யோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

பிரசவத்திற்கு பிறகு, யோனி தையல் வலிமிகுந்ததுக்காக இருக்கும்.அதை வேகமாக குணப்படுத்த உதவும் இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்க.

பிரசவத்திற்குப் பிறகு யோனி தைலங்களை எப்படி குணப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

பெரும்பாலான  சுகப்பிரசவங்களில், பெரினியல் பகுதியில் கிழியல் ஏற்படும்.இதற்காக 7 முதல் 15 நாட்களுக்குள் பொதுவாக குணப்படுத்துவதற்கான தையல் தேவைப்படுகிறது. ஆனால் சில பெண்களுக்கு, மீட்புக்கான பாதை மிகவும் வேதனையாகவும் வலிமிகுந்ததாகவும்  இருக்கும்.

பிரசவத்திற்கு  பிறகும் வலிமிகுந்த யோனி தையல்கள் அன்றாட செயல்பாடுகளைகூட கடினமாக்க  முடியும்.வீக்கம், தொற்று அல்லது தையல் பிரிதல், புதிய தாய்மாருக்கு மேலும் அசௌகரியம் மற்றும் வலியை அதிகரிக்க முடியும்.

குணமடைதல் விரைவுபெற. சுகாதாரக் குறிக்கோளை வைத்திருப்பது முக்கியம். " தையல் பிரிதல் மற்றும் யோனி நோய்த்தொற்றுகள் வலியை மோசமாக்கும்"  என்று டாக்டர் பாபியா கோஸ்வாமி முகர்ஜி, பெண்ணியல் மருத்துவ ஆலோசகர் குமார் கிளினிக், மும்பை கூறுகிறார்.

அனுபவமுள்ள தாய்மாரிடமிருந்து சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் வேதனைகளை கடந்து செல்ல இந்த குறிப்புகளை பின்பற்றுவதுதான் நல்லது.

1. சிட்ஸ் பாத்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

யோனி தையல்கள் விரைவாக குணமடைய சிட்ஸ் குளியல் அவசியம்.சில துளி கிருமிநாசினியை ஒரு வெந்நீர் தொட்டியில் சேர்த்து,ஒரு நாளைக்கு இரண்டு முறை அந்த தொட்டியில் அமரவேண்டும்.இது கிருமிகளை மட்டும் நீக்காமல்,யோனியை சுற்றியுள்ள வலியையும் குறைக்கும்.

" சூடான நீரில் பெடடின் சொலுஷயோனை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்"என்கிறார் டாக்டர் கஸ்தூரி சர்வோதம்,பெர்னாண்டஸ் மருத்துவமனை , மகளிர்மருத்துவர்,ஹைதராபாத்,. எனினும்,அந்த  பகுதியை எதைக்கொண்டும் தேய்க்காமல் உலர விடுங்கள்.

2. ஒரு ஊதப்பட்ட வளையத்தில் உட்காருங்கள் Rubber Float

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

ஊதப்பட்ட வளையத்தில் அமர்வதால்  ஒரு ரப்பர் வாத்து போல் உணரலாம்.ஆனால் இதை கண்டெல்லாம் பயப்படலாமா? இந்த ரப்பர் வளையம் " அந்த"பகுதியை மெருகூட்டுவதோடு, தையல்களுக்கு அழுத்தத்தை சேர்க்காது. புது அம்மக்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கும்

3. சோப்புக்கு நோ சொல்லுங்கள்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

ஒரு சோப்பை பயன்படுத்தி அந்த பகுதியை சுத்தம் செய்யலாமா? நிபுணர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் . சூடான தண்ணீர், அந்த பகுதியை  சுத்தமாக வைக்க போதுமானது.மாறாக, சோப்புகள் எரிச்சலூட்டும் ; சிறுநீரகத்தில் வலியை ஏற்படுத்தும்.

4. வெந்நீர் மற்றும் குளிர் ஒத்தடம்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

வெப்பம் வலிக்கு நிவாரணம் தரும். வெந்நீர் பையை மென்மையான துணியை பயன்படுத்தி அந்த இடத்தில ஒத்தடம் கொடுங்கள்.உங்களுக்கு சூடு ஆகாதென்றால், வெந்நீருக்கு பதில் குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்.  தன் பிரசவத்திற்கு பிறகு குளிர்ந்த முட்டைக்கோசு இலைகள் மீது அமர்ந்ததாக ஒரு வாசகி எங்களிடம்  பகிர்ந்துகொண்டார்.

5.சுத்தம் செய்ய வெந்நீரை பயன்படுத்தவும்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

சில பெண்கள், தைக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி எரிச்சல் அடைவதாக புகார் செய்கின்றனர். வலியை எளிதாக்குவதற்கு, சிறுநீர் கழிக்கும்போது கறுவாயில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை ஊற்றுங்கள்.சிறுநீர் கழிக்கும்போது, கொஞ்சம் குனிவது வலியை பொறுத்துக்கொள்ள

உதவும்.

6. இடுப்பு பயிற்சிகள்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

இடுப்பு பயிற்சிகள்  மற்றும் கேகில்ஸ் டெலிவரிக்குப் பிறகு நன்கு உதவும்.இது சாத்தியமற்றதாக தோன்றலாம் .ஆனால்  கேகில்ஸ்பயிற்சிகள், யோனி பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

7. யோனி பகுதியை கவனித்துக்கொள்ளுங்கள்

யோனி தையல் குணமடைய  அற்புதமான சிகிச்சைகள்

பிரசவத்திற்குப் பிறகு விரைவில் எழுந்து வேலை பார்க்க ஆசைப்படுவதெல்லாம் நியாயம்தான்.ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலை தேவை இல்லாமல் அசைக்கக்கூடாது. " இறுக்கமான உள்ளாடைகளை அணிவது அல்லது கடுமையாக தேய்ப்பது, யோனி பகுதியில் உள்ள தையலை திறந்துவிடும்.பிறகு இது  குணமடைவது  தாமதப்படுத்தும்"என்கிறார் டாக்டர் முகர்ஜி.

உங்கள் மருத்துவர் தையல்களுக்கு ஒரு ஆண்டிசெப்டிக் கிரீம் பரிந்துரை செய்திருந்தால், அதை தொடர்ந்து பயன்படுத்துங்கள். பெரும்பாலான யோனி தைலங்கள் 2-3 வாரங்களுக்குள் குணமடைந்திட வேண்டும்.வலி, வீக்கம் அல்லது புணர்புழையில் துர்நாற்றமான வெளியேற்றம் போன்ற பிரச்னை இருந்தால்,உடனடியாக ஒரு டாக்டரை அணுகுங்கள்.

Source: www.theindusparent.com

Written by

theIndusparent