பெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான்

lead image

பெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது

இளைஞர்கள்  சமூக ஊடகங்களோடு பெருகிய அளவில் மூழ்கிகொண்டு வருகிறார்கள். பேஸ்புக்கில் யார் முதலில் செல்பி பகிர்வது என்பதில் பெரும் பந்தயம் நடக்கும்

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில்,  பெங்களூரு மாணவர்களின்

செல்ஃபியில் ,நண்பர்களின் பின்னணியில் ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருப்பதை கண்டது பெரும் அதிர்ச்சியை தந்தது.

பெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது.

17 வயதான  மாணவர் விஷ்வாஸ், ஜயநகரில் உள்ள நேஷனல் கல்லூரியில் படித்துக்கொண்டு வந்தார். எல்லோரும் கரையில்  செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது.,விஷ்வாஸ் பின்னணியில் குளித்துக்கொண்டிருந்தார்

நண்பர்களுக்கோ, விஷ்வாஸ் பின்னணியில் மூழ்கிக்கொண்டிருப்பது தெரியவில்லை.விஷ்வாஸின் தந்தை ஆட்டோ டிரைவர், மற்றும் தாய் இல்லத்தரசி.

மாணவர்கள்  ட்ரெக்கிங்( trekking )-கிற்காக தயாராகிக்கொண்டிருந்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, NCC (தேசிய கேடட் கார்ப்ஸ்) இன் 25 மாணவர்களின் குழு மலையேற்றத்திற்காக பயணிக்கும்போது, ஆசிரியரிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டுதான் நீந்த தொடங்கினர்.

பெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான்

ராமநாகர காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் பனொத் கூறுகையில்," விஷ்வாஸ் மூழ்கிக்கொண்டிருந்தபோது,மாணவர்கள் செல் ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.மதியம் 2 மணி அளவில்,ராமகண்டலு பெட்டாவிற்கு சென்றனர் . ஆபத்து என்று கிராம பஞ்சாயத்து கண்டித்தபோதும், மாணவர்கள் குளத்தில் குளிக்க தொடங்கினர்

நண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது , விஷ்வா தவறி விழுந்து வண்டலில் மாட்டிக்கொண்டான்.இருப்பினும், விஷ்வா காணாமல் போனதை பற்றி அதிக நேரம் யோசிக்கவில்லை.

கல்லூரியின் கவனக்குறைவிற்கு எதிராக விஸ்வாஸ் தந்தை கோவிந்தப்பா போராட்டம் நடத்தினார்.மேலும், போலீசாரிடம் புகாரும் தெரிவித்தார்.

"கோவிந்தப்பா, கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் விஷ்வாஸின் உயிரை பலி வாங்கியது என்பது தெரிந்தது.புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவுசெய்துள்ளோம்.தேவைப்பட்டால், கல்லூரி மேலாண்மைக்கெதிராக விசாரணை நத்துவோம்" . காவல்துறை அதிகாரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.

செல்ஃபி பாதுகாப்பு

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உதவிகரமான சில பாதுகாப்பு

குறிப்புகள் இங்கே உள்ளன.செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு முன், இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.தனிப்பட்ட தகவலையும் ஆன்லைனில் பதிவுசெய்யவேண்டாம்.இந்த தடயங்களை குற்றவாளிகளால் கண்டுபிடிக்கமுடியும்.

2.புகைப்படங்களைப் பதிவு செய்யும் போதெல்லாம் உங்கள் குழந்தைகள் சரியான தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. வாகனம் ஓட்டும் போது, அல்லது கட்டிடத்தின் உயரத்திலிருந்து எப்பொழுதும் செல்ஃபி எடுக்கக்கூடாது

4. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்  அசௌகரியப்படும் எந்தவிஷயத்தையும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது  

5. குழந்தைகள் ஆன்லைனில் இடுகையிடும் புகைப்படங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பற்ற புகைப்படங்களை பகிராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Written by

theIndusparent

app info
get app banner