மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்

மணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்

பாலிகா பாது-வின் ஆனந்தி புகழ் அவிகா கோர்,தன் துணை நடிகர்  மணீஷ் ரைசிங்கனை பற்றி மனம் திறக்கிறார்.

பல மாத ஊகங்களுக்குப் பிறகு,"பாலிகா பாது" புகழ் நடிகை அவிதா கோர், தன்  துணை நடிகர் மணீஷ் ரைசிங்ஹானுடன் உறவை பற்றி மனம் திறக்கிறார்.

பொதுவான கருத்து போலல்லாமல், மணீஷுடன் அவர் எந்த உறவிலும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த யூகத்தின் குறித்த மௌனத்தை உடைத்து, அவிகா ஒரு முன்னணி செய்தித்தாளில் " மணீஷ் என் தந்தைக்கு சில ஆண்டுகள்தான் இளையவர்.  எனவே காதல் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஈடுபாட்டிற்கும் வாய்ப்பு இல்லை. எங்களுக்குள் இருக்கும் நட்பு புரிதல், மரியாதை, நேர்மை மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில்தான் அமைகிறது"

A post shared by Avika ⭐ (@avika_n_joy) on Apr 16, 2017 at 10:23pm PDT

இவர்களுக்கும் இருக்கும் நட்பு, இதுபோல் வரும் வதந்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்கிறார்.

"நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.அவர் ஒரு வலுவான ஆதரவாக இருக்கிறார்.நான் அவரை ஷின் சான்(பிரபலமான காமிக் பாத்திரம்)  என்று அழைப்பேன்.என்னை மிஸ்ஸி (ஷின் சான் தாயின் தாயார்) என அழைப்பார். எங்கள் நட்பை நாங்கள் கண்ணியமாக காக்கிறோம். அதனால், மணீஷை டேட் செய்ய எனக்கு எண்ணமில்லை" என்கிறார்.

இதுபோன்ற வதந்திகளால் மனிஷும், மனதளவில்  ஆழமாக பாதிக்க படுகிறார்.

" இந்த வதந்தி என்னை தாக்கியது. அவிகாவிலிருந்து தூரத்தைத் தக்கவைத்து கொண்டேன். இது நான் செய்த முட்டாள்தனமான காரியம்.இதனால் நான் எரிச்சல் அடைந்தேன். என் எண்ணங்கள் சுத்தமாகவும் தெளிவாக இருந்தால், நான் ஏன் அவளிடம் ஒரு தூரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும்? அவளுக்கு கிட்டத்தட்ட என் வயதின்  பாதி வயது.

நான் அவளை ஒருபோதும் காதல் கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. எப்படியாயினும், இத்தகைய தளர்வான பேச்சுவார்த்தைகள் இனி என்னை பாதிக்காது, இப்போது நாங்கள் வேலைக்காக சந்திக்கிறோம், "என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு  நண்பன் தேவை என்பதற்கு மூன்று காரணங்கள்

 

A post shared by Avika ⭐ (@avika_n_joy) on Apr 13, 2017 at 12:31am PDT

அவிகா மற்றும் மணீஷ் ஆகியோர் 'ரோசிட்' என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றனர். ரோலி மற்றும் சித்தார்த் என்ற அவர்கள் கதாபாத்திரத்தின் பெயர்களை  இணைந்த ஒரு புனைப்பெயர். இவர்களின் உறவுதான் எல்லா பெண்களுக்கும் ஒரு நண்பன் தேவை என்பதன் எடுத்துக்காட்டு.

1 உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை  அளிக்கிறார்கள்

எதிர் பாலினமாக  இருப்பதால், உங்களுடைய பிரச்சினைகளுக்கு  புதிய கண்ணோட்டத்தை  வழங்குகிறார்கள். உங்கள் தோழிகள் அறிவுறுத்திய கண்ணோட்டத்தை விட சற்று வித்தியாசமாக இருக்கும் எனவே ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

2.உணர்ச்சி வசபடமாட்டார்கள்

ஆண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படமாட்டார்கள் . இதனாலே, ஒரு நல்ல நடைமுறை உறவை இன்னும் அதிகமாகக்கொண்டிருக்கும்.

3.நீங்கள் நீங்களாகவே இருக்க உதவுவார்கள்

பைக் அல்லது கார்  சவாரி,  புதிய வீடியோ கேம் போன்றவற்றை தோழிகளோடு சேர்ந்து விளையாட முடியாது. ஆனால், நண்பர்களோடு விளையாடலாம். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றம்!

Source: theindusparent

Written by

theIndusparent