறு சில துளிகள்
 • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 • உப்பு
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 3 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். வெண்டைக்காய் மிருதுவாகும்வரை வறுக்கவும்.

அதே அடுக்கில்,இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெயுடன் நறுக்கிய மாங்காயையும் சக்கரையும் சேர்த்துக்கொள்ளவும்.இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறவும்.

அதே அடுப்பில், மூன்றாவது தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொண்டு கொஞ்சம் சோம்பும் கருஞ்சீரகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இரண்டும் வெடித்தபின்,நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

இப்போது கொத்தமல்லி, மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்.இறுதியாக வறுத்த வெண்டைக்காய்,மாங்காய்,உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.

நன்கு களரி முடித்த பின், அடுப்பை அணைத்துவிடவும்.பின், , எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

உதவிக்குறிப்பு: கூடுதல் சுவைக்காக, 1/2 டீஸ்பூன் கரம்  மசாலாவை சேர்த்து கொள்ளலாம்

பர்டோலி கி கிச்சடிBardoli ki Kichdi

இந்த பிரபலமான குஜராத்தி  உணவில், பல வகையான மாங்காய் சுவைகளை நமக்கு அறிமுக படுத்துகிறது.இதை நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும்.
raw mango khichdi

தேவையான பொருட்கள்

 • 2 கப் அரிசி
 • 1 1/2 கப் துவரம் பருப்பு
 • 1 கப் பட்டாணி
 • 3 உருளைக்கிழங்கு,நறுக்கப்பட்டது
 • 2 வெங்காயம், நறுக்கப்பட்டது
 • 3 பிரித்தெடுத்த பச்சை மிளகாய்
 • 1  மாங்காய், பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • 2 டீஸ்பூன் நெய்
 • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 • உப்பு
 • கொத்தமல்லி

செய்முறை

பெரிய கடாயில் நெய் 1 டீஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். இதில் சீரகம் சேர்த்துக்கொள்ளவும். சீரகம் வெடித்தபின், பொடித்த வெங்காயமும் இஞ்சியும் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாகும்வரை     வாணலியிலிட்டு வாட்டவும்.

இப்போது மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து, நெய் மசாலாவை விட்டு பிரியும்வரை காத்திருக்கவும்.

இப்பொழுது வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு, கழுவப்பட்ட அரிசி கழுவப்பட்ட துவரம் பருப்புடன் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறவும்.

கீரை, பச்சை பட்டாணி, சர்க்கரை மற்றும் உப்பு சுவைக்கு ஒரு சிட்டிகை சேர்க்கவும். பிறகு மாங்காய் சேர்த்து  நன்றாக கலக்கவும்..

இப்போது நான்கு கப் தண்ணீரை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.கடாயை   20-25 நிமிடங்கள்,அரிசி வேகும்வரை   மூடி வைக்கவும்.

கொத்தமல்லி மற்றும் ஒரு தேக்கரண்டி நெய்யுடன் பரிமாறவும்.

குறிப்பு:கிச்சடியின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க, ஐந்தாவது ஸ்டெப்பில் பச்சை பயிரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் சுவையான மாங்காய் குறிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் Continue Reading

கோவன் இறால் கறி வித் மாங்காய் Goan Prawn

மாங்காயின் சுவைமிக்க புளிப்பு, இந்த பிரபலமான கோவா டிஷ்ஷின் மதிப்பை உயர்ந்த நிலைக்கு எழுப்புகிறது.
raw mango goan prawn

தேவையான பொருட்கள்

 • 20-25 இறால்கள். நடுத்தர உருவளவு, உரிக்கப்பட்டvai
 • 1 நறுக்கப்பட்ட வெங்காயம்
 • 2 கப் தேங்காய் துருவல்
 • 1 டீஸ்பூன் கொத்தமல்லி
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 5 முழு சிவப்பு மிளகாய்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • புளி, சிறிய உருண்டை
 • 1  வெட்டப்பட்ட மாங்காய்
 • உப்பு
 • 2 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை

1இறால்களுக்கு உப்பு தடவி, தனியாக வைக்கவும்

2சுமார் 10 நிமிடங்களுக்கு,  சூடான தண்ணீரில் புளித்தொகியை ஊற வைத்து பிழியுங்கள்

சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம், மஞ்சள், மிளகு,தேங்காய் துருவல் , பிழியப்பட்ட புளி என்று எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு அரைக்கவும்

நான் - ஸ்டிக் கடாயில் எண்ணெயை கொதிக்க வைத்து, வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும்வரை வானிலையில் வாட்டவும், இப்பொழுது அரைத்த மசாலா கலவையை சேர்த்து 2  நிமிடங்கள் கிளறவும்.

பின்னர்,  மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து, அதனுடன் 5-7 நிமிடங்கள் நடுத்தர வெப்பத்தில் கொதிக்க விடவும்.

இப்பொழுது உப்பு தடவிய இறாலை சேர்க்கவும். இறால் முழுமையாக வேகும்வரை கலக்கவும். வேகவைத்த சாதத்துடன்பரிமாறவும்.

