பெண் குழந்தை " மாதவிடாய்" மற்றும் எச்சரிக்கப்படாத பிற கவலைகள்

பெண் குழந்தை " மாதவிடாய்" மற்றும் எச்சரிக்கப்படாத   பிற கவலைகள்

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது.எவ்வளவுதான் குழந்தை பற்றிய புத்தகங்கள் படித்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.உதாரணமாக, நீங்கள் பெண்குழந்தையின் மாதவிடாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை போல் எச்சரிக்கப்படாத பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள கீழ்வரும் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது.எவ்வளவுதான் குழந்தை பற்றிய புத்தகங்கள் படித்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.உதாரணமாக, நீங்கள் பெண்குழந்தையின் மாதவிடாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை போல் எச்சரிக்கப்படாத பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள கீழ்வரும் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.பெண் குழந்தை மாதவிடாய்

உங்கள் 2 நாள் குழந்தையின் கருத்தரிடமிருந்து தடித்த, பால் வெளியேற்றத்தைக் கண்டறியலாம்.விரைவில் அதன் டயப்பரில் சிறு துளி இரதம் பார்த்தால் பயப்படவேண்டாம்.

பெற்றோர் கவலை:

ஏன் என் குழந்தைக்கு இரத்த கசிவு ஏற்பட்டது?

காரணம்:

கர்ப்பகாலத்தின் போது, தாயின்  ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் எழுச்சி, பெண் சிசுவின் கருப்பையை தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் கருப்பையில் ஒரு  சுவரை  உருவாக்குகின்றன.குழந்தை பிறந்தபின், இனி அவளால் இந்த ஹார்மோன்களை பெற முடியாது. அதனால், அந்த சுவர் உடைந்து இரத்த கசிவு ஏற்படும்.

நிபுணர் கருத்து:

டாக்டர் சான் போ சாங், தலைமை மற்றும் மருத்துவ ஆலோசகர், பொது ஆம்புலரி குழந்தைநலன் மற்றும் இளமை மருத்துவம் பிரிவு, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, அவர்கள் , "பொதுவாக பிறந்த குழந்தையின் ஒரு வாரத்தில் இது போன்ற சம்பவத்தை காணலாம்.வழக்கமாக 2-3 நாட்களில் சரியாகிவிடும். அதன் பிறகும் நீடித்தால்தான்,  கவலைப்பட வேண்டும். " என்கிறார்

2.விக்கல்

என் குழந்தை எப்பொழுதும் விக்கி கொண்டிருக்கிறதே?

பெற்றோர் கவலைகள்:

தொடர் விக்கல் காரணமாக சில நேரம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்வார்கள்.

இதற்கென்ன பொருள் :

குழந்தை விக்கல் மிகவும் பொதுவானது. உதரவிதானத்தின் சுருக்கம் மற்றும் குரல் நாண்கள் விரைவாக மூடுவதால் விக்கல் ஏற்படும். குரல் தண்டுகள் விரைவாக

மூடுவதால் விக்கல் ஒளி உருவாகிறது. குழந்தைகள் கர்ப்பத்தில் கூட விக்கும். தெரியுமா?

நிபுணர் கருத்து"டாக்டர் சானின் கருத்துப்படி " பொதுவாக உதரவிதானதின் எரிச்சலின் காரணமாக ஏற்படும். குழந்தைகள் வேகமாக உணவு உண்ணுவதுதான் பொதுவான காரணியாகும்.

மெதுவாக உணவு அளிப்பதால் இந்த நிகழ்வை குறைக்க உதவும்.இது தானாகவே சரியாகிவிடும்.பிறந்த குழந்தைகள் தாமதமாக மலம் கழித்தல்

பெண் குழந்தை

3 சில தாய்ப்பால் அருந்தும்  குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை மற்றும்  குடல் இயங்கும்.

பெற்றோர் கவலைகள்:

என் குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கிறதா?

இதற்கென்ன பொருள் :

தாய்ப்பால் அறுந்தும் குழந்தைகளுக்கு

பெரும்பாலும் பல நாட்கள் குடல் இயக்கமின்றி போகலாம்

பலநாட்கள் மலம் கழிக்காமல், ஒரே நாளில் சேர்த்துவைத்து மொத்தமாக கழிக்க வாய்ப்புகளும் உண்டு.பிரத்தியேகமாக தாய்ப்பால் அறுந்தும்  குழந்தை சாதாரணமாக எடையைக் கொண்டு, மலம் கழித்தலில் வலி இல்லாமல் இருந்தால் கவலையில்லை.

நிபுணர் கருத்து:

டாக்டர் சான் "ஃபார்முலா-குழந்தைகளுக்கு மலம் கழிப்பது கடினமான இருக்கும். சில வாரங்களுக்கு ஒரு முறைதான் குடல் இயக்கம் சரியாகும். தாய்ப்பால் அறுந்தும் குழந்தை ,2  மாதங்களுக்கு மேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மலம் கழிக்கும். மலம் மென்மையாக இருக்கும் வரை, குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை"
பெண் குழந்தை

4 அழும்போது மூச்சு திணறல்

குழந்தைகள் அழும்பொழுது சில சமயம், கிட்டத்தட்ட ஒரு நிமிடம்வரை மூச்சு திணறல்  ஏற்படும்.சில சமயம் மயக்கம் கூட ஏற்படலாம்.

பெற்றோரின் கவலைகள்:

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இதற்கென்ன பொருள்

" மூச்சு திணறல் வேண்டுமென்றே செய்வதில்லை.குழந்தைக்கு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திறமை இல்லை.கோபம், விரக்தி, வலி, பயம் போன்ற உணர்ச்சிகளால் இந்த மூச்சு திணறல் ஏற்படும்.பெரும்பாலான மூச்சுதிணறல் குழந்தைக்கு நீண்டகால அபாயத்தை ஏற்படுத்தாது.

நிபுணர் கருத்து

" சில சமயம் குழந்தைகள் மிகவும் கோபமடைந்து , அதிகமாக அழுதால்  மூச்சு திணறல் ஏற்படும். 2  அல்லது மூன்று வயதிற்கு மேல் இந்த மூச்சு திணறல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விரும்.

"இது வலிப்பு அல்லது சயோனிடிக் இதய நோய்களிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ அல்லது மயக்கங்கள் நீடித்தாலோ, மருத்துவரை சந்திக்க வேண்டும். இதய சிக்கல் அல்லது இரும்பு குறைபாடின் காரணமாக மூச்சு திணறல் ஏற்படலாம்.பெற்றோர் குழந்தைகளை அமைதிப்படுத்தி, மேலும் ஏற்படும் காயத்தை தடுக்க  முயற்சி செய்யலாம்.

வெளியிடப்பட்டது:  sg.theasianparent.com/baby-girl-periods/

Source: theindusparent

Written by

theIndusparent