நீங்கள் தெரிந்துகொள்ள கர்ப் சன்ஸ்காரும்அதன் பல நலன்களும்

நீங்கள் தெரிந்துகொள்ள கர்ப் சன்ஸ்காரும்அதன் பல நலன்களும்

கருப்பையில் கல்வி' என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொல்தான் கர்ப் சன்ஸ்கார். ஒரு குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சி அவர் கருத்தரிக்கப்படும் நேரத்திலிருந்து தொடங்குகிறது என்ற நம்பிக்கையிலிருந்து உருவாகிறது

எல்லோரும் ஒரு ஆரோக்கியமான குழந்தைக்குதான் ஆசைப்படுவார்கள்.கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டத்தைப் பெறுவதற்கு எதைவேண்டுமென்றாலும் செய்வார்கள்.இது கர்ப் சன்ஸ்ஸ்காரர் எனக் கூறப்படும் ஆயுர்வேத நடைமுறையில் இதில் கூறப்படுகிறது. இதில் மெதுவாக இந்தியாவில் வேகத்தை பெறுகிறது. கர்ப் சன்ஸ்கர், கர்ப்ப காலத்தில் வழங்கும் பல நன்மைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது.

கர்ப் சன்ஸ்கார் என்றால் என்ன?

'கருப்பையில் கல்வி' என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொல்தான் கர்ப் சன்ஸ்கார். ஒரு குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சி அவர் கருத்தரிக்கப்படும் நேரத்திலிருந்து தொடங்குகிறது என்ற நம்பிக்கையிலிருந்து உருவாகிறது . இது கர்ப்ப காலத்தில் தாயின் மனநிலை, குழந்தை மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலாஜி தம்பே, ஆயுர்வேத கர்பா சன்ஸ்காரின் ஆசிரியர்.கூறுகையில், "பெண்களின் கர்ப்பகாலத்தின் ஆரம்பதிலேயே வழிகாட்டினால், இது சமுதாயத்தில் நல்ல பலன்கள் ஏற்படுத்தும்"
garbh sanskar inside

பல ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒரு பயிற்சி, கர்ப் சன்ஸ்கார், தாயின் கருப்பையில் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் நிலைப்படுத்தவும்  உதவுகிறது. கர்ப் சன்ஸ்கார்,கருவிலுள்ள குழந்தை, இசை, ஒலிகள் மற்றும்  கர்ப்பத்தில் தாயின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை போன்ற வெளிப்புற தாக்கங்களுக்கு பதிலளிக்க முடியும்.

உங்கள் குழந்தைக்கு கர்ப் சன்ஸ்கர் உடல்நலப் பயன்களைப் பற்றி அறிய அடுத்த பக்கத்தில் வாசித்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தைக்கு சில  ஸ்லோக மந்திரங்களை போதிப்பதும்.கர்ப்பத்தில் உங்கள் குழந்தையுடன் பேசவும், இசை கேட்கவும், பூஜைகள்  போன்ற ஆன்மீக ஈடுபாடுகள்,தியானிப்பது , ஆரோக்கியமாக சாப்பிடுவது போன்ற நடைமுறைகளை கர்ப் சன்ஸ்கார் உள்ளடக்கியது.
mother and baby

உங்கள் சிசுவுக்கு எப்படி உதவுகிறது

1500 முதல் 500 கி.மு. வரை பண்டைய இந்து நூல்களிலும் வேதங்களிலும்

கர்ப் சன்ஸ்காரை பற்றி காணலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.சுமார் 400 கி.மு. எழுதப்பட்ட மகாபாரதத்திலும் இது  குறிப்பிட்டுள்ளது. பண்டைய ஆயுர்வேத கோட்பாட்டின் முக்கியமான பகுதியாகவும் அமைந்துள்ளது.

கர்ப் சன்ஸ்காரில், பாரம்பரிய உணவு திட்டம், யோகா, இசை மற்றும் ஒழுக்கம் சான்ற  பரிந்துரைகளை உள்ளடக்கியது.தாயை சுற்றி ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்க உதவும்.

இதை பின்பற்றிய தாய்மார்கள் குழந்தைகளை பேசுவதில்  ஊர்ந்து செல்வதில், பிற குழந்தைகளை விட தங்கள் குழந்தை நன்றாக தேர்ச்சி பெற்ற அனுபவம் இருக்கிறது. இதுபோன்ற ஆரம்பகால மைல்கற்களை குழந்தைகள் எளிதில்  கடந்து செல்வார்கள்  என்று கூறுகின்றனர்.மற்றவர்கள் தங்கள் குழந்தை, மாற்று குழந்தைகளோடு ஒப்பிடுகையில் நன்று தூங்குகிறார்கள்.மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

உங்கள் சிசுவிற்கு  உதவும் மற்ற வழிகள்:

1 குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது:

குழந்தையின் மூளை 60 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் என்பது அறிவியல்.அதே நேரத்தில் கருப்பையில் உள்ள சிசு, வெளிச்சம், இசை மற்றும் பிற இயக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்.

கருவுற்றிருக்கும் தாய் மகிழ்ச்சியுடன் இருக்கையில், அவள் உடலில் ஆரோக்கியமான ஹார்மோன்கள் பரவுவதில் உதவுகிறது, அவளது குழந்தையின் நல்வாழ்வை நேர்மறையாக பாதிக்கிறது.

2. குழந்தையை அமைதியாக வைத்து, நேர்மறையாக இருக்க உதவுகிறது:

நல்ல இசை கேட்பது சாதகமான தன்மையை அதிகரிக்கிறது. மற்றும் சிசுவிற்கு நல்லதொரு அதிர்வு ஏற்படுகிறது.விஞ்ஞானத்தின் படி, கருவுற்றிருக்கும்போது, குழந்தையால் தாயின் குரலைக் கேட்க முடியும்.குழந்தையின் மனநிலை மற்றும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கும்.

3  பந்தத்தை பலப்படுத்துவது:

தாயின் குரலை விட குழந்தையை வேறு எந்த விஷயத்தாலயும் அமைதியாக்க முடியாது.

குழந்தை, இசை அல்லது கதைகள் தாயிடம் கேட்கும் போது, குழந்தை  மிகவும் அமைதியாகவும் சமாதானமாகவும் பிறக்கும்.பிறக்கும் முன் தாயுடன் நல்ல  உறவை நிலைநிறுத்தும்.

உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கங்களைக் கொடுக்கும்.மேலும் எச்சரிக்கையாகவும், நம்பிக்கையுடனும், குழந்தை பிற்காலத்தில் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.தாய்ப்பாலூட்டுவது சீராக்க உதவும்.ஒரு தாய்க்கும் ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த உதவுகிறது.

4  . குழந்தையின் மூளை வளர்வதற்கு உதவுகிறது  

கர்ப் சன்ஸ்காரின்  ஒரு பகுதியாக  வீணா கேட்பதும்  வேதங்களின் அதிர்வும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் உதவுகிறது.அபிமன்யு  கருவில் இருக்கும்போது,தந்தை அர்ஜுனன் தாயிடம் சொல்லியதைக் கேட்து சக்கரவியூகத்தில்  ஊடுருவக் கற்றுக்கொண்டான் என்பது நினைவிருக்கிறதா ? ஆனால், அபிமன்யு முழு தந்திரத்தையும் கற்றுக் கொள்வதற்கு முன் அவன் தாய் தூங்கிவிட்டார்.

கர்ப் சன்ஸ்கர் , உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நிறைய நன்மைகளைத் தருகிறது என்பது உண்மை. ஒவ்வொரு  கருவுற்ற தாயாரும் இதை  முயற்சி செய்ய வேண்டும்.இங்கே நீங்கள் கேட்கக்கூடிய கர்ப் சன்ஸ்கார் இசை இதோ!

Source: theindusparent

Written by

theIndusparent