"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்?" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்!

"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்?" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட  விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்!

பஸ்ஃபீட் இந்தியா கட்டுரையில், பிரபலங்களின் அழகுடன் தொடர்புடைய தொன்மங்களை உடைத்தெறிந்தார். எல்லா இளைஞரை போலவே,சோனம் கூட, தனது உடலில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து வருந்தினார்.

"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்?"
சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்!

வெள்ளி கரண்டியுடன் பிறந்து, வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆடம்பரங்களையும் பெற்றிருப்பதாக பலர் நினைத்தாலும், உண்மையில், நம் கல்லூரி பருவதில் சந்தித்த அனைத்து இன்னல்களையும் அவமானங்களையும், சோனம் கபூரும் சந்தித்திருக்கிறார்.

பஸ்ஃபீட் இந்தியா கட்டுரையில், பிரபலங்களின் அழகுடன் தொடர்புடைய தொன்மங்களை உடைத்தெறிந்தார். எல்லா இளைஞரை போலவே,சோனம் கூட, தனது உடலில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து வருந்தினார்.

A photo posted by sonamkapoor (@sonamkapoor) on Aug 23, 2016 at 4:47am PDT

"ஒவ்வொரு பெண்ணையும் போலவே, என் படுக்கையறை கண்ணாடியின்முன் பல இரவுகள் கழித்தேன்.ஏன் என் உடல் நான் நினைத்ததுபோல் அமையவில்லை என்று யோசிப்பேன். என் வயிற்று மடிப்பை எப்படி குறைப்பது ? ஏன் என் கைகள் நெளிந்தாடுகிறது ?நான் ஏன் சிகப்பாக இல்லை ? என் கண்ணிற்கு கீழ் ஏன் கருவளையம் இருக்கிறது ? என் வயது ஆண்களை விட நான் ஏன் உயரமாக இருக்கிறேன் ? என் உடலில் செல்லுலாய்ட் எப்பொழுதும் இருக்குமா? "என்று அவர் எழுதுகிறார்.

உறவினர்களின் அவமதிப்புக்குரிய கருத்துக்களும் அவருடைய துயரங்களை அதிகரித்தது. " நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் ஆகும்."ஒரு உறவினர் கேட்டார்.

ஒரு சூப்பர்ஸ்டாராக இருப்பது எளிதல்ல

சஞ்சய் லீலா பன்சாலியின் " சவாரியா" திரைப்படம்தான், சோனம் கபூரின் தொழிற்துறையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
படப்பிடிப்பிபொழுது, தான் எப்படி திரையில் தோன்றப்போகிறோம் என்று சோனம் கவலைப்பட்டார்.

Just a reminder to all my pretty ladies out there ! Be whoever you want to be & always do whatever makes you happy!

A photo posted by sonamkapoor (@sonamkapoor) on Jul 28, 2016 at 2:00am PDT

" ஒரு பேக்லஸ் பிளவுஸில் என்னை ஆடச்சொன்னால், என் கொழுப்பு சுருள்கள் என் தொழிற்துறை பாதிக்குமோ என்று பயந்தேன். உடல் பருமனான பெண்ணை பார்க்க டிக்கெட் வாங்கிக்கொண்டு வரமாட்டார்கள்" என்று எழுதினார்.

ஒரு நடிகையாக இருப்பதற்காக, எடை குறைவதற்கான ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பற்றி சோனம் கூறுகிறார்.

சோனம் கபூரின் டயட் உணவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்தைப் படிக்கவும்! Continue Reading

"நான் தொடர்ச்சியாக டயட்டில் இருந்தேன்.
சில நேரங்களில் தென் கடற்கரையில்.மற்ற நேரங்களில், அட்கின்ஸில். விரக்தியினால்,தினமும் அன்னாசிப்பழங்களை சாப்பிடும் டயட்டை முயற்சித்தேன். ஸ்பின்னிங் வகுப்புகளில் மிகவும் கடினமாக உழைத்தேன். யோகாவை பல மணி நேரத்திற்கு தொடர்ந்து செய்தேன் . உணவோடு ஆரோக்கியமற்ற உறவில் இருந்தேன்.சில வாரங்கள், சாப்பிடாமல் கூட இருந்தேன்" என்கிறார்.

சூப்பர்ஸ்டார் ஆன பிறகும், சுய வெறுப்பு அவரை விட்டு செல்லவில்லை. தன்னை விரும்புவதற்கு பதிலாக தன்னை தானே வெறுப்பதற்கு புதிய காரணங்கள் கண்டுபிடித்தார்.

"நான் ஒரு நடிகையாக என்னை உருவாக்கிய உடலை விரும்பி ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக,அதை வெறுக்க நான் புதிய காரணங்களை கண்டுபிடித்தேன்.என் கைகளிலும் தொடைகளையும் பெரிதாக்கப்பட்ட புகைப்படங்கள்,முக களங்கத்தை சுட்டிக்காட்டும் சிவப்பு வட்டங்கள் உடைய ஆன்லைன் கட்டுரைகள் வெளிவந்தன. சில படங்கள் வெளிவந்தபோது, ஷோபா டே " இவருக்கு நடிகைக்கான கிளாமருக்கு செக்ஸ் அப்பீலும் இல்லை" என்று என்னை பற்றி விமர்சித்தார்" என்கிறார்.

மக்கள் தட்டையான மார்புடையவள் என்று அழைக்க தொடங்கினார். அவரது சி- கப் மார்பக அளவை காபி வித் கரன் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

என்னென்ன மாற்ற வேண்டும்

" அழகிற்கான விதிகள் கடுமையானவை. இதில் வெற்றி பெறுவது சுலபமில்லை. அனுஷ்கா ஷர்மா மெலிந்த உடலிற்காக அவமானப்படுத்த பட்டார். சோனாக்ஷி சின்ஹா ​​ பருமனான உடலிற்காக விமர்சிக்கப்பட்டார்.
கத்ரீனா கைஃப் தன் கட்டான உடலிற்காக அவமானப்படுத்த பட்டார்.இவர்கள் அனைவருமே மிக அழகான பெண்கள்தான்" என சோனம் எழுதுகிறார்

மக்களிடையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர பெண்களால் மட்டுமே முடியும்.இந்த கடுமையான காலத்தில், தோழி நம்ராதா சோனியும்
மற்றும் அவளுடைய சகோதரி ரியாதான் பக்கபலமாக இருந்து ஊக்குவித்தனர்

தற்பொழுதைய கலாச்சாரத்தின் பிரச்சனை, பெண் அழகுக்கான கடுமையான வரையறைகள். இதில் பெண்களிடம்தான் தீர்வு உள்ளது. நான் திரைப்பட துறையில் நுழைந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. என் தோழிகளின் ஊக்குவிப்பால், என் சுயமரியாதை ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்தது. என் வாழ்வில் என்னை ஊக்குவித்த பெண்கள்,அன்பும் ஆதரவும், ஒரு சகோதரி அல்லது சக பணியாளரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும் என்று புரியவைத்தார்கள் "என்று அவர் எழுதுகிறார்.

Source: theindusparent

Any views or opinions expressed in this article are personal and belong solely to the author; and do not represent those of theAsianparent or its clients.

Written by

theIndusparent