மகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்

lead image

இஷா, தன் பிரசவம்வரை தாய்வீட்டில் தங்கப்போகிறார்

ஹேமா மாலினி மற்றும் தர்மேந்திராவின் மூத்த மகள் இஷா தியோல், இந்த ஆண்டின் இறுதியில் தன் முதல் குழந்தைக்கு எதிர்பார்ப்பதாக,  உங்களிடம் பகிர்ந்து கொண்டோம்.  இதை பழம்பெரும் நடிகை மற்றும் ராஜ்ய சபா எம்.பி. ஹேமா மாலினி, அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தினார்.

பக்பன் நடிகை இந்த செய்தியை ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

...........................................

Twitter name ஹேமா மாலினி

Twitter Handle @டிரீம்கேர்ள்ஹேமா

இஷாவுக்கும் பரத்துக்கும் முதல் குழந்தை பிறக்கப்போகிறது. இதை,தியோல்களும் தக்டானிகளான நாங்களும், மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

.........................................................

ஹேமா மாலினி வாழ்க்கையை பற்றிய  புத்தகத்தை எழுதும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ராம் கமல் முகர்ஜிதான்  இஷாவின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் முதல் நபராக இருந்தார்.

" நான் வாழ்க்கை சரிதை எழுதுவதால், அடிக்கடி ஹேமாவின் வீட்டிற்கு செல்வேன். மேலும், ஹேமா மற்றும் குடும்பத்தினர் இஷாவின் கர்ப்ப செய்தியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். , அக்டோபர் மாதத்தில் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்,இஷா, தற்பொழுது ஹேமா வீட்டில்தான் இருக்கிறார்.

 

A post shared by Hema Malini (@dreamgirlhema) on Nov 3, 2014 at 10:30am PST

தர்மேந்திராவும் ஹேமாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கணவர் பாரத்,  இஷாவுடன் நேரத்தை செலவிடுவதற்காக பல நாட்கள் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்கிறார்" என்று தி எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தெரிவித்தார்.

இஷா, தன் பிரசவம்வரை தாய்வீட்டில் தங்கப்போகிறார்

இஷா,தன் தாய்வீட்டில்தான் பிரசவம் வரை இருக்கப்போகிறார் .பாட்டி ஹேமா, குழந்தையின்  வருகைக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டார்

"இப்போது, இஷா தன் தாய் ஹேமா மாலினியுடன்  தனது ஜுஹூ பங்களாவில் தங்கியிருக்கிறார். பண்ட்ராவில் உள்ள தன் மாமியார் மாமனாரையும் அடிக்கடி சந்தித்து வருகிறார். உற்சாகமான ஹேமா, குழந்தை வளர்ப்புக்காக எப்படி தன் வீட்டை தயார் செய்து சொல்வது என்று திட்டமிடுகிறார். இந்த வருடத்திற்குள் குழந்தை பிறந்துவிடும்"  என்று ஒரு பிரபலமான பொழுதுபோக்கு போர்டல் தெரிவித்துள்ளது.

தாய்வீடுதான் கர்பகாலத்திற்கு சிறந்த இடம்

 

A post shared by Hema Malini (@dreamgirlhema) on Nov 4, 2014 at 10:40am PST

தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினியின் இளைய மகள் அஹனா தியோலின் மகன் டாரியன் வோஹ்ராவை தொடர்ந்து இன்னொரு பேர குழந்தையை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இதற்காகத்தான், இஷா தன் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்.

பிரசவகாலத்தின்போது, பல பெண்கள் தன் தாய்வீட்டிற்கு செல்கிறார்கள்.  குடும்ப பாரம்பரியம் காரணமாக சென்றாலும், தாய்வீட்டிற்கு செல்வதற்கு பல நன்மைகள் இருக்கிறது.

1  உங்கள் தாய் உங்களுடனே இருக்கிறார்

முதலாவதாக,  உங்களைவிட உங்களைப்பற்றி உங்கள் தாய்க்குதான் தெரியும். பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்நாள் அனுபவம், நீங்கள் தாயாகும் நேரத்தில். உங்கள் தாயும் உங்கள் அருகிலே இருப்பது ஒரு விலையுயர்ந்த உணர்வு.

2. நீங்கள் நலமாகவும் சௌகரியமாகவும் இருப்பீர்கள்

நாம் பிறந்து வளர்ந்த இடம்தான் நமக்கு முதல் இல்லம். இதை மனதார ஒப்புக்கொள்ளவேண்டும்.நம் தாய்வீட்டில்தான், யாருக்கும் கவலைப்படாமல், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். நம் தாய்வீட்டுடன்தான் நம் இனிமையான  நினைவுகள் இணைந்திருக்கும்.

3. அதிகபட்ச ஓய்வு கிடைக்கும்

உங்கள் தாயின் பராமரிப்பினால், உங்களுக்கு அதிகபட்ச ஓய்வு கிடைக்கும். உங்களுக்கு எந்த மனக்கசப்பும் அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள் . உங்கள் மாமியார் வீட்டில் இதெல்லாம் கிடைப்பது கடினம்தான். சரிதானே ?

Source: theindusparent