பழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்

பழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்

பவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை, உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.

பவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை,  உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு  பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.

நகரத்தில் மெர்குரி அளவு உயர்ந்து கொண்டுபோகும் நேரத்தில்,கோடைகாலத்தில் உடல்நலம் குறித்து கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.குழந்தைகளுக்காக , பெற்றோர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்.தீவிர வெப்பம் பெரும்பாலும் குழந்தைகளில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, பல ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும்

தினமும் பழச்சாறை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும்,உணவியல் நிபுணர்கள் முழு பழம் சாப்பிடுவதன்  முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.பவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை,  உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு  பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.

."பழ சாறுகள் தயாரிக்க பழத்தை பிழியும்போது, அதன் தோல் நீக்கப்படுகிறது. இதனால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆப்பிள், கொய்யா,  ஆரஞ்சுகளில் இருக்கும் பெக்டின் போன்ற நார்ச்சத்துகளை நாம் இழக்கிறோம்.  வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் அன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களும் பழ சாறுகளில் இல்லாமல் போய்விடுகின்றன. இவை எல்லாம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மிக அவசியம் " என்கிறார் பவித்ரா.

"தர்பூசணி,கிரிணி , சாத்துக்கொடி மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் நீர் நிறைந்தவை.உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. மாம்பழம், லிச்சீ மற்றும் பப்பாளியில் அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் நார் சத்து  நிறைந்தது. இவை யு.வி.யிலிருந்து மட்டும்  பாதுகாக்காமல், குழந்தைகளின்  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது"
பழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்

தினமும் குறைந்தபட்சம் இரண்டு  பழங்களாவது சாப்பிடுவது முக்கியம். ஒவ்வொரு பழத்திலும் வெவ்வேறு உடல்நல நன்மைகள் உள்ளன .அதற்கேற்ப, பெற்றோர்கள் இந்த பழங்களை தேர்ந்தெடுக்கலாம். பழங்களை நுகரும் பயன்களை பவித்ரா எடுத்துக்காட்டுகிறார்.

போம் பழங்கள்: ஆக்சிஜன்  தடுப்பான், ஆன்டிவைரல்  மற்றும்  டியூமர் கட்டி தடுக்கும் பண்பு இருக்கிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவையும் உள்ளன. இந்த அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆப்பிள் மற்றும் பேரிக்காயை குறைந்தது  ஒன்றாவது சாப்பிடவேண்டும்.

சிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி  மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள், ஸ்கர்வியிலிருந்து பாதுகாக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் தர்பூசணி போன்ற சிட்ரஸ் பழங்களை  குழந்தைகள் எப்போதும்  சாப்பிட விரும்புகிறார்கள்.

வெப்பமண்டல பழங்கள்: கலோரி அடர்த்தியான இத்தகைய பழங்கள்,பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக  முக்கியம்.வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசி,  வெப்பமண்டல பழங்களுக்கான  சில உதாரணங்கள்.

கல் பழங்கள்:  பொட்டாசியம் நிறைந்தவை. நரம்புகள் மற்றும் தசைகளை  ஊக்குவிக்கிறது. அவர்கள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். . ஆப்பிரிக்க, திராட்சை, செர்ரி மற்றும் பிளம்ஸ், இந்தியாவில் வளர்க்கப்படும் சில கல் பழங்கள்.

உண்ணத்தகு பழங்களின் தோல்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. இதை எதற்காகவும் தவிர்க்கப்பட கூடாது. இதிலிருக்கும் பழம் கூழ் நாரிலுள்ள  பிற முக்கிய சத்துக்கள் உள்ளது.  உதாரணமாக, ஃபிளாவனாய்டுகள் அதிகமாக இருக்கும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெண்மையான பகுதி, அதை சாறாக மாற்றுவதால் நீக்கப்படுகிறது.

மேலும், பழ சாறுகள்,  இரத்த சர்க்கரையை வேகமாக கூடுகிறது. ஆகையால், சரியான வளர்ச்சியை ஆதரிக்க , உணவில் முழு பழங்கள் சேர்க்க வேண்டியது  மிக அவசியம்.

கோடைக்கால வெப்பம் உங்கள் குழந்தையின் ஆற்றலை முற்றலும் உறிஞ்சுகிறது. உங்கள் உங்கள் பிள்ளைகளின் ஆற்ற லை உடனடியாக உயர்த்தக்கூடிய பழங்களின் பட்டியல் இதோ!

மாம்பழம்: ஒரு கப் கேட் செய்த மாம்பழத்தில் , தினசரி பரிந்துரைக்கப்பட்ட, 25% வைட்டமின் ஏ உள்ளது. மாம்பழத்தின் 150 கிராம், 86 கலோரிகளை வழங்குகிறது.

 • நன்மைகள்: மாலைக்கண் நோய், எரிச்சல்  அரிப்பு மற்றும் கண் வறண்டுபோகும் தன்மையை தடுக்கிறது.இது  செரிமானத்தை ஊக்குவிப்பதில் உதவுகிறது.புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை குணப்படுத்த உதவுகிறது.

            RBC எண்ணிக்கை மற்றும் குழந்தைகள் மூளை செயல்பாடு   அதிகரிக்கிறது. நம் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்: செரிமான நொதிகள் மற்றும் மான்டிஃபெரின் நாரத்திரியோல் மற்றும் ரெஸ்வெராட்ரால் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் உள்ளன. மேலும்,  குளுடாமிக்  அமிலம் மற்றும் பெக்டினும் இதில் உள்ளது.

தர்பூசணி : தர்பூசணியில் 92% நீர் இருக்கிறது.கோடை பருவத்தில், நீரிழிவு ஆபத்தய் குறைக்க, குழந்தைகள் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

 • நன்மைகள்: உடலில் உருவாகிய, ஒற்றை மின்னணு உருபை  போராட உதவுகிறது . உடலின் செல்களை ஏற்படுத்தும் சேதத்தை தடுக்கிறது. நல்ல கண்பார்வையை  உறுதி செய்கிறது.  ஆற்றல் உற்பத்தி, உகந்த நரம்பியல் செயல்பாடுகள்  மற்றும் செரிமான அமிலம் தூண்டுவதன் மூலம், ஜீரணத்தை மேம்படுத்துகிறது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்: சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட் மிகுந்த பழம்.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், உடலின்  சீரான செயல்பாடுகளில் உதவுகிறது.

கொய்யா பழம்: இதை தோலுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இதன்  தோல் ஆரோக்கியமான நலன்களைக் கொண்டுள்ளது.உதாரணமாக, 1  கொய்யா பழம், தினசரி பரிந்துரைக்கப்பட்ட 12%  நார்ச்சத்து உள்ளது.

 • நன்மைகள்:  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொதுவான நோய்த்தாக்குதல்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் எதிராக உடலை பாதுகாக்கிறது.உடலில் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிகால்களை ( ஒற்றை மின்னணு உருபு) நடுநிலைப்படுத்தி,  புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்திற்காகவும், கண் பார்வையையும்  அதிகரிக்கிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து , அறிவாற்றல் செயல்பாட்டை  தூண்டுகிறது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்: வைட்டமின் சி, வைட்டமின் ஏ , நார்ச்சத்து, பெக்டின், லிகோபீன், குர்கெரிடின், வைட்டமின் B3 மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றைக் கொண்டுள்ளது,  மேலும் நியாசின் மற்றும் பைரிடாக்ஸின் மற்றும் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் கொண்டுள்ளது கொய்யா பழம்.

திராட்சைப் பழம்: பிரபலமான கோடை பழங்களில் ஒன்றாகும்.யோகார்டில்  மூழ்கப்பட்ட உறைந்த திராட்சை, , இது ஒரு முழு பழமாக உண்ணலாம். ஒரு புத்துணர்ச்சியான கோடை சிற்றுண்டாக இருக்கும்.

 • நன்மைகள்:  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி,கண்களை மேம்படுத்துவதில் உதவுகிறது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்: வைட்டமின் சி நிறைந்த திராட்சையில்  கொழுப்பு, மற்றும் சோடியம் மிக குறைவாக உள்ளது.

வெள்ளரிக்காய்: கோடைகாலத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெள்ளரிக்காயால், உடல் குளிர்ச்சியடைந்து, குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

 • நன்மைகள்: பொட்டாசியம், வைட்டமின் A, K மற்றும் சி அடங்கியுள்ளது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்: இதில் கலோரி மிக குறைவாக உள்ளது.இரத்த அழுத்தத்தை  கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆப்பிள்: ஆப்பிளை 'ஊட்டச்சத்து அதிகார மையம்" என்றே சொல்லலாம்.இதன் அதிகபட்ச நன்மைக்காக, முழு பழமாக உண்ணப்பட வேண்டும்,
பழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்

 • நன்மைகள்:  RBC எண்ணிக்கையை  பராமரிக்க உதவுகிறது. மேலும்,   நரம்பு மண்டலத்தின்  ஆரோக்கியத்தை காக்கிறது.இது புற்றுநோய்களின் உருவாக்கத்தை தடுத்து ,குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம்  : பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம ஆதாரங்கள் நிறைந்த பழம்.மேலும், அஸ்கார்பிக் அமிலம், உணவு நார்ச்சத்து, மற்றும் ஆக்ஸிஜனேற்றி பண்பும் உள்ளது.வைட்டமின்கள், ரிபோப்லாவின், தியாமின் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவை உள்ளன

ஆரஞ்சு : சாலடின் ஒரு பகுதியாக ஆரஞ்சு துண்டுகள் சேர்க்கவும்.

 • நன்மைகள்:புற்றுநோயை தடுக்கிறது. மேலும், புற்றுநோயை குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.
 • ஊட்டச்சத்து உள்ளடக்கம் : கால்சியம், பொட்டாசியம், பெக்டின் மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது.

Source: theindusparent

Written by

theIndusparent