நான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்

நான் எப்படி என் லாக்டோஸ்  ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்

அவள் பால் குடிப்பாளா ? என் மகளை பற்றிய இந்த கேள்வியை மற்ற பெற்றோர்கள் தினமும் என்னை கேட்பார்கள். அவள் திடமான உட்கொள்ளலை ஆரம்பித்த சமயத்தில் இது கேட்கப்பட்டது.

அவள் பால் குடிப்பாளா ? என் மகளை பற்றிய இந்த கேள்வியை மற்ற பெற்றோர்கள்  தினமும் என்னை கேட்பார்கள். அவள் திடமான உட்கொள்ளலை ஆரம்பித்த சமயத்தில் இது கேட்கப்பட்டது.

என் 8 மாத மகள் பால் குடித்தாளா என்ற கேள்வி ஒரு உரையாடளுக்கு ஆரம்பம், ஒரு மென்மையான நினைவூட்டல், , ஒரு தாயாக  கடமைகளை நான் பூர்த்திசெய்கிறேனா  என்று என்னை சந்திக்கும் எல்லா பெண்களின்கவலை.தினமும் உறவினர்களும் விருந்தாளிகளும், அவர்களின் வேலையே விட்டுவிட்டு என் மகள் பால் குடித்தாளா என்பதில்தான் அக்கறை.

என் பதில் அனைவரின் வாயையும் அடைத்தது.என் பதிலை கண்டு அணைத்து உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.நான் எப்படி என் குழந்தையின் எலும்புகளையும் நலத்தையும் வலு இழக்க செய்கிறேன் என்று குற்றம் சாட்டினார்கள். ஆனால், இவர்களுக்கு நான் ஏன் ஒரு சொட்டு தாய்ப்பால்கூட கொடுக்கவில்லை என்பதை அறிய அவர்களுக்கு கவலை இல்லை.

உண்மையான காரணம் - என் குடும்பத்தில் எல்லோருக்கும் லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கிறது

பால் என்று சொன்னாலே என் வயிறு பிரட்டும்.ஏனென்றால் நான் பால் எடுத்துக் கொண்ட சில அசம்பாவிதங்களை நினைவூட்டுகிறது.சுவாரஸ்யமாக, நான் அதே சகிப்பின்மையால்  பாதிக்கப்பட்ட ஒருவரைதான்  திருமணம் செய்து கொண்டேன்.
milk adulteration

என் கணவருக்கு ஒரு கிளாஸ் பால் கொடுத்தால் இரண்டுநாள் கழிப்பறையில்தான் இருப்பார் ( திருமணம் சொர்கத்தின் நிச்சயிக்க படும் என்பது உண்மையாக இருந்தால் .ஆனால் எங்கள் திருமணம்  பால் வெறுக்கும் ஒரு கடவுளால்தான் நிச்சயிக்கப்பட்டது என்று நினைக்கிறன்)

இந்த பால் ஒவ்வாமை என் அம்மாவிற்கும் என் உடன்பிறப்புகளுக்கும் பொருந்தும். எனவே நீண்ட காலமாக, குழந்தை பிறப்பதற்கு முன்னால், எங்கள் வீட்டில் பாலை சுத்தமாக நீக்கிவிட்டோம்.சில சமயங்களில் விருந்தாளிகளுக்கு எங்களால் டீ கூட தரமுடியாமல் போனது.

எங்களால் பாலை அதன் அசல் வடிவத்தில் சாப்பிட முடியாது. ஆனால் தயிரும் ஐஸ் கிரீமும் அண்டாவில் கொடுத்தால் நாளை என்பது ஒன்றில்லாதது போல் தின்றுவிடுவோம்.

வல்லுநர் அறிவுரை

எனவே, "கடவுளின் வரப்பிரசாதமான" பாலை ஒதுக்கியதற்கு ஒருபோதும் நாங்கள் தண்டிக்கப்பட்டதில்லை. அனால், குழந்தை வந்த பின் எல்லாமே மாறியது.குழந்தையை வளர்க்க ஆரம்பித்தபோது பல விஷயங்கள் மாறிவிட்டன. பிறந்தபோது, தாய்ப்பாலை தவிர வேறு ஏதும் என் குழந்தைக்கு ஒத்து வரவில்லை. டாக்டரை சந்தித்தோம்
நான் எப்படி என் லாக்டோஸ்  ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்

பால் இல்லாமல் லாக்டோஸ் சகிப்பின்மை கொண்ட   குழந்தையை வளர்ப்பது  சாத்தியம்தான் என்று நம்பிக்கை அளித்த குழந்தை மருத்துவருக்கு என் நன்றி .மேலும்,பாலை தவிர  பால் அடிப்படையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியிருந்தால்,என் குழந்தையின் சுவை உணர்வும் வளரும் என்றார்.

