பாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.

ஒரு முழுநேர பணிப்பெண்ணை மாதம் 4000 ரூபாய்க்கு கேட்ட ஒரு பிரபலத்தை பற்றி நிறுவனத்தின் உரிமையாளர், அனுபம் சின்ஹால், பேசுகிறார்.

வடா பாவ் மற்றும் மழைக்காலத்திற்காக மட்டுமே மும்பை பெயர்போகவில்லை. அதிவேக வாழ்க்கை முறைக்கும், பணிப்பெண்கள் உதவியும் நகரத்தில் உள்ள  பெண்களுக்கு உதவுவதில்  முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

இதனால்  பல இணையதள வலைத்தளங்கள், மத்தியதர வர்க்க குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், கஃப் பாரேட், ஜுஹு, வெர்சோவாவில் வசிக்கும் உயரடுக்கு குடும்பங்களுக்கும் பணிப்பெண்கள் வழங்கும் சேவையில் உள்ளன.பாலிவுட் பிரபலங்களில் பெரும்பாலானவர் கஃப் பாரேட், ஜுஹுவில்தான்  வசிக்கின்றார்கள்.கடந்த இரு நாட்களாக வந்த செய்திகள் உண்மையானால், சில  பிரபலங்கள் தங்கள் பணிப்பெண்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்டனர் என்பதும் உண்மை.

மும்பையில் முன்னணி பணிப்பெண் வழங்குநர், ஒரு வருடமாக அவர்களது பணியாட்கள், தங்கள்  பணியிடங்களை கண்டறிந்த பல்வேறு அநாகரீக நடத்தை காரணமாக, பாலிவுட் பிரபலங்களை தங்கள் சேவைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த கட்டுரை, இணையத்தளத்தில் விரலாக பரவியது.அந்த போர்ட்டலின் உரிமையாளர், பாலிவுட் பிரபலங்களின் பற்றிய திடுக்கிடும்  இரகசியங்களை வெளியிட்டார். மற்றும், அவர்களது பணிப்பெண்களிடம், ஐந்து பிரபலங்கள் எப்படி மோசமாக மற்றும் தவறாக நடந்துகொண்டனர் என்பதை உதாரணமாக கூறியுள்ளனர்.

ஒரு முழுநேர பணிப்பெண்ணை மாதம் 4000 ரூபாய்க்கு கேட்ட  ஒரு பிரபலத்தை பற்றி நிறுவனத்தின் உரிமையாளர், அனுபம் சின்ஹால், பேசுகிறார்.

1.வீடு வேலை செய்பவர் , தன் தாயாரின் இறுதி சடங்கிற்கு போக மறுக்கப்பட்டார்

[Screenshot courtesy: Bookmybai.com]

ஒரு பிரபலம், ஒரு மாத சம்பளமாக ரூ.4000 க்கு ஒரு ஆண் உதவியாளரை தேடி எங்களிடம் வந்தார்.மகாராஷ்டிராவின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட இது மிகக் குறைவு. பலமுறை கலந்து பேசியபிறகும், ரூ. 10 ,000 – க்கு ஒப்புக்கொண்டார். நான்கு பெட்ரூமை ஒரு நாளைக்கு  ஆறு முறை சுத்தம் செய்வதற்கு இது குறைவான கூலிதான்.

துரதிருஷ்டவசமாக, வேலை செய்பவரின் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்குகள் செய்ய தன் சொந்த ஊருக்கு போக விரும்பினார்.

ஒரு மாற்று ஆளை  அனுப்பும் வரை, அந்த நபரை செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று அந்த “பிரபலம்” கூறினார்.அன்று சனிக்கிழமை மாலை 5.45  எங்கள் அலுவலகம் ஞாயிறு அன்று மூடப்படும்.திங்கட்கிழமை ஒரு மாற்று அனுப்பிவைக்கிறோம், இப்பொழுது அவரை  விடுவிக்க கேட்டுக்கொண்டோம். அதுக்கும்  மறுத்தார்.

திங்களன்று ஒரு மாற்று ஆளை அனுப்பினோம். அனால் அந்த நபர் தன் தாயின் இறுதி சடங்கை தவறிவிட்டார்.இந்த பெண் மீது உண்டான வெறுப்பிற்கு எனக்கு வார்த்தையே இல்லை”என்றார்.

