பொட்டும், தாலியும்  அணியாததற்காக  மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்

lead image

உரிமை வழங்களின் காரணத்தால். ஒரு பெண் பொட்டும், தாலியும் அணிவதும்,அணியாது இருப்பதும் அவளது விருப்பம். இது விவாகரதிற்கு  அடிப்படையாக  இருக்க முடியாது.

என் நான்கு வருட திருமண வாழ்க்கையில், என் கணவரின் பெற்றோர்களை பார்க்கும்போது மட்டுமே தாலி அணிந்துள்ளேன். குங்குமமும்  நான் அவ்வளவாக அணிந்ததில்லை. அதை நான் விரும்பவில்லை . மேலும், குங்குமத்தில் இருக்கும் ரசாயம் எனக்கு ஒத்துக்காது.

இதுபோன்ற பழங்கால சம்பிரதாயத்தை பின்பற்ற மாட்டேன் என்பதற்காக என் திருமண பந்தத்தை அவமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை. என் கணவர், என் மீது வைத்திருக்கும் மரியாதையும் குறைந்ததில்லை.

என் கணவர் மட்டும் அல்ல, இந்நாட்டில் இருக்கும் பல ஆண்கள், தாலியை ஒரு அலங்கார பொருளாகவும், அது பெண்கள் தன் சொந்த தேர்வின் அடிப்படையில்தான் அணிகிறார்கள் என்று   நினைக்கிறார்கள்.

இந்த செய்தியை படித்தவுடன், எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது !

கணவனுக்கு விவாகரத்து  ஏன்  வேண்டுமென்றால்..

நாங்க்பூரை சேர்ந்த, படித்த ஆண் ஒருவர், தன் மனைவி, பழங்கால சம்பிரதாயத்தை மேற்கொள்ளாததால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். மேலும், தன் தலையை முந்தானை வைத்து மூடவில்லை என்றும் சுட்டிக்காட்டிருக்கிறார்.

இந்த  பிற்போக்குத் சிந்தனை , அவருக்கு எதிராக  தீர்ப்பளித்த நீதிபதிகளைக்கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நீதிபதிகள் கூறுகையில் " இந்த 21 ஆம் நூற்றாண்டில், ஒரு மனிதன் தன் மனைவியை முந்தானையை தலையில் அணியாததால் மற்றும் குங்குமம்,தாலி அணியாததால், விவாகரத்து பெற முடியாது. இந்த நூற்றாண்டில், ஒரு பெண்ணை  முந்தானையை தலையில் அணிய எதிர்பார்ப்பது தவறு. இதை ஒரு காரணம்காட்டி திருமண பந்தத்தை உடைக்க முடியாது "

1995யில் திருமணமாகி, 1996யில் பெண் குழந்தைப்பெற்ற இவருக்கு மேலும் பல புகார்கள் இருக்கிறது.

“திடுக்கிடும்”  புகார்கள்

உயர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது, தன் மனைவிக்கு ஈகோ பிரச்சினைகள் உள்ளது என்றும் தன் மகளிடம் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வந்த மனக்கசப்பால், 2000 -ஆம் ஆண்டில் இவர் மனைவி, இவரை பிரிந்து சென்றார். இவர் தொடர்ந்து முயற்சிசெய்தும், அந்த பெண் தன் குழந்தையுடன் புறப்பட்டுவிட்டாள் என்று கூறிருக்கிறார்.

சுவாரஸ்யமாக, அவர் 2011 இல் திருமணம் கலைக்ககோரி மனு தாக்கல் செய்தார். அனால், தன் மனைவி கட்டாயத்தினால் வெளியேறினார் என்றும் இவரது வாதம் தவறு என்று நீதிமன்றம், அந்த வழக்கை  தள்ளுபடி செய்தது.

கூடுதலாக,  அவரது முந்தைய கோரிக்கைகளை நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவரது அணைத்து ஆவணங்களிலும் தன் மனைவி பொட்டும், தாலியும் அணியாததுதான் பெரிய குற்றமாக காரணம் காட்டிருக்கிறார். இதை அறிந்த நீதிபதி, இதை சாதாரணமாக விட்டுவைக்கவில்லை.

பொட்டும், தாலியும்  அணியாததற்காக  மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்

இவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டிலுமே இவர் மனைவி இவரை கொடுமைப்படுத்திய ஆதாரம் இல்லை.இந்த குடும்ப நீதிமன்றம் ,நற்சிந்தனையோடு, அந்த மனைவி இவரை துன்புறுத்தவோ அல்லது கைவிடவோ இல்லை என்று தீர்மானிக்கிறது .இவர் கூறும் காரணத்திற்காக விவாகரத்து அளிக்கமுடியாது" என்று நீதிபதி வினய் தேஷ்பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு, நாட்டின் பல ஆண்களின் பிற்போக்கு சிந்தனையை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்கள், தங்கள் மனைவியை ஒரு உடைமைபோல் கருதுகிறார்கள்.பழங்கால சம்பிரதாயத்தை பின்படுத்தச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்.ஒரு பெண்ணுக்கு இதுமட்டும் பிரச்னை அல்ல

ஒரு மருமகளை, மாமியாரும் நாத்தனாரும் கூட தனக்கு தாழ்வாக நடத்துகிறார்கள்.

மருமகள்கள் எதிர்கொள்ளும் மூன்று கொடிய சவால்கள் :

1 . அந்நியன் போல் நடத்துவது : பெற்றோரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இன்னும் ஆண்களுக்கு மட்டும்தான் என்ற புரிதல் இருக்கிறது. புதிய மருமகள்கள், தன் கணவரின் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பை அப்படியே பின்பற்றவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர் அந்த குடும்பத்துடன் ஒத்துபோவதற்கு கால அவகாசம் தேவை. இதை புரிந்து கொள்ளவேண்டும்.

2.கட்டாய பரஸ்பரம் : ஒரு புதிய குடும்ப சூழலில் அனுசரிக்கும்போது, பல மருமகள்களுக்கு தங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மரியாதையினாலும், சமூகத்திற்கு பயந்தும் தங்கள் விருப்பு வெறுப்புகளை அடக்கிகொள்கிறார்கள். சிலரை பிடிக்காவிட்டாலும், கணவனுக்காக பிடித்ததுபோல் காட்டிக்கொள்கிறார்கள். அனால் வீட்டு மருமகனுக்கு அந்த வேதனை இல்லை. தனக்கு தோன்றினதுபோல் பேசலாம் .சில பெண்வீட்டு குடும்பங்களில், மாப்பிள்ளைதான் எல்லா முக்கிய  முடிவும் எடுப்பார்.

3. பிள்ளைகளிடையே ஒப்பிடுதல் ஒரு குடும்பத்தில், மருமகளைவிட, அவளது நாத்தனார்  திருமணம் ஆனவராகஇருந்தால், அவளுக்குத்தான் முதல் மரியாதை இருக்கும்

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner