மனஅழுத்தமுள்ள பெண்களுக்கு சேத்தன் பகத்தின் உருகவைக்கும் கடிதம்

lead image

இச்செய்தி வெளிவந்த நேரத்தில், சேத்தன் பகத் இந்திய பெண்களுக்காக ஓர் உருக்கமான கடிதம் பிரபல நாளிதழில் பதிவிட்டுள்ளார்.

நீல்சென் நடத்திய சமீபத்திய ஆய்வில் உலகில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் இந்திய பெண்கள் தான என்று தெரியவந்தது.இதில் பெரும் 87சதவீதம் பெண்கள் எந்நேரமும் மனஅழுத்ததில் இருக்கிறார்கள் என்றும் 82 சதவீதம் பெண்களுக்கு ஓய்வெடுக்க நேரம் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

இச்செய்தி வெளிவந்த நேரத்தில், சேத்தன் பகத் இந்திய பெண்களுக்காக ஓர் உருக்கமான கடிதம் பிரபல நாளிதழில் பதிவிட்டுள்ளார்.

" இது சரி இல்லை. நீல்சென் நடத்திய சமீபத்திய ஆய்வில் உலகில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் என்று தெரியவந்தது. இதில் பெரும் 87 சதவீதம் பெண்கள் எந்நேரமும் மனஅழுத்ததில் இருக்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்த புள்ளி நிலவரம் எனக்கு மனஅழுத்தத்தை தருகிறது . எந்நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே வெறும் 53 சதவீதம் பெண்களுக்குதான் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

நாம் என்ன செய்கிறோம்? நான் பெண்கள் பக்கம் சார்பாக இருப்பவன்தான். அனால், உலகிலேயே அழகான பெண்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்.அம்மா, சகோதரி,சகஊழியர், மனைவி, காதலி - இவர்கள் இல்லாமல்  ஒரு வாழ்க்கையை உங்களால் நினைத்து பார்க்க முடியுமா?

இந்திய பெண்களுக்கு என்னால் முடிந்த ஐந்து ஆலோசனையை பகிர போகிறேன்.

ஒன்று. நீங்கள் சக்தி இழந்தவர்கள் என்று எப்பொழுதும் நினைக்காதீர். உங்கள் மாமியாருக்கு உங்கள் கருத்துகளுடன் வேறுபாடிருந்தால், கவலை வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களின் எண்ணத்திற்கு பயந்து வாழ வேண்டாம். சிலருக்கு  உங்களை பிடிக்கவில்லையா?அது அவர்களின் பிரச்னை.

இரண்டு. நீங்கள் நன்கு வேலை செய்தாலும், செய்த வேலைக்கு பெயர் இல்லையா?- உங்கள் மேலதிகாரியிடம் சொல்லுங்கள் . அல்லது அந்த வேலையை இராஜனாமா செய்யுங்கள். உங்களை போல் கடின உழைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் குவியும்.

மூன்று. உங்கள் திறன்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.பொருளாதார சுதந்திரத்திற்கு வழிகளை யோசியுங்கள். உங்கள் கணவர் நீங்கள் நல்ல மனைவி /தாய் இல்லை என்று ஏசினால், அவரை தன் வழியை பார்த்து போக சொல்லுங்கள்.

நான்கு. குடும்பம் மற்றும் வேலை என இரட்டை பொறுப்புகளை கண்டு அஞ்சாதீர். சமாளிப்பது கடினம்தான், அனால் சாத்தியமே! உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் A +  வாங்குவது நடைமுறைக்கு இயலாத ஒன்று. வாழ்க்கை பரீட்சை அல்ல.நீங்கள் SRCC யில் இருந்தால் ஒழிய நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க முடியாது. நீங்கள் நான்கு  பதார்த்தம் செய்ய அவசியமில்லை ; ஒன்றை சமைத்து வயிற்றை நிரப்பலாம்.நீங்கள் நள்ளிரவு வரை அலுவலக வேலை செய்யாததால் பதவி உயர்வு கிடைக்காமால் போனதா? பரவாயில்லை. உங்கள் மரணத்திற்கு பின் உங்கள் அலுவலக பதவியை யாருக்கும் நினைவில் கொள்ள மாட்டார்கள்.

ஐந்து. மற்ற பெண்களுடன் போட்டி போடாதீர். உங்களை விட நல்ல வீட்டுப்பாடம் செய்பவள் இருக்கலாம்.உங்களை விட சீக்கரம் எடை குறைத்த ஒருத்தி இருக்கலாம்.உங்கள் பக்கத்துக்கு வீட்டு பெண் உங்களுக்கு மேலாக தன் கணவருக்கு ஆறு டப்பா மதிய உணவு கட்டிக்கொடுப்பவளாக இருக்கலாம்- அதனால் என்ன ?

உங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்யுங்கள். இவ்வுலகில் மிகச்சரியான பெண் என்று யாருமில்லை. இல்லாத ஒரு குறிக்கோளை அடைய முயற்சித்தால், நம்மக்கு மிஞ்சியது ஒன்றுதான் - மனஅழுத்தம்.

ஓய்வெடுங்கள்.நீங்கள் அழகும் அறிவும் உள்ள பெண்மணி என்று உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள். ஒரு அழகான அமைதியான வாழ்க்கை வாழ நீங்கள் தகுதியானவர் என்று உணருங்கள்.

இதை உங்களிடமிருந்து பறிப்பது  பெரும் குற்றமாகும். இப்பூவுலகில் நீங்கள் பிறப்பதற்கான நோக்கம் அனைவரையும் மகிழ்விப்பதற்காக இல்லை. உங்களால் முடிந்தவரை உலக மேம்பாட்டிற்கு பங்காளியுங்கள். பதிலுக்கு, உலகம் உங்களுக்கு நல்ல வாழக்கையை தரும்.அடுத்த கணக்கெடுப்பில் இந்திய பெண்கள் மனஅழுத்த பட்டியலில் இருந்து விலகவேண்டும். நம் பெண்கள் உலகின் மிகமழிச்சியான பெண்களாக இருக்க வேண்டும்.

பெண்குலம் போற்றுவோம்!

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner