பீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது?

lead image

இன்றும்கூட நிறைய வீடுகளில், தாய்மார்கள் தங்கள் மகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவதில்லை

'பீரியட்', அல்லது மாதவிடாய், இன்னமும் இந்திய சமூக விவாதங்களில்

ஒதுக்கப்பட்ட தலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ட்விங்கிள் கன்னாவின் தயவால், மாதவிடாய் "பேட்" வெள்ளித்திரையில் அறிமுகமாக போகிறது

ட்விங்கிள்,  "மென்ஸ்ட்ருவல் மேன்" என்று அழைக்கப்படும்   திரு. முருகானந்தம், அவர்களை பற்றி படம் தயாரிக்க போகிறார். திரு. முருகானந்தம், கிராமப்புற பெண்களுக்காகவே பிரதியீனமாக மாதவிடாய் பேட்களை தயாரிக்கிறார்.இதை மலிவாகவும் விற்கிறார். "பேட்மேன்: தான் இந்த படத்தின் தலைப்பு. இதை புகழ்பெற்ற டைரக்டர்

பால்கி இயக்கவிருக்கிறார்.

என் மூத்த மகளுக்கு கிட்டத்தட்ட பத்து வயது முடியப்போகிறது. மாதவிடாய் பற்றி அவளிடம் பேச நான் தயார்படுத்திக்கொண்டேன். தொலைக்காட்சியின் தாக்கத்தினால், இந்நாட்களில் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவது எளிது.இப்பொழுதே விளம்பரத்தில்

சானிட்டரி பேட் பற்றி கேட்க தொடங்கிவிட்டாள்.

 

mother and daughter

முதல்முறை பீரியட் மற்றும் பேட் பற்றி என் பள்ளிப்பருவத்தில் தெரிந்துகொண்டேன். குளிர்நிறைந்த ஒரு காலையில், அனைத்து மாணவர்களும் ஒன்றுகூடும்போது, மாணவிகளுக்கு மட்டுமே "ஒரு

ஸ்பெஷல் கிளாஸ்"  இருப்பதாக தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

மாணவர்கள் அனைவரும் உற்சாகமாய் தங்களுக்குள் பேசிக்கொள்ள தொடங்கினர். ஏன்   மாணவிகளுக்கு மட்டும் "அந்த" கிளாஸ்? இந்த கிளாஸ் எதற்காக இருக்கும் என்று ஆர்வமாய் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.

மாணவியர் அனைவரையும், பள்ளி கருத்தரங்கிற்கு அழைத்து சென்றனர்.ஸ்டாய்ப்பிரீ பிராண்டின் பிரதிநிதிகள் அங்கே அமர்ந்திருந்தனர். அந்த காலத்தில் அதுதான் எங்களுக்கிருந்த ஒரே சானிட்டரி பேட் என்று நினைக்கிறன்.

எங்களை ஏன் அங்கு கூட்டி சென்றார்கள் என்று சத்தியமாக தெரியாது. அவர்கள் அளித்த தகவல் பயனுள்ளதாகதான் இருந்தது. அனால் என் உடலில் எந்த மாதிரி மாற்றம் ஏற்படும் என்பதை சில அந்நியர்கள் விளக்கியபோது

, கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.

ஒரு தாய் தன் மகளிடம் மாதவிடாய்  பற்றி  பேசுவது அவசியம் என்பதை  அறிய தொடர்ந்து படியுங்கள்

எங்களுடன் பகிர்ந்த தகவல் முற்றிலும் அறிவியல் மற்றும்

தொழில்நுட்ப சம்மந்தமாகவும் இருந்தது . கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது .எனக்கு தெரிந்த பல வீடுகளில், இன்றும் தாய்மார்கள் தங்கள் மகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவதில்லை .

மாதவிடாய் பற்றி தேவையான அனைத்து தகவல்களையும் என் மகளுடன் நான்தான்  பகிரப்போகிறேன். இதற்கு தொடர்பான சந்தேகங்கள், பயங்கள் மற்றும் கேள்விகளுக்கு நான்தான் விடைத்தர போகிறேன்.

மாதவிடாய் நம் உடலில் ஏற்படும்  இயற்கை நிகழ்வு.இதுவும், மனித இனத்தை பெருக்க உதவுகிறது. இந்த உண்மையை அவளுக்கு

உணரச்செய்வேன். எனவே, இதற்காக அவமான படாமல், ஒரு பெண் தன்னையும்  தன் உடலையும் நினைத்து பெருமை படவேண்டும்.

மாதவிடாயில் இருக்கும் பெண்ணை அழுக்காகவும் பலவீனமாகவும் உணரச்செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இந்த சமயத்தில் ஏற்படும் பயத்தையும் தடுமாற்றத்தையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதனால்,என் மகள் இது போன்ற துயரத்தை அனுபவிக்காமல்

பார்த்துகொள்ளப்போகிறேன். ஒரு தாயாக, அவள் வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கும்போது, அவளுக்கு பக்கபலமாக இருப்பேன்.

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner