ரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு

ரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு

1995 -இல் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்த ரவீணா டாண்டன், தத்தெடுப்பதில் உள்ள ஆத்ம திருப்தி வாடகைதாய் மூலம் வராது என்கிறார்.

'மஸ்ட்  மஸ்ட் " என்ற ஹிந்தி பாடலின் மூலம் பிரபலமான ரவீணா டாண்டன், தான் முதலில் ஒரு அன்பான தாய்தான்  என்று நிரூபித்திருக்கிறார். மாத்ர் என்கிற படம் மூலம் திரையுலகிற்கு திரும்பும் ரவீணா, 12வருடங்களுக்கு   முன் தன இரு மகள்களையும் தத்தெடுத்தார்.

இந்த அன்புத்தாய்க்கு வாழ்க்கை ஒரு முழூ சுழற்சியில் சென்றுகொண்டிருக்கிறது.

தன் இரு மகள்களுக்கும் நல்ல வாழ்க்கையை தர உறுதியளித்தார்

என்றும் இளமையாக இருக்கும் ரவீணா , தன் 21  வயதிலே இரண்டு பெண் குழந்தைகளை  தத்தெடுத்தார்.

//platform.instagram.com/en_US/embeds.js
தனது திருமணதிற்கு முன் தத்தெடுக்கும் முடிவைபற்றி ஒரு பேட்டியில் " நான் எப்படி சமாளிப்பேன் என்று ஆழ்ந்து யோசித்ததில்லை.ஆனால், என்னால் இரு குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுது அவர்களை நினைத்து நான் பெருமை அடைகிறேன் . இதெல்லாம் என் குடும்பத்தினரால்தான் சாத்தியமானது. நான் படப்பிடிப்பிற்கு ஓடிக்கொண்டிருக்கும்பொழுது, என் குடும்பம்தான் என் குழந்தைகளை பார்த்துக்கொண்டது" என்கிறார் ரவீணா.

தன் குழந்தைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த ரவீணாவிற்கு வாடகைத்தாய் மூலம் குழந்தைபெறுவதில் இஷ்டமில்லை.நான்கு குழந்தைக்கு தாயான இவர் ( பூஜா, ஆஷா,ரஷா ,ரன்பீர்) ஏன்  மக்கள் தத்தெடுக்கவேண்டும் என்பதைப்பற்றி விளக்கியுள்ளார்.

" தத்தெடுப்பதே மேல்!"

"பெற்றோராக விரும்பும் அனைவரும், தத்தெடுப்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.தத்தெடுப்பதனால் ஒருவரை உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக்கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது" என்கிறார் ரவீணா

//platform.instagram.com/en_US/embeds.js

பூஜாவையும் சாயாவையும் அவர்கள் 11 மற்றும் 8  வயதில்  தத்தெடுத்து வளர்த்ததால், அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றினார் ரவீணா.

"இதில் மகிழ்ச்சியை தேடுவது உங்கள் சுயநல தேவையாக இருக்கலாம். அனால் என் இரு மகள்களை இப்பொழுது பார்க்கும்பொழுது, நான் பெருமையாக உணர்கிறேன். நீங்கள் ஒரு குழந்தையை  சொந்தமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தத்தெடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தை அளவிட முடியாது"என்று அவர் கூறினார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுதல், கரண் ஜோஹர், துஷார் கபூர், அமீர் கான் மற்றும் ஷாருக்கான் போன்ற பல பெற்றோரின் வாழ்க்கையை மாற்றினாலும், இது பிரபலங்களுக்கான  ஒரு நவநாகரிக போக்காகவே மாறிவிட்டது .

புதிய வாடகைத்தாய் சட்டத்தினால், இதை சாதாரண மக்களால் எளிதில் இந்த முறையை பயன்படுத்த முடியாது. பிரபலங்களுக்கான ஒரு பிரத்தியேக முறையாக மாறிவிட்டது.

சாதாரண மக்களுக்கு "வாடகைத்தாய்" முறை எளிதல்ல

 

A post shared by BOLLYHOLICS (@bollyholics__) on Mar 29, 2017 at 12:44pm PDT

//platform.instagram.com/en_US/embeds.js
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டம், சமீபத்தில் மசோதாவில் தாக்கல்செய்யப்பட்டது.இதற்கு மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும், சாதாரண மக்களிடமிருந்து கலவையான எதிர்வினை எழும்பியது. புதிய விதிகளின் படி,குழந்தையில்லா தம்பதிகளுக்கு , சில திடுக்கிடும்  உள்ளடக்கல்களும், கடுமையான விதிமுறைகளும் உள்ளன.

  • ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருமணமான குழந்தையில்லா தம்பதியினர்மட்டும் "ஆல்டருஸ்டிக் சுரரோகசி" என்ற முறையை பயன்படுத்தலாம் .தங்கள் உறவினர் ஒருவரை வாடகைத்தாயாக தேர்வு செய்யலாம் .
  • "விவாகரத்து வெளிநாடுகளில் மிகவும் பொதுவானவை" என்பதால் வெளிநாட்டவர்கள், NRI மற்றும் வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கு,வாடகைத்தாய்  தேர்வு செய்ய தடை விதிக்கபட்டிருக்கிறது.
  • திருமணமாகாத ஜோடிகள்,  ஒற்றை பெற்றோர்கள் மற்றும் ஓரின ஜோடிகளுக்கும் வாடகைத்தாய்  தேர்வு செய்ய தடை விதிக்கபட்டிருக்கிறது.

Source: theindusparent

Written by

theIndusparent