நிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா?

நிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா?

நிபுணர் டாக்டர் விகாஸ் சாத்விக்,பசுவின் பாலை விட ஏன் பனீர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு பதிலளிக்கிறார்

பெற்றோர்களாகிய நமக்கு, குழந்தைகளின் ஆரோக்கியமும், சமச்சீர் உணவும்தான் கருத்தில் இருக்கும். குழந்தைகள் தாய்ப்பால் கட்டத்த்தில் இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்கும்.அதன் பிறகுதான் குழப்பமே.

ஒரு குழந்தையின் முதல் திடமான உணவு மற்றும் அதை பின்தொடரும் உணவை பற்றியும்தான் பெரும் கவலை.உங்கள் குழந்தையின் ஜீரணிக்கும் திறன் மற்றும் எந்த உணவு குழந்தை நலனை ஊக்குவிக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அவசியம்தான்.

நம்புங்கள்,உங்கள் எல்லா கேள்விகளும் செல்லுபடியாகும். நீங்கள் திடமான உணவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர்,  எப்படி மற்றும் எப்போது அறிமுகப்படுத்துவதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு குழந்தையின் செரிமான அமைப்பு

ஒரு குழந்தையின் செரிமான சக்தி  மெதுவாக முதிர்ச்சியடையும் . முதல் சில மாதங்களில், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை ஜீரணிக்க முடியும் போது,அவர்களின் பாங்க்ரியாஸ் என்று சொல்லப்படும் கணையம் முழுமையாக விருத்தி அடைந்திருக்காது.

இதனால், உங்கள் குழந்தை செரிமான நொதிகளை குறைந்த அளவு உற்பத்தி செய்யும்.தாய்ப்பாலும் உமிழ்நீரும் இணைந்து, சத்துக்களை முறிவு செய்து ஜீரணிக்க உதவும்.
ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, உங்கள் குழந்தை உடலின் மெதுவாக வளர்ச்சி அடையும்.கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஸ்டார்ச்சை ஜீரணிக்க தேவையான  நொதிகள் உற்பத்தி செய்யும். கொழுப்பை , தன் 9 வது மாதத்தில்தான் குழந்தையால் ஜீரணிக்க முடியும்.தேவையான லைபேஸ் மற்றும் பித்த உப்புகள் உற்பத்தியாகும் இந்த சமயத்தில், செரிமானத்தில் அதிக அளவில் உதவும்.அதனால் 9 மாதத்திற்குப்பின், உங்கள் குழந்தையின் உணவில் கொழுப்பு சேர்த்து கொள்ளலாம்.
paneer

ஒரு குழந்தையின் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டதால், தற்பொழுது மிக முக்கியமான கேள்விக்கு செல்லலாம் - என் குழந்தைக்கு பசு பால் மற்றும் பனீர் கொடுக்கலாமா?

என் குழந்தைக்கு பசு பால் மற்றும் பனீர் கொடுக்கலாமா?

தாய்ப்பாலை காட்டிலும் பசும்பால் மிகவும் கனமானதாக இருப்பதால், ஜீரணிப்பது எளிதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.எனவே பசும்பாலிற்கு பதிலாக தயிர் அல்லது பனீர் கொடுக்கலாம்.

ஏனெனில் இந்தஇரண்டு உணவுகளிலும் ,  லாக்டோஸ் சிறிய சிறு மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

குழந்தைகளுக்கு பால்  சார்ந்த உணவை கொடுப்பது மற்றும் இதுபற்றி பொருத்தமான கேள்விகளுக்கு இண்டஸ் பாரென்டிடம் பதிலளித்தார், டாக்டர் விகாஸ் சாத்விக்,  தலைவர், நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை  மருத்துவம் , மதர்ஹூட் மருத்துவமனை .

குழந்தைகள்  பால் சார்ந்த உணவை தொடங்க சரியான வயது என்ன?

டாக்டர் சாத்விக் :  ஆறு மாத குழந்தைகளுக்கு  தயிர் அல்லது தயிர் போன்ற பால் பொருட்கள் கொஞ்சகொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம். . அதிக உப்பு உள்ளடக்கம் காரணமாக ஒரு வருடம் கழித்துதான்   சீஸ்  கொடுக்கவேண்டும். குறைந்த உப்பு சீஸ் கொடுக்கலாம். குடும்பத்திற்கு அல்லது குழந்தைகளுக்கு பசும்பால் ஒவ்வாமை இல்லையென்றால்,  குழந்தைக்கு டாய்ரி என்று சொல்லப்படும் பால் சார்ந்த உணவை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சீஸ்  கொடுப்பதற்கு முன்னால், தொண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க  அதை உருக்கவேண்டும். அதிக இரசாயனங்கள் கொண்டிருப்பதால், செயற்கை இனிப்பு கொண்ட யோகர்ட்  உணவை தவிர்க்கவும்.

குழந்தைகளுக்கு என்ன வகையான சீஸ் வழங்கப்பட வேண்டும்? எங்கள் பனீர் சிறந்ததா? அப்படியானால், ஏன்?

டாக்டர் சாத்விக் :  சீஸூடன் ஒப்பிடும்போது, வீட்டில் தயாரிக்கப்படும் பனீர் சிறந்தது.  பல்பொருள்  அங்காடிகளிலிருந்து, பனீர்  வாங்குவதற்கு பதிலாக  வீட்டிலே தயார் செய்த பனீரை கொடுங்கள் .

சைவம் சாப்பிடுவர்களின் புரதத்தின் முக்கிய ஆதாரமாக பன்னீர் உள்ளது.இதில் வைட்டமின், கொழுப்பு மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் உள்ள உணவாக பனீர் இருக்கிறது.  6-7 மாத குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன . எனவே தாய்ப்பாலுடன், பனீரும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம்.
paneer

3  வயது  குழந்தைக்கு எவ்வளவு பனீர் கொடுக்கலாம்?

டாக்டர் சாத்விக் : ஒரு சின்ன கியூப் ( கனசதுரம்) பனீர் 6-8 மாத குழந்தைக்கு போதும். குழந்தை வளர்ந்தவுடன்,  2 முதல் 3 சிறிய க்யூப்ஸ்,ஒரு வாரத்தில்  3 முதல் 4 முறை உண்ணலாம்.குழந்தைக்கு கொடுத்து, ஏதாவது எதிர்வினைகளையும் ஒவ்வாமையும் இருக்குமா என்று பாருங்கள்

குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றதாக இருந்தாலும் பனீர் கொடுக்கலாமா ? இல்லையென்றால், இதற்கு மாற்று என்ன?

டாக்டர் சாத்விக் : உங்கள் பிள்ளை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றதாக இருந்தால் பால் உணவுகள்  குறைப்பது  நல்லது.  லாக்டோஸ் நொதிகள் அகற்றப்படுவதால் , தயிர் அல்லது யோகார்ட் கொடுக்கலாம். புரதங்கள் மற்றும் கால்சியம் கொண்டிருக்கும் சோயா பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும்,  குழந்தைகளுக்காக சமைக்கும்போது, பொறித்த பனீருக்கு பதிலாக வறுத்த பனீரை தேர்ந்தெடுங்கள்.

குழந்தைகளுக்கு 2 எளிய பனீர் உணவு செய்முறை

வீட்டில் தயாரிக்கப்பட்ட பனீரை சிறிய க்யூபாக  கட்  செய்யுங்கள். ஒரு தேக்கரண்டி நெய்யை சேர்த்து   வாணலியில் வாட்ட வேண்டும். சற்று பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை வெப்பத்திலிருந்து எடுத்துவிடுங்கள்.

மொரமொரப்பாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சூடாறென பின், சிறிய துண்டுகளாக வெட்டவும். நெய் சேர்க்க விரும்பவில்லை என்றால், பனீரை வறுக்கவும்.

பனீர் பாயசம்

ஒரு கப் பால் , அரை தேக்கரண்டி நெய் , ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் அல்லது உலர் பழ தூள் , கால் கப் துருவிய வீட்டில் தயாரித்த பனீர்  ஒரு விருப்ப தேக்கரண்டி சர்க்கரை தேவைப்படும்.

இதை தயாரிப்பதற்கு, நடுத்தர வெப்பத்தில் பாலை கொதிக்கவைக்கவும்.கொதிக்கவைத்து பாலில். துருவிய பனீரை சேர்த்துக்கொள்ளவும்.  5-10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் வைக்கவும். சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் தூள் சேர்த்து  கொள்ளலாம். அந்த பதத்தோடு நீங்கள் திருப்தியாக இருந்தால், வெப்பத்திலிருந்து எடுத்து, குளிர விடுங்கள்.

இந்த இரண்டு  உணவு வகைகளை   தயாரிக்க 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரம்தான் தேவைப்படும்.உங்கள் குழந்தையின் உணவுக்கு போதிய போஷாக்கை அளிக்கும்.பனீரில்,  குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் மற்றும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன.

படிக்க : நீங்கள் முயற்சி செய்ய 5  பனீர் உணவு வகைகள்

Source: theindusparent

Written by

theIndusparent