யாரும் சொல்லாத வாசிலினின் 7 ஆச்சரிய பயன்கள்

யாரும் சொல்லாத வாசிலினின் 7 ஆச்சரிய பயன்கள்

இதோ வாசிலின் தரும் 7 நன்மைகள்

இனி பனிவெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்பிற்கு மற்றுமே வாசிலின் பயன்படுத்த தேவை இல்லை.வாசிலின் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் ஒரு பிரதான பொருள்.இதற்கு பல வியப்பான நன்மைகள் உண்டு. உங்கள் மற்ற அழகு சாதனங்களை காட்டிலும் மிக மலிவானது.

இதோ வாசிலின் தரும் 7 நன்மைகள்

டயப்பர் வெடிப்பு

உங்கள் குழந்தையின் டயபர் வெடிப்பை ஆற்ற எல்லா முயற்சியும்  செய்து இருந்தால்,இறுதியாக வாசிலின் பயன்படுத்திய பாருங்கள். அதன் மாயம் வெடிப்பை குணப்படுத்தவதோடு நிக்காமல், வேறு வெடிப்பு வராமல் பாதுகாக்கும்.

Diaper rash

நான் சந்தையில் அனைத்து கிரீம்கள் முயற்சித்த பின்பு இந்த மந்திரப்பொருளை பற்றி தெரிய வந்தது. என் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு வாசிலின் மிகச்சிறந்தது. இந்த பெட்ரோலியம் ஜெல்லி குழந்தையின் சருமத்தை பாதுகாத்துக்கும். மற்ற கிரீம்களை போல் இல்லாமல், இதனால் எந்த வித உறுத்தலும் ஏற்படாது.

வண்ணம் பாதுகாக்கும்

பல இந்திய பெண்களைப்போல போல் வீட்டிலே உங்கள் முடிக்கு  சாயம் பூச விரும்புவாரா? குறிப்பாக நெற்றியில் ஏற்பட்ட கரையை போக்குவது  எவ்வளவு கடினம் என்று எங்களுக்கு தெரியும்.அது  மோசமாக காணப்பட்டாலும், அதை பற்றி  கேட்டு பலர் உங்களை இக்கட்டான நிலைமையில் உள்ளாக்குவார்கள்.

கவலை வேண்டாம்! இதற்கு எங்களிடம் எளிதான தீர்வு இருக்கிறது. உங்கள் முடிக்கு சாயம் பூசும்பொழுது, ஒரு  சிறிய அளவு வசீலினை நெற்றியில், நெற்றிப்பொட்டில், பின்கழுத்து மற்றும் காதிற்கு பின் தடவவும். பிறகு, பஞ்சின் உதவியுடன் வசீலினை துடைத்து எடுக்கவும். உங்கள் சருமம் கறைபடாமல் பளபளவென்று இருக்கும்.

பளபளப்பான நகங்கள்

உங்கள் நகங்கள் மந்தமான மற்றும்  கடினமாக இருந்தால்,வாசிலின்  உங்கள் துயரங்களையும் தீர்க்க உதவும். அதை மூன்று நான்கு முறை தடவதேவையில்லை. உறங்க போவதற்கு முன்னால், உங்கள் நகங்கள் மற்றும் க்யூட்டிகிள்ஸ் மீது வாசிலின் தாராளமாக தடவவும். மறுநாள் காலை எழும்பொழுது, பளபளப்பான நகங்களை பார்த்து மகிழுங்கள்.

மூக்கு புண் ஆற்ற உதவும்

உங்கள் குழந்தையின் சளி காரணமாக மூக்கில் புண் ஏற்பட்டால், மூக்கிலும் மூக்கை சுற்றி வாசிலின் தடவுங்கள். புண் ஆறி அதனுடன் தொறப்புடைய வலியையும் குணப்படுத்தும்.

உலர்ந்த சருமத்திற்கு ஊட்டமளிக்கும்

இந்த வைத்தியம் பற்றி உங்கள் தாய் உங்களிடம் சொல்லிருப்பார். குதிகால் வெடிப்பை மற்றும் ஆற்றாமல், வாசிலின்,உங்கள் உலர்ந்த சர்மத்திரும் ஊட்டமளிக்கும். உங்கள் குழந்தையின் சுறுசுறுப்பான முழங்காலுக்கும் முழங்கைக்கும் தேய்த்தால், சருமம் மிருதுவாக்கி பராமரிக்கும்.

உறங்க போவதற்கு முன்னால் உங்கள் குழந்தையின்  முழங்காலுக்கும் முழங்கைக்கும் பூசி விடுங்கள். காலையில் நீருடன் கழுவவும்.

feet

விலையுயர்ந்த தோல் பொருட்களை பளபளக்கும்

உங்கள் விலையுயர்ந்த தோல் காலனி மற்றும் பைகளை புதியது போல் பிரகாசிக்க செய்யும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், தோலின் தூசி  துடைத்து , சிறிய அளவு வாசிலின் தடவவும்.ஒரு மென்மையான பஞ்சு துணியால் வாசிலினை துடைக்கவும்.உங்களது பையும் காலணியும் புதியதுபோல் மின்னும்!

காலனி கடிகளை தடுக்க உதவும்

நீங்கள் புது காலணிகளை அணியும்போதெல்லாம் கடித்தால், இதோ உங்கள் வலிக்கான மாய நிவாரணம்! வாசிலினால் உங்கள் கால்களின் ஈரப்பதத்தை மூட்டினால், இனி கடிகளுக்கெல்லாம் குட்பை சொல்லிவிடலாம்!  
Source: theindusparent

Written by

theIndusparent