மாதவிடாய் கப்பை மூன்று மாதங்கள் பயன்படுத்தினேன், இதுதான் நடந்தது...

முதல் மாதம் கொஞ்சம் குளறுபடியாகதான் இருந்தது. கப்பை உள்ளே செருகுவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு,நானும் என் கணவரும் ஜூன் மாதத்தில் கடற்கரை விடுமுறைக்கு செல்ல முடிவு செய்தோம்.எங்கள் விடுமுறையை உறுதிப்படுத்தி, ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட்களை பதிவு செய்தோம்.
இதில் ஒரே ஒரு பிரச்னை- என் மாதவிடாய்.
நான் ஒழுங்கற்ற மாதவிடாய் அனுபவித்ததில்லை என்றாலும், ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் மாயமாக வராது என்றும் நான் உறுதியாக சொல்ல முடியும். எப்போதும் ஒரு நாள் முன்பு அல்லது ஒரு நாள் கழித்து (என் முந்தைய மாதத்தேதியிலிருந்து ) வரும்.
கடற்கரைக்கு செல்லும்முன் , என் நிலைமை இக்கட்டான மாறியது.என் மாதவிடாய் பற்றின்கவலை படாமல் கடலில் நீந்த விரும்பினேன்.
மாதவிடாய் கப்பை சோதித்து பார்த்தேன்
என் விடுமுறை நாட்களில் எதையுமே மிஸ் செய்ய கூடாது என்று நினைத்தேன். அதனால். மூன்று மாதங்களுக்கு முன் நான் மாதவிடாய் கப்களை ட்ரை செய்து பார்த்தேன்.
முதல் மாதம் கொஞ்சம் குளறுபடியாகதான் இருந்தது. கப்பை உள்ளே செருகுவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது.ஆனால் மூன்றாம் நாளன்று எனக்கு பழகிவிட்டது.
இரண்டாவது மாதம் ஒப்பிட்ட அளவில் எளிதாக இருந்தது.என்னால் கப்பை ளிதில் கையாள முடிந்தது. மூன்றாவது மாதத்தில் எனக்கு எல்லாமே எளிதாக மாறியது.அனால் இந்த கப்பால் எந்த கசிவு பிரச்னையும் வராது என்று கடற்கரைக்கு எடுத்து செல்ல முடிவெடுத்தேன்.
ஆனால் மாதவிடாய் கப்பை தேர்வு செய்யலாமா வேண்டாமா என்று நீங்கள் யோசித்திருந்தால், என்னிடமிருந்து ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டாம். நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிடாய் கப் எவ்வாறு வேலை செய்யப் போகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு டாக்டர் மதுஸ்ரீ விஜயகுமார், ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், மாதர்ஹூட் மருத்துவமனை, பெங்களூரு,அவர்களிடம் நாங்கள் பேசினோம்.
1 நாப்கின்கள் அல்லது டேம்பன்களைக் காட்டிலும் மாதவிடாய் கப்கள் பாதுகாப்பானதா?
மாதவிடாய் கப் பயன்படுத்துவதன் பாதுகாப்பு அதன் பயறை சார்ந்துள்ளது.பயன்படுத்துவதற்கு முன் கப் சுத்தமாக இருக்கவேண்டும். சூடான நீரில் சாவ்லோன் அல்லது பெடடினை வைத்து கப்பை நன்கு சுத்தம் செய்யவேண்டும்
கப்களால் சிலநேரங்களில் அசௌகரியம் ஏற்படலாம். காற்றுபுகாமலும் தண்ணீர்புகாமலும் இருக்காததால், கசிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.இந்த மாதவிடாய் கப் பாலியல் செயலற்ற பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
Q2: என்ன பிராண்டுகளில் கிடைக்கின்றன மற்றும் விலை என்ன?
தற்போது, மூன்று இந்திய நிறுவனங்கள் மாதவிடாய் கப் தயாரிக்கின்றன.இதை ஆன்லைன் அல்லது மறுந்தகத்தில் வார்ங்கிக்கொள்ளலாம். ரூ .695 க்கு மெடிஅசெஸோ ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ஷிகப் கிடைக்கும். அல்லது ரூ. 970க்கு எர்த்கேர் சொலுஷன்ஸ் தயாரிக்கும் விகப் மற்றும் ரூ. 400க்கு சில்கிகப் கிடைக்கும்.
Q3: இந்த கப்களின் நன்மைகள் என்ன?
அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.8-10 மணி நேரம் வரை மாற்ற வேண்டியதில்லை.மீண்டும் பயன்படுத்தக்கூடியவையாக இருப்பதால் சுற்றுசூழலை பாதிக்காமல் இருக்கிறது.
சுகாதாரம் காரணமாக,3-5 வருடங்கள் வரை இந்த கப்பை உபயோகப்படுத்தலாம்.இருப்பினும், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு முழுமையாக சுத்தம் செய்யவேண்டும்.
Q4: நாப்கின் மற்றும் டம்பொன்களிலிருந்து கப்பிற்கு மாறவேண்டுமா?
விருப்பத்திற்கு ஏற்றதுபோல், மாறிக்கொள்ளலாம்.கனமான ஓட்டம் கொண்ட பெண்களுக்கு கப் நல்லது.
"யாராவது மாதவிடாய் கப்களுக்கு மாற திட்டமிட்டால், முதலில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்"டாக்டர் விஜயகுமார் பரிந்துரை செய்கிறார்.
Q5: மாதவிடாய் கப்களுக்கு மாறும்போது மனதில் எந்தமாதிரி விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்?
நழுவல் மற்றும் கசிவைத் தவிர்க்க , கப்பை கையாளுவதில் சரியான நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.என்று பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.இந்த கோப்பைகள் கருப்பை வாயிலில் மாற்றங்களை உருவாக்கும் என்ற தொன்மம் இருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை.
மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்க ள் இந்த கப்பை பயன்படுத்தக்கூடாது.இடுப்பு நோய்கள், அழற்சி நோய்கள்,கருப்பை அகப்படலம் பிரச்சினைகள் அல்லது நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் இதை பயன்படுத்த கூடாது.
இந்த மாதவிடாய் கப்கள் விலைஉயர்ந்தவையாக இருந்தாலும், ஓவற்றை பயன்படுத்துவது சுலபம். மேலும்,இதை மறுமுறை பயன்படுத்தலாம் . குறிப்பாக பயணிக்கும் போது அதிக நேரத்திற்கு இதை மாற்ற தேவை இல்லை.
எனவே, இதை வாங்க திட்டமிட்டால், அவை எவ்வாறு பொறுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள வீடியோவைப் பார்க்கவும்.