2.அவர் 3 கோடி மதிப்புள்ள காருக்கு சொந்தக்காரர்

. ஆனால், பணியாட்களுக்கு   உணவு கொடுக்க மறுத்தார்

இந்த பிரபலம், மூன்று மாதத்தில், 7  முறை பணியாட்களை மாற்றினார்.

மும்பை புறநகர்ப்பகுதிகளில்  இவருக்கு ஒரு பெரிய வீடு உள்ளது.எங்கள் நிறுவனம் மூலமாக, பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்.பூக்மைபாய்- யில் 6 மாத காலத்திற்குள் பணிப்பெண் வேலையை விட்டு நின்றால், நாங்கள் மாற்று பணிப்பெண்ணை  இலவசமாக அனுப்புவோம். இந்த பணிப்பெண்கள் அனுபவித்த கொடுமை தாங்கமுடியாமல் 7 முறை பேணிப்பெண்களை மாற்றினோம். பணிப்பெண்ணுக்கு உணவளிக்க மறுத்தார். தேநீர் மற்றும் ரொட்டியை மூன்று வேலையும் சாப்பிட சொன்னார். அடியாட்களை கொண்டு எங்களை மிரட்ட பயமுறுத்தினார். இதை தடுக்க நாங்கள்  முழு பணத்தை  திருப்பி கொடுத்தோம்” என்று எழுதினார்.

3. இந்த பிரபலத்திற்கு டுவிட்டரில் 4  லட்சம் ஃபாலோவெர்ஸ் இருக்கிறார்கள்

டுவிட்டரில் 4  லட்சம் ஃபாலோவெர்ஸ் உள்ள இந்த பிரபலம், பணிப்பெண்களை தினமும் அடித்து துன்புறுத்தினார் .சில தழும்புகளைக்கூட அவர்கள் உடலில் பார்க்கலாம்.

இந்த அனுபவம்தான்  நாங்கள் இனி பிரபலங்கள் எங்களால் சமாளிக்க முடியாது என்று நம்பவைத்து.பணிப்பெண்ணிடம் உடல் ரீதியான தாக்குதல்  தினசரி நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன், அந்த பெண்ணை வீட்டைவிட்டு  வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது,உடல் காயங்களை எங்களால் காண முடிந்தது.உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்ய விரும்பினோம்.அனால் அந்த பெண் இதை விரும்பவில்லை.ஒவ்வொரு முறையும் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டால், தன் வேலையை இழந்துவிடும் பயம் இருந்தது.

“நாங்கள் மாற்று பணிப்பெண் அனுப்பாவிட்டால் , எங்களை பற்றி அவதூறாக ட்வீட்ஸ் எழுதுவதாக அச்சுறுத்தினார்.அவர் வீட்டு காவலாளரிடம் நாங்கள் விசாரித்தோம்.அந்த பிரபலம் அடிப்பதால் அந்த வீட்டில் யாரும் ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்ய மாட்டார்கள்” என்கிறார்.

நான்காவது பிரபலம், நல்ல சம்பளம் கொடுத்ததும், பணிப்பெண்ணை அடிமைபோல் நடத்தினார்.

4 வாய்மொழி மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தினசரி விவகாரம்

உலகில் உள்ள எல்லா செல்வத்தையும் பெற்றவர் அவர்.ஆனாலும், அவரது பணிப்பெண் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.அவருடைய பி.ஏ.அவருடைய தேவையை பற்றி எங்களிடம் கூறினார்.ஆரம்பத்தில்,  இந்த நிறுவனத்திற்கு வருங்கால முதலீட்டிற்கான வழிவகைகள் திறந்திருக்கும் என்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

இருப்பினும், ஊழியர்களைக் குறித்த அவரது அணுகுமுறை கல்வித்திறமையற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.

வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தினசரி இருந்தது

இதை தாங்கமுடியாமல் ஒரு பணிப்பெண் அவள் கிராமத்திற்கு ஓடிப்போனாள், திரும்பி வரவில்லை.அவள் மனதில் ஆழ்ந்த பாதிப்பு ஏற்பட்டது.பட்டணத்திற்கும் திரும்பி வரவே மாட்டேன் இன்றி சொன்னாள்.மக்களால் தங்கள் வீட்டு பணிப்பெண்ணை  அடிமைகளாக எப்படி நடத்த முடிகிறது? என்னருடைய சிறிய கம்பெனியினால் வக்கீல் நோட்டீஸ் களை சமாளிக்க முடியாது. பணத்தை திரும்பி கொடுத்ததும் வழக்கு மூடப்பட்டது”

5 ரூ .15000 சேவை கட்டணம் செலுத்த அவர் தயாராக இல்லை

இந்த பிரபலம்,தன் கணவரிடம் விவாகரத்து பெற்று கோடியில் ஜீவனாம்சம் பெற்றார்.இருப்பினும். ரூ .15000 சேவை கட்டணம் செலுத்த அவர் தயாராக இல்லை.

