"பெண்கள் " செட்டில் ஆக" ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" சானியா மிர்சாவின் பதில்

"பெண்கள் " செட்டில் ஆக" ஒரு தாயாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" சானியா மிர்சாவின் பதில்

"இந்த நேரத்தில் உலகில் முதலிடம் வகிப்பதிலிருந்து நான் ஏன் தாய்மையை தேர்ந்தெடுப்பதில்லை என்று ஏமாற்றமடைகிறீர்கள்"

சானியா மிர்ஸா ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையாக  சொல்லுகிறார். ஒவ்வொரு இந்திய பெண்ணும் தன் வாழ்வில் எதிர்கொள்கின்ற பெரிய கேள்வி- எப்பொழுது செட்டில் ஆகி குழந்தை பெற போகிறாள் என்பதுதான்.

விம்பிள்டன் சாம்பியனாக இருந்த போதிலும், " எப்பொழுது குழந்தை பெற போகிறாய்?" என்ற கேள்வி  அவரை பெறும் ஏமாற்றத்தை தருகிறது,என்று  முன்னணி தேசிய செய்தி தொலைக்காட்சியின்  ஒரு பேட்டியில் கூறினார்..

" நான் செட்டில் ஆக வில்லை என்று நினைக்கிறீர்களா?"

ராஜதீப் சர்தேசாய்,இந்த டென்னிஸ் வீராங்கனையுடன் சமீபத்திய நேர்காணலில், எப்பொழுது டென்னிஸிலிருந்து பிரேக் எடுத்து தாயாக போகிறார் என்று கேட்டார்.அந்த கேள்விக்கு," நான் செட்டில் ஆக வில்லை என்று நினைக்கிறீர்களா?" என்று உடனடியாக பதிலளித்தார்.

சர்தேசாய், தனது பேரை  காப்பாற்றுவதற்காக,வேறொரு கேள்வியை எழுப்பினார் " நீங்கள் ஓய்வு, குடும்பம்,குழந்தை, தாய்மை பற்றி, டென்னிஸுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் பேசுவதில்லையே"

எரிச்சலடைந்த சானியா, இந்தியாவின் அனைத்து பெண்களின் சார்பாக இந்த "செட்டில் டௌன்" கேள்விக்கு பதிலளித்தார்.

" இந்த நேரத்தில் முதலிடம் வகிப்பதற்கு பதிலாக நான் ஏன் தாய்மையை தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள்.அனால்,அனைத்து இந்திய பெண்களின் சார்பாக எதிர்கொள்ளும் இந்த கேள்விக்கு பதிலளிக்கிறேன் - முதலில் கல்யாணம் பிறகு தாய்மை.துரதிர்ஷ்டவசமாக, அதிக அழகு  விம்பிள்டன் வெற்றிகலை இந்த நாட்டிற்கு பெற்றாலும் நான் தாய்மை அடையும் வரை நான் "செட்டில்" ஆகவில்லை என்றுதான் இந்த சமுதாயம் நினைக்கும்.எல்லாம் காலத்திற்கேற்றாற்போல் நடக்கும். எந்த நல்ல விஷயம் நடந்தால் இந்த உலகிற்கு முதலில் நான் தான் அறிவிப்பேன்"என்றார் சானியா

29 வயதில் சானியா தன் சுயசரிதையை வெளியிட்டார். ஒரு பெண் விளையாட்டு வீராங்கனைக்கு இதுதான் முதல் தடவை.ராஜ்தீப் சர்தேசாய் சோனியாவிடம் மன்னிப்பு கேட்டபோது," நான் மன்னிப்பு கேட்கிறேன்.அந்த கேள்வியை மிகவும் தவறாக உருவாக்கியிருக்கிறேன். நீங்கள் சரிதான்.ஒருபோதும் ஒருவிளையாட்டு வீரரிடம் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்" என்கிறார்

நேர்காணல் முடிவதற்கு முன்பு, சானியாவை மக்கள்  எப்படி நினைவில் கொள்ளவேண்டும். சானியா இன்னொரு தீர்க்கமான பதிலளித்தார் " என் வெற்றிகள் ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்க வேண்டும்.  29  வயதில், வெற்றியின்  உச்சியில் இருக்கும் எந்த பெண்ணையும் இந்த கேள்வி கேட்கப்படக்கூடாது"

" இதில் "செட்டில்"என்ற பேச்சுக்கே இடமில்லை. " என்று கூறினார்.

சாரதேசாயின் கேள்விகளுக்கு சானியா பதிலளிப்பதைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.
[youtube

Source: theindusparent

Written by

theIndusparent