நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்

உங்கள் குழந்தைகள் பிஸியாக வைக்க ஒரு சிறந்த வழி பொம்மைகள்தான் உணர்வுகள் மற்றும் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.எனினும், அனைத்து பொம்மைகளும் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை.இதோ நீங்கள் தவிர்க்க வேண்டிய பொம்மைகள் பட்டியல்.

உங்கள் குழந்தைகள் பிஸியாக வைக்க  ஒரு சிறந்த வழி பொம்மைகள்தான்

உணர்வுகள் மற்றும் மூளை  வளர்ச்சியை  அதிகரிக்க உதவும்.எனினும், அனைத்து பொம்மைகளும்  உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை.இதோ நீங்கள் தவிர்க்க வேண்டிய பொம்மைகள் பட்டியல்.

செல் போன், ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் உண்மையற்ற பொம்மைகள்

உங்கள் குழந்தையின்  கவனத்தை திசைதிருப்பக் கூடும் என்றபோதும், செல்போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகள் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதில்லை. உங்களுடைய குழந்தை செல்போனோடு  விளையாடுவது அபாயகரமானது.அதை தற்செயலாக வாயில் போட்டுக்கொண்டால்  ஷாக் அடிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

ரிமோட் கண்ட்ரோலிலும் இதேதான் பிரச்னை. பேட்டரிகள் எடுத்து, தற்செயலாக விழுங்க நேரிடும். பொம்மையாக இல்லாத வேறு எந்த பொருளையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம்.

சிறிய பொம்மைகள் தொண்டையில் சிக்கிகொள்ள வாய்ப்புகள் அதிகம்

பளிங்கு, பிரிக்கப்படக்கூடிய சிறிய பாகங்கள் கொண்ட பொம்மை இதில் அடங்கும்.ஒரு விதியாக, உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் எந்த பொம்மையும் கழிப்பறை காகிதத்தின் அட்டை குழாய் உள்ளே பொருந்த கூடாது.அதனுள்ளே பொருந்துகிறது என்றால், அந்த பொம்மை விழுங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கூர்மையான அல்லது துண்டிக்கப்பட்ட முனைகளைக் கொண்டிருக்கும் எந்த பொம்மைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

வாக்கர்ஸ்

கார்டினல் சாண்டோஸ் மருத்துவ மையத்தில் பணியாற்றும்  டாக்டர் விக்டோரியா ஆங் படி, "வாக்கர்ஸ் குழந்தைக்கு எந்த விதத்திலும் நடக்க கற்றுக்கொடுப்பதில்லை.வாக்கரால் பல குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.உங்கள் பிள்ளைக்கு காயம் விளைவிக்கக்கூடிய ஒரு காரணியாக மட்டுமே செயல்படுகிறது.

தவிர,  வாக்கர் இல்லாதபோதும் தங்கள் சொந்த வழியில் நடக்க கற்றுக் கொள்ளலாம்.

டிராம்போலின்

டிரம்போலின்கள் மகிழ்ச்சியாக தோன்றலாம். ஆனால், .ஒரு டிராம்போலைன் பயன்படுத்துவது  குழந்தைகளுக்கு  மிகவும் ஆபத்தானது.வளர்ந்த குழந்தைக்கு கூட, கண்டிப்பான மேற்பார்வை தேவைப்படும்.

உடற்பயிற்சி செய்வதற்கும் கேளிக்கைக்கும் நிறைய வழிகள் உள்ளன, ஒரு டிராம்போலைன் பெறுவது பற்றி நினைத்தால், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

சந்தேகத்திற்குரிய உற்பத்தியாளர்கள் தயாரிக்கும்பொம்மைகள்

டிவிசொரியா  போன்ற இடங்களில் மலிவான பொம்மைகளை  கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அதில் எந்தவித தீமையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? பொம்மைகள் தயாரிக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்கின்றனர். பின்னர் அரசாங்க பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதில்லை.பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தைகளின் பொம்மைகளில் என்ன வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கிறார்கள் என்பது முக்கியம்.

லெட் போன்ற நச்சு பொருட்கள் சில நேரங்களில் மலிவான பொம்மைகளில் காணலாம்.உங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது  மிகவும் முக்கியமானது. இது போன்ற பொம்மைகளை பயன்படுத்துவதன்மூலம் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கும்.

Source: theindusparent

Written by

theIndusparent