இயற்கை  வடிவத்தில் பால் எடுத்துக் கொள்ளாத ஒரு குழந்தை எல்லா ஊட்டச்சத்துக்களிலும் இழந்துவிடும் என்ற தொன்மத்தை உடைக்கவும் என் கால்சியம் தேவைக்காகவும் ,என்னுடைய சொந்த ஸ்மார்ட் ரெசிபிகளை கண்டுபிடித்தேன்.

என் சூழ்நிலையில் சக அம்மாக்களைப் பின்தொடரும் சில குறிப்புகள் இங்கே:

1 மோர், எங்கள் பெட்டைம் நண்பர் :

இரவில் கதை நேரத்திற்கு முன்னால், ஒரு கிளாஸ் பாலிற்கு பதில் ஒரு கிளாஸ் மோரை கொடுப்பேன் .ஆமாம், பஞ்சாபில் விடுமுறை தினங்களை எங்களுக்கு  நினைவூட்டுவதாக இருக்கும் .எங்கள் மகளுக்கு அது மிகவும் பிடிக்கும்.அவள் தூங்க செல்லும் முன் வயறு நிறைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

2 பால் இல்லாத காலை உணவு:

கஞ்சி, போஹா, முட்டையில் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சில தேக்கரண்டி தயிரை சேர்த்துக்கொள்வேன்.
நான் எப்படி என் லாக்டோஸ்  ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்

3 பனீர் என் தோழன் :

எங்கள் உணவில்  புதிய முக்கியத்துவமாக மாறியது பனீர்.வாரத்திற்கு 2-3  பனீர் சாப்பிடுவோம். பெற்றோர்களாகிய நாங்கள் பனீர் டிக்கா மற்றும் பனீர் பூர்ஜி  சாப்பிடுவதன் மூலம் வளர்ந்து வரும் என் மகளுக்கும் பனீர் பிடித்துவிட்டது.

4 கிச்சன் பரிசோதனைகள் :

பால் மாற்றை கண்டுபிடிப்பதற்கான தேடலானது மிகவும் சுவாரசியமானது.பாதாம் பால் மில்க்ஷேக், வாசனை பாயசம்,கிரேக்க பழம் யோகர்ட் மற்றும் தயிர் பாரஃ பே செய்ய கற்றுக்கொண்டேன்.ன் கணவரும் நானும் 'மற்ற' பால்  இனிப்புகளை கண்டுபிடித்தோம்.வீட்டில் தயாரிக்கப்படும் டஜாட்டிக்கி டிப்போடுதான் எங்கள் உணவு நிறைவடையும்.

அனைத்து குறிப்புகளுக்கும் பெரிய குறிப்பு: இணையத்தில் உள்ள சமையல் வல்லுநர்களால். என்னால் மாற்று உணவுகளும் சுவாரசியமான  ரெசிபிகளும் கண்டுபிடிக்க முடிந்தது.ஆனாலும்.பிறரின் தராதரமில்லாத அறிவுரைகள் என்னை காயப்படுத்தின.பால் குடிக்காத குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்பு வரும் என்று ஏகப்பட்ட ஆலோசனைகள் வரும். பல நாட்கள் என்னால் இதை கேட்டு தூங்க முடியவில்லை.ஆனால் பிற்காலத்தில் இதை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்ற முடிவிற்கு  வந்தேன்.

அடுத்த முறை, உங்களுக்கு  எதிலாவது சந்தேகம் இருந்தால் ஒரு நிபுணர் உதவியைப் பெறுங்கள். அதிகப்பிரசங்கிதனமான ஆலோசனைகளுக்கு சின்ன புன்னகை அளித்து அந்த இடத்தை விட்டு காலிசெய்யுங்கள்.நான் என் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன் என்று கூறினால்,  அவர்களுக்கு புரிந்துவிடும்.உங்கள் குழந்தையின் நலன்களை பற்றி உங்களுக்குத்தான்  தெரியும் என்ற உறுதியோடு இருங்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent