மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு பாராட்டுரை

lead image

இந்த வருடம் வரவிருக்கும் அனைத்து மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் இந்த அற்புதமான குடும்பத்திற்கு வாழ்த்துகிறோம்!

இனிய ஐந்து – ஆண்டு திருமண நாள்  வாழ்த்துக்கள் ! மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான்!

மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா இந்த வார இறுதியில், மே 20 அன்று மகிழ்ச்சியுடன் 5 வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்கள்.நகரும் பேஸ்புக் இடுகையில், இந்த அன்பு கணவர் திருமண நிகழ்ச்சியைக் குறிக்கும் வேடிக்கையான நிகழ்வுகளை மீண்டும் பார்த்தார்.

src=https://sg.theasianparent.com/wp content/uploads/2017/05/rsz zuckerberg first bday.jpg மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு  பாராட்டுரை

Mark and Priscilla celebrating their daughter’s first birthday. (Image Credit: Mark Zuckerberg/ Facebook)

இந்த காதல் ஜோடி  எப்படித்  தங்கள் திருமணத்தை ரகசியமாக முடித்தார் என்பதை பற்றி விவரித்தார் .பிரிசில்லாவின் மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பை கொண்டாடும் பார்ட்டி என்ற பெயரில் விருந்தினர்களை அழைத்தார்கள் .பின்னர் அனைவரையும்  ஆச்சரியத்தில்  மூழ்கினார் !

ஆனால், வாழ்க்கை அவர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தை தந்தது.அவரது திருமண நாள், பேஸ்புக் 2012 ல் பொதுமக்களிடம்  சென்ற அடுத்த நாள் முடிவானது.ஏனென்றால், பேஸ்புக்கின் CFO – விற்கு இந்த திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாது.

இந்த தவறான திட்டமிடுதலால்,ரோமில் தங்கள்  ஹனிமூனை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . அன்று ஜுக்கர்பெர்க் , பிரிசில்லாவிற்கு சத்தியம் செய்தார். இனி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஹனிமூன் செல்ல உறுதி எடுத்தார்.இந்த ஆண்டு திருமண கொண்டாட்டமாக, கிராமப்புற மயினில் செலவிட திட்டமிட்டுள்ளார்கள்.திருமண ஜோடி இலக்குகள் இதுபோல்தான் இருக்கவேண்டும்.

இதோ அவர் மனைவிக்கு எழுதிய அழகிய காதல் மடல்:

ஒரு ஐந்து ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகும் இருவருக்குள் உண்டான காதல் குறையவில்லை.இந்த இளம் பில்லியனர் இன்னும் தன் மனைவியுடன் ஆழ்ந்த காதலில் இருக்கிறார்.

இந்த தற்செயலான திருமண நிகழ்வை மார்க் வேடிக்கையாக கையாண்டதின் மூலம் இந்த தம்பதியினர்  தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி பிரித்துக்கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். மார்க் மற்றும் பிரிசில்லா ஒரு நல்ல தம்பதியினருக்கு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். ஏகப்பட்ட வேலை பளு மற்றும் பொறுப்பு இருந்தபோதிலும்,அவர்கள் பந்தம் திட்டமாகவே இருக்கும். நாம் பொறாமையுடன் பார்க்காமல் இருந்தால் இந்நேரம் குறிப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருப்போம்.

இந்த நட்சத்திரஜோடியின் கடந்தகால ஆல்பம் இதோ!

இந்த ஜோடியின் காதல் கல்லூரியில் தொடங்கியது.2003 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் குளியலறை கியூவில் காத்திருக்கும்போதுதான் முதன் முதலில் சந்தித்தார்கள், என்று பிசினெஸ்   இன்சைடர் தெரிவித்தது.இது சினிமாவில் வருவதுபோல் ரொமான்டிக்கான இடம் இல்லை. இருந்தாலும், இந்த எளிமைதான்  ஜுக்கர்பெர்கின் ட்ரேட்மார்க்.

src=https://sg.theasianparent.com/wp content/uploads/2017/05/rsz zuckerberg collage.jpg மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு  பாராட்டுரை

(Image Credit: The Business Insider)

இந்த 9  வருட காதலில்,, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் துறையில் தனித்து வளர உதவினார்கள்.பிரிசில்லா மருத்துவக் கல்லூரிக்கு சென்று  குழந்தைநல  மருத்துவராக பணியாற்றுகிறார்.அதே நேரத்தில் மார்க் சோஷியல் மீடியா தளம் ஒன்றை கண்டுபிடித்து உலகையே கிற்ங்கடித்தார்.2012 இல்  திருமணம் செய்துகொண்டனர்.

src=https://sg.theasianparent.com/wp content/uploads/2017/05/rsz facebook ceo married 08ffc.jpg மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு  பாராட்டுரை

(Image Credit: The Washington Post)

2015 ஆம் ஆண்டில், மாக்ஸ், என்ற அழகான பெண்குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

 

 

src=https://sg.theasianparent.com/wp content/uploads/2017/05/rsz zuckerberg baby.jpg மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு  பாராட்டுரை

(Image Credit: Mark Zuckerberg/ Facebook)

மிக பிஸியாக இருந்தபோதிலும்,மார்க் மற்றும் பிரிசில்லா குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு நேரத்தை செலவிடுகிறார்கள். ஒரு வாரத்தில் ஒரு டேட் மற்றும் 100  நிமிட தனிப்பட்ட நேரமும்தான் இந்த ஜோடி  பின்பற்றும் ஒரே விதி.குடும்ப வாழ்க்கை பேரின்பதிற்கு இது சரியான குறிப்புதான்!

 

 

src=https://sg.theasianparent.com/wp content/uploads/2017/05/rsz zuckerberg chinese new year.jpg மார்க் ஜுக்கர்பெர்கின் தனது 5 வது திருமண ஆண்டு விழாவிற்கு  பாராட்டுரை

Mark and Priscilla make dumplings for the Lunar New Year together. (Image Credit: Mark Zuckerberg/ Facebook)

இந்த மார்ச் மாதம், பேஸ்புக்கில, தங்கள் இரண்டாம் பெண் குழந்தையை வரவேற்க போவதாக இந்த ஆதர்ச தம்பதி  அறிவித்தனர்.”  எங்கள் புதிய உறவை வரவேற்க கார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஒரு வலிமை வாய்ந்த பெண்ணை நாங்கள் வளர்க்க அயராது பாடுபடுவோம்” என்கிறார் ஜுக்கர்பெர்க்.

 

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த அற்புதமான குடும்பதிற்கு  அளவில்லா மகிழ்ச்சி பெற வாழ்த்துகிறோம் !

Source: theindusparent