“எங்கள் சேவையில் ஒரு பணிப்பெண் பெற்றார். எவ்வித துஷ்பிரயோகமும் / துன்புறுத்தலும் இல்லை. அனால், எங்களது சேவை கட்டணங்கள் எங்களுக்கு கொடுக்க மறுத்துவிட்டார்.முழு நேர பணிப்பெண்ணுக்கு எங்களுக்கு  மாதம் ரூ.15000 கட்டணம் செலுத்தவேண்டும்.ஆரம்பத்தில், பணம் செலுத்துவதற்காக அவரை தொலைபேசியில் அழைத்தபோது, எங்கள் அழைப்பை ஏற்க மறுத்தார்.”நான் பணம் தர மாட்டேன். என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க” என்று சொன்னார். இவர் தன் கணவரிடம் விவாகரத்து பெற்று கோடியில் ஜீவனாம்சம் பெற்றார். இனி அவரை தொடர்பு கொண்டால், எங்கள் மீது கிரைம் பிராஞ்சில் புகார் தாக்கல் செய்ய போவதாக சொன்னார்” என்கிறார் அனுபம்.

மற்ற பிரபலங்களுக்கும்  மற்றும் உயரடுக்கின் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையுடன், இந்த கட்டுரையை அனுபம் முடிக்கிறார்.

“ஒருசில வழக்குகளைதான்  நான் பட்டியலிட்டிருக்கிறேன். பாலிவுட்டில் இல்லாத சாதாரண வாடிக்கையாளர்களுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை சந்தித்ததில்லை.சேவை குறைபாடு இருந்தால் கூட, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் பிரச்னையை முடித்துக்கொள்வோம்.அனால் இந்து போன்ற பிரபலங்கள், எங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள் .இதனால்தான் நாங்கள் பிரபலங்களுக்கு தடை விதித்துவிட்டோம்” என்கிறார் அனுபம்.

உங்கள் குழந்தைகளுக்கு பணிப்பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்

பணத்தால் ஒழுக்கத்தை வாங்க முடியாது.மேலும் இது போன்ற சம்பவங்கள் ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.குழந்தைகள் நம் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கிறார்கள்.நாம் எப்படி நம் பணிப்பெண்களை நடத்துகிறோமோ அதுபோலதான் குழந்தைகளும் நடத்துவார்கள்.

எழுத்தாளர்/சமையல் வல்லுநர்/ வர்ணனையாளர்  மரியா கோரேட்டி,  குழந்தைகளுக்கு அவர்களை சுற்றிஇருக்கும் எல்லோரையும்   மதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

உங்கள் பிள்ளைகளுக்கு மரியாதையுடன் நடந்து கொல்வதற்கு இப்படியும் சொல்லித்தரலாம்

1 .உங்களுடைய பிரசங்கத்தை நடைமுறைப்படுத்து. எல்லோருடன், குறிப்பாக பணிப்பெண்களுடன்  கண்ணியமாக இருங்கள்.பிள்ளைகள் சுற்றி இருக்கும் போது மட்டுமல்ல, நீங்கள் தனியாக இருக்கும்போதும் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்.

2 .உங்களுக்கு உதவுகிறவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.அன்பும் மரியாதையுடனும் அவர்களை நடத்துங்கள்.அவர்களது முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க மறக்காதீர்கள். உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வார்கள்.

3 .உங்கள் பிள்ளைகளுக்கு நன்றியுணர்வையும் மரியாதையுடனும் இருக்கும்படி  சொல்லிக்கொடுங்கள்.மேலும், அவர்களை தவறாக நடத்த ஊக்குவிக்கவேண்டாம்.

4 . பணியாட்களுடன் தொடர்புடைய பண விஷயங்களைப் பற்றி ஒருபோதும், குழந்தைகளுக்கு முன்  பேச வேண்டாம்.

Source: theindusparent