குறிப்பு:  சுவையை மேலும் கூட்ட  இறால்களின் தலைகளை சேர்க்கவும்.

மாங்காய் பகோடா Mango Pakoda

இந்த சுவைமிக்க மாங்காய் பகோடா , மாலை தேநீருக்கு சிறப்பான உடன்போதல்.
raw mango pakodas

தேவையான பொருட்கள்

 • 1/2 கப் நறுக்கப்பட்ட மாங்காய்
 • 3/4 கப் கடலை மாவு
 • 1 கப் அரிசி மாவு
 • 1/2 கப் வெங்காயம்
 • 1/2 கப் துண்டாக்கப்பட்ட ஸ்ப்ரிங் ஆணியன்ஸ்
 • 1/4 கப் வெட்டப்பட்ட கொத்தமல்லி  
 • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
 • 1 டீஸ்பூன் புதினா இலைகள்
 • 1 தேக்கரண்டி துருவிய  இஞ்சி
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1  வெட்டப்பட்ட பச்சை மிளகாய்,
 • 1/4 டீஸ்பூன் ஓமம்
 • சமையல் சோடா ஒரு சிட்டிகை
 • எண்ணெய்
 • உப்பு

செய்முறை

அனைத்து பொருட்களையும்  கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பசை பதம் வரும்வரை  கலக்கவும்.

கடாயில் எண்ணெயை கொதிக்கவைத்து, பாக்கோடாவை பொன்னிற பழுப்பாக மாறும்வரை  வறுக்கவும்.

புளி சட்னி அல்லது புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.

உதவிக்குறிப்பு: பகோடாமாவு தண்ணியாக இருந்தால், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும்.

ஆந்திர மாங்காய் ரசம் Andra Rasam

மனம் குணம் கொண்ட ஆந்திர மாங்காய் ரசத்தை சுவைத்து மகத்தான திருப்தியை உணருங்கள்.
raw mango rasam

தேவையான பொருட்கள்

 • 1  மாங்காய்
 • 2 டீஸ்பூன் ரசம் பவுடர்
 • 2 சிவப்பு மிளகாய்
 • 1 நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
 • 4 நசுக்கிய பூண்டு பற்கள்
 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • ஒரு சிட்டிகை பெருங்காயம்
 • துண்டாக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள்
 • 4 டீஸ்பூன் துவரம் பருப்பு
 • உப்பு

1  மாங்காயை கழுவி தோல் சீவி வைக்கவும்.இரண்டு முதல் மூன்று விசில்கள் வரும்வரை பிரஷர்  குக்கரில் வைக்கவும். நீராவி அடங்கியவுடன்,மூடியை அகற்றி மாம்பழ துண்டுகளை  சேர்க்கவும்

2 ஒரு சட்டியில்,  வேகவைத்த  துவரம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், ரஸம் தூள், உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.ம் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலந்து அதை கொதிக்கவையுங்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து, சுடரை  அணைதிடுங்கள்

3  சுவையை மேலும் மெருகேற்ற கடுகு, மிளகாய், நறுக்கிய பூண்டு, கறி இலை, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.கொத்தமல்லி இளைத்தல் சேர்த்து அழகு படுத்தவும்.

குறிப்பு: மிளகாய்களைத் தவிர்த்து, சிறு வெல்லம் சேர்த்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

இனிப்பு மற்றும் புளிப்பான மாங்காய் சட்னி Mango Chutney

சப்புகொட்டும் சுவைமிக்க சட்னியை செய்து பதப்படுத்தினால், எப்பொழுது வேண்டுமானாலும் சுவைக்கலாம்.
raw mango

தேவையான பொருட்கள்

 • 4 நடுத்தர அளவிலான மாங்காய்கள்
 • 4 கப் சர்க்கரை அல்லது 3 கப் வெல்லம்
 • 1  பீஸ் நட்சத்திர சோம்பு
 • 1  பீஸ் இலவங்கப்பட்டை
 • 1/2 தேக்கரண்டி உப்பு

செய்முறை

மாங்காய்களை சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக வெட்டுங்கள். 4  விசில் வரும்வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவுக்கும்.

நீராவி முடிக்கப்பட்டு, மாங்காய்கள்  குளிர்ச்சியடைந்தவுடன், சின்னதாக வெட்டி அதன் கூழை ஒரு பாத்திரத்தில் பிழிந்து எடுக்கவும்

அதே பாத்திரத்தில் சர்க்கரை / வெல்லம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மற்றும் நட்சத்திரசோம்பு ஆகியவற்றை  சேர்க்கவும்.கலவையை தடிமனாகும்  வரை கலக்கவும்.

கலவையை முழுமையாகக் குளிர்விக்கும் வரை காத்திருக்கவும். இந்த சட்னி ஒரு உலர் கண்ணாடி ஜாடியில் பதப்படுத்தி பிரிட்ஜில் வைக்கவும்.

உதவிக்குறிப்பு: சட்னிக்கு  சிறிது இஞ்சி சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

Source: theindusparent

Written by

theIndusparent