பில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது

lead image

தொழில்நுட்பம் என்று வரும்போது, பில் கேட்ஸூக்கு தான் என்ன பேசுகிறோம் என்று நன்றாகவே தெரியும்.குழந்தைகளுக்கு 'பாதுகாப்பான' வயதில் ஸ்மார்ட்போன் கொடுப்பதை பற்றி சொல்லும்போது, நீங்கள் கேட்டுதான் ஆகவேண்டும்!

இவர் ஒரு நவீன கணினித் தொழில் படைப்பாளர். எனவே, தொழில்நுட்பம் என்று வரும்போது, பில் கேட்ஸூக்கு தான் என்ன பேசுகிறோம் என்று நன்றாகவே தெரியும்.

குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பான’ வயதில் ஸ்மார்ட்போன் கொடுப்பதை பற்றி சொல்லும்போது, நீங்கள் கேட்டுதான் ஆகவேண்டும்!

ஒரு சமீபத்திய நேர்காணலில், குறைந்தது 14 வயது  வரை குழந்தைகள்  ஸ்மார்ட்போன் வைத்திருக்க அனுமதிக்கப்படகூடாது என்று கூறுகிறார்.

பெற்றோர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திரு கேட்ஸை பாராட்டியுள்ளனர். இளம் வயதில் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தில் குழந்தைகள் நேரம் செலவிடுவதை பற்றி சுட்டிக்காட்டுகிறார்.

பில் மற்றும் மெலிண்டாவின் குழந்தைகளுக்கான தொழில்நுட்ப விதிகள்
  • 14 வயது வரை அவர்கள் மொபைல் போன்களை வைத்திருக்கக்கூடாது.திரை நேரம் வரம்பிடப்பட்டு, குடும்பமாக இன்னும் அதிக நேரம் செலவழிக்கவேண்டும்.
  • சாப்பாட்டு நேரத்தில் , மேசையில் தொலைபேசிகள் அனுமதிக்க படாது.
  • குழந்தைகள் சீக்கிரமாக தூங்க செல்வதற்காக திரை நேரத்தை குறைப்பார்கள்.

 

பில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது

Too much screentime can hamper a child’s development. The key is to set rules related to usage.

குழந்தைகளுக்கு ஏன் அதிக அளவிலான திரைநேரம் கெட்டது

உங்கள் குழந்தையின் கவனத்தை பெற முயற்சிக்கும் போது திரைநேரம் உண்மையில் எரிச்சலூட்டும். திரையையே பார்த்துக்கொண்டால் குழந்தைகள் உங்களை பார்க்கவே மாட்டார்.ஆனால், திரைநேரத்தில்  பாதிக்கப்படும் விளைவுகள் இதைவிட ஆழமாக உள்ளது.

இணையத்தின் இருண்ட மற்றும் ஆபத்தான மூலைகளை இது திறக்கிறது.குழந்தை கடத்தல் , சைபர் புள்ளியிங் போன்ற பல விதமான ஆன்லைன் ஆபத்துகளை நோக்கி உங்கள் குழந்தை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் .

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிக்கும்.

மேலும்,  குழந்தைகளை சோம்பேறியாக்கிவிடும். உதாரணமாக,ஒரு குழந்தை  கதை கேட்கும்போது, அவர் கதைகளை கற்பனை செய்து புரிந்து கொள்ள நிறைய புலனுணர்வு செயல்முறைகளை பயன்படுத்த வேண்டும்.இதுவே ஒரு ஐபேட் டேப்லெட், இதை செயலாக்க முடியும்.

சமூக மேம்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நிஜ நண்பர்களை ஆக்கி கொள்வது கடினம்.

உங்கள் வாழ்நாளில், உங்கள் பிள்ளைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போதைஅடிமை  போன்ற  பழக்கத்தை உருவாக்குகிறது.

நாங்கள் திரைநேரம் தவறு என்று சொல்லவில்லை .உங்களுடைய குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் பெரிய பயன்பாடுகள் மற்றும் கல்வி விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் கதைகள் நிறைய உள்ளன.

இதில் விதிகளை அமைப்பதே முக்கியமானது. இந்த

விதிகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று குழந்தைகளிடம் கண்டிப்பாக சொல்லுங்கள்.

எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் – உங்கள் பிள்ளைகளின்
திரைநேரம்  விதிமுறை என்ன?.

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner