நான் ஏன் என் மகளை சோட்டா பீம் மற்றும் பல கார்ட்டூன்களை பார்க்க அனுமதிப்பதில்லை

lead image

பின்பு, சோட்டா பீம் அவள் வாழ்க்கையில் நுழைந்தது. பீமை போலவே பலசாலியாக தானும் நிறைய லட்டு சாப்பிட ஆசைப்பட்டாள்.

இந்த பெப்ரவரியிலிருந்து, எங்கள் குடும்பத்தில் கேபிள் துண்டித்து,  தொலைக்காட்சி-இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம். கடந்த சிலமாதங்களாக, என் மகள் டிவிக்கு அடிமையாகிவிட்டாள். டீவியை ஆன் செய்யாதவரை சாப்பிடமாட்டேன் என்று  ஆடம் பிடிப்பாள்.

ஒரு தாயாக நான் கவலைகொள்ளும் இன்னொரு விஷயம், அவள் விளம்பர இடைவேளைவரை சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொள்வாள்.ஒரு காட்ஜெட் ஆர்வமுடைய குழந்தை என்பதால், ரிமோட்டை  தானே பயன்படுத்தி டீவியை தானே ஆன் செய்துகொள்கிறாள்.

தான் டிவி பார்ப்பதற்காக எதையும் தியாகம் செய்ய துணிந்தாள். பூங்காவில்  ஓடியாடி விளையாடுவதை தவிர்த்தாள். பின்பு, சோட்டா  பீம்  அவள் வாழ்க்கையில் நுழைந்தது. பீமை போலவே பலசாலியாக தானும் நிறைய  லட்டு சாப்பிட ஆசைப்பட்டாள். லட்டு எந்தவித பலத்தையும் கொடுக்காது என்று கூறினால். சோட்டா பீமை காரணம்காட்டி என்னை நம்ப மறுத்தாள்.

இந்நாட்களில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் அநாகரிகமான வார்த்தைகளைப்பற்றி என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை! "அடேய் பையா!" " முட்டாள்" " லூசு" போன்ற வார்த்தைகளை நாங்கள் என்றும் வீட்டில் பயன்படுத்தியதில்லை.
GIRL

இந்த கதைகளில் வரும் பாத்திரங்களின் தாக்கத்தை கண்டு நான் அஞ்சுகிறேன். என் நான்கு வயது மகள் இதை கண்மூடித்தனமாக நம்புகிறாள். அவளது மென்மையான மனது ஒரு செயற்கையான உலகை நம்புவது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது!

அன்றைக்கு எடுத்த முடிவுதான். இனி இதுபோன்ற கேலி சித்திரங்கள் என் மகளின்  வாழ்க்கை யில்  ஊடுருவி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த அனுமதிக்கமாட்டேன். இன்றுவரைக்கும், அதிர்ஷ்டவசமாக, அது நல்லமுடிவாக அமைந்தது.

முதல் சில வாரங்கள்

முதல் சில வாரங்கள் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. அவளை

டேகே ரிலிருந்து அழைத்துவந்தால், தினமும் கார்ட்டூன் பார்க்கவேண்டும் என்று அடம்பிடிப்பாள். முதலில் அவளை வேறு ஏதாவது விளையாட சம்மதிக்கவைப்பது கடினமாகத்தான் இருந்தது. அனால் போகப்போக, இதை அவள் ஏற்றுக்கொண்டாள்.

படிப்படியாக, அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்யயச்சொல்லி பழகினேன். புத்தகம் படிப்ப து, பொம்மையோடு விளையாடுவது, அல்லது மை யலறையில் உக்கார்ந்து என்னோடு உரையாடுவது என்று பல யோசனைகளை முன்வைத்தேன்.

இது தானாகவே நடக்காது. முதலில் என்னுடைய நாளை அவளோடு பகிர்ந்துகொண்டேன். பிறகு அவள் தொடங்கினாள். இதுவரை நான் காணாத எனக்கு பழகாத உலகிற்கு என்னை கொண்டுபோனாள்.

அவள் தன் கதைகளை சொல்ல தொண்டங்கினாள். அவளுடைய நண்பர்கள் பற்றியும் , அவளுக்கு பிடித்தமான ஒரு நண்பன் பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் முடிவில்லாமல் பேசினாள். பிறகு, நான் அவளை  டேகேரிலிருந்து   நேரத்திற்கு அழைக்கவரவில்லை என்றால் ஏன் பிடிக்காது என்பதுபற்றியும் கூற தொடங்கினாள்.

அவளுக்கு "கிளாஸ் லீடர்"-ஆகா இருக்க பிடிக்கும் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. டேகேரிலிருக்கும் பச்சிளங்குழந்தைகளை, தான் எப்படி அழகாக பார்த்துக்கொள்வாள் என்றும் அவளுடைய கற்பனை செல்ல பிராணிகள் பற்றியும் பேசுவாள். இது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும் !

இந்த உரையாடல்கள் என் கண்களை திறந்தது. என் தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. என் மகள் இவ்வளவு அழகாக வெளிப்படையாக பேசுவாள் என்பதே ஆச்சரியம். அவள் மனதில் இருக்கும் அணைத்து கதைகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டாள். இதெல்லாம் டீவீயால் பூட்டிவைக்கப்பட்ட  கதைகளாகும்

நாங்கள் அதிகநேரம் உண்மேசையில் செலவிட்டோம். என் மகளுக்கு " பிநாட் பட்டர், சீஸ் , கஞ்சி, வெண்டைக்காய் , சோலே, ராஜ்மா, பாரடா " என்பதெல்லாம் பிடிக்கும் என்று தெரிந்துகொண்டேன்.இதன்பிறகும், எங்களுக்கு கதைப்புத்தகம் படிக்க நேரம் இருக்கும். அல்லது, ஐபேடில் ஜோடி விளையாட்டு விளையாடுவோம் . இதுவும் சோம்பலாக இருந்தால், எங்கள் படுக்கையில்  ஒன்றும் செய்யாமல் நேரத்தை கடத்துவோம்.

டிவி நேரத்தை கொல்லும்

மெதுவாக, என் குழந்தை மகிழ்ச்சியாகவும்,அதிகம் பேசுபவளாக வளர்ந்தாள். இதனால் நான் கண்ட பெரிய உண்மை, டிவி நேரத்தை கொல்லும். எங்கள் வசம் இவ்வளவு நேரம் இருக்கிறது என்றும், அதை எந்தப்பயனும் அளிக்காத டிவிமேல் செலுத்துகிறோம் என்று புரிந்துகொண்டோம்.
mother and daughter

அதே சமயம், என் குழந்தை பெப்பர் பிக்போன்ற நல்ல யுடியூப் சேனலய் பார்க்க அனுமதிப்பேன். இதே போக்கில், நான் என் வீட்டு  கேபில் சந்தாவை புதுப்பிக்கப்போவதில்லை. நீங்களும் செய்யாதீர்கள் !

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner