பாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்

lead image

பாலக் பன்னீரில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை

நாம் அனைவரும் பாலக் ( கீரை) பன்னீர்  சாப்பிடுவதற்கு அனைவரும் விரும்புகிறோம். பாலக்கில் இரும்பு சத்தும், பன்னீரில் கால்சியமும் அதிகம் இருக்கும் என்று பல ஆண்டுகளாக நாம் ஏற்றுக்கொண்ட தகவல்

"இரும்புச்சத்து குறைபாட்டைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி,கீரைதான் என்றும் இரும்புச் சத்தை அதிகரிக்க ஒரு கிண்ணம் பாலக் மட்டுமே போதும் என்று நாம் நம்புகிறோம்.கீரை, அதிக ஊட்டச்சத்து கொண்டது.ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் A, E, K, இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்  ஆகியவை கீரையில் அடங்கியுள்ளது" என்று

திருஷ்டி பிஜலானி , முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்  மற்றும் ஃபிளாப்- யு - லெஸ் இயக்குனர், கூறுகிறார்.

இந்தியாவில் பலர், பாலக் பனீரை விரும்பி சாப்பிடுகிறார்கள். நான், ரொட்டி அல்லது அரிசிஉணவுடன் விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகளுக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது . இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  பால்க் பனீரை சுவைக்காக மட்டுமே சாப்பிடலாம். இதில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.

பாலக் பன்னீர் : நல்ல சுவை. ஊட்டச்சத்து பூஜ்யம்

" கீரைகளில் காணப்படும் இரும்பு வகை இரத்தமற்றது.மாமிசத்தில் இருக்கும் இரத்த இரும்பை காட்டிலும் இந்த கீரை இரும்பை உடம்பால் எடுத்துக்கொள்வது கடினம்"என்கிறார் திருஷ்டி.

இரும்பின் நன்மைகள் அது உறிஞ்சப்படுவதை சார்ந்துள்ளது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகள் மூலம் உடலின் உறிஞ்சுதல் குணத்தை மேம்படுத்தப்படலாம். இரும்பு உறிஞ்சுதல் தடுக்கும்  பொருளான ஆக்ஸலேட், இரும்புடன் கலந்து ஃபெரோஸ் ஆக்ஸலேடாக உருவாகும்.இதை உடம்பால் பயன்படுத்த முடியாதது " என்று திருஷ்டி கூறுகிறார்.

கீரை, கால்சியம் உள்ளடக்கத்திற்காகவும் அறியப்படுகிறது.கீரைகளில் காணப்படும் கால்சியம் உடலிற்கு பயன்படாது

"கீரையில்  உள்ள ஆக்ஸலேட், கால்சியத்துடன் சேர்ந்து , உடல் உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. இதனால் இரும்பு உறிஞ்சுதல் குறைகிறது. இதன் காரணமாக, கீரையிலுள்ள வெறும்  5 சதவீத கால்சியம் தான் உடல் உறிஞ்சும். கால்சியம் இரும்பு உட்கொள்தலுடன் குறுக்கிடுவதால், நீங்கள் நினைத்ததுபோல், பாலக் பனீர் ஆரோக்கியமான உணவு இல்லை" என்று திருஷ்டி. கூறுகிறார்.

அடுத்த பக்கத்தில், பாலக் பன்னீருக்கு பதிலாக நீங்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். Continue Reading

பலாக் பனீரின் ஊட்டச்சத்து நிலவரம்

ஒரு கரண்டி  பாலக் பன்னீரில் உள்ள  ஊட்டச்சத்து நிலவரம் இதோ!

கலோரிகள் - 135 கி.கால்

கார்போஹைட்ரேட்டுகள் - 5 கிராம்

புரதங்கள் - 7 கிராம்

கொழுப்புகள் - 6 கிராம்

பாலக் பன்னீருக்கு மாற்று உணவுகள்

பன்னீர் பாலகிற்கு பதிலாக மட்டார் பன்னீர் சாப்பிட்டு பாருங்கள்.

A photo posted by Srujan Desai (@d.srujan) on Aug 8, 2016 at 12:14pm PDT

"மட்டார் பன்னீர், லுக்கி பன்னீர், பன்னீர் புர்ஜி போன்றவற்றை சமைத்து பாருங்கள்!உங்கள் இரத்தசோகையை போக்க, கீரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சையிலிருக்கும் வைட்டமின் சி, இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்" என்கிறார் திருஷ்டி.

நாம் இதை  நம்புவது கடினமாக இருந்தாலும் .துரதிருஷ்டவசமாக இதுதான் உண்மை!

மேலும் வாசிக்க: வீட்டில் மென்மையான, வேதியியல் இல்லாத பன்னீர் செய்ய எப்படி!

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner