நான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்

நான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்

"குழந்தையை தூக்கு! அடிபட போகிறது!"

"குழந்தையை தூக்கு! அடிபட போகிறது!"

சிலநாட்களுக்கு முன்பு, என் தோழி தன குழந்தையுடன் வருகை தந்திருந்தாள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்கள் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தாரகள். திடீரென்று, என் இளைய மகள் கீழே விழுந்தாள். ஆனாலும், அதை பெரிதாக பொருட்படுத்தாமல் நான் பேசிக்கொண்டிருந்தேன்.

என் தோழிக்கோ ஆச்சரியம். என்ன பார்த்து "குழந்தையை தூக்கு! அடிபட்டிருக்க போகிறது " என்று கத்தினாள்.

என்னை திட்டிக்கொண்டிருக்கும்போது, என் இளைய மகள், எழுந்து, தன முழங்காலை தூசுதட்டி, விளையாட தொடங்கினாள் . அதோடு முடிந்தது- அவள் விழுந்து எழுந்த கதை!

ஏன் நாம் அளவுக்கதிகமாக பாதுகாக்கிறோம் ?
நான் என் அளவுக்கதிகமாக பாசம் வைக்காத தாயக இருக்கிறேன்

நாம் நம் குழந்தைகளை அளவுக்கதிகமாக பாதுகாக்கிறோமா? இந்த சின்ன சின்ன தருணங்களை அவர்களிடம் பறித்து நாம் வாழ்கிறோமா? அதிகமாக பேணி  அணைத்து ஆபத்திலும் பாதிக்காது, ஒரு செயற்கையான உலகை அமைக்கிறோமா? அப்படி செய்தால், அது நன்மையை விட தீமையில்தானே முடியும்?

என்னைப்போல் 80s 90s  நீங்கள் பிறந்து வளர்ந்தீரானால்,என்னைப்போல் தடையில்லாத விளையாட்டு நேரத்தை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்..என் பெற்றோர்களும் பாதுகாப்பான பாசமிகு பெற்றோர்கள்தான்.ஆனாலும்,எவ்வளவுதான் நான் விழுந்து எழுந்திருந்தாலும், என் கண்ணீரை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன். என்னுடனே உரையாறிக்கொண்டு, எனக்கென்று ஒரு பார்வையை ஏற்படுத்திக்கொண்டேன். இது புத்தகத்தால் வந்த அறிவல்ல. அனுபவத்தால் வந்தது.

எந்தவித சன்ஸ்க்க்ரீனும் இல்லாமல் பலமணிநேரம் கத்திரி வெய்யிலில் விளையாடினேன்.சுகாதார கவலையின்றி, பல தள்ளுவண்டி கடையில் என் பெற்றோருடன் சுவைத்து மகிழ்ந்திருகிக்கிறேன்.ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்லாமல், சின்ன சின்ன விடுதியில் தங்கி விடுமுறைகளை நன்றாக கழித்திருக்கிறேன் .

என் குழந்தைகளை அழுவதிலிருந்து தடுக்கமாட்டேன்

நான், பல மனக்கசப்புகளும், வேதனைகளும், காதல் தோல்விகளும், நட்பு முறிவும், நகரங்கள் மாறி, பெற்றோரின் பணக்கஷ்டத்திலிருந்து விடுபட்டு, என் உறவினர்களின் மறு முகத்தை பார்த்து, வாழ்க்கையின் பல இன்னல்களை சந்தித்திருக்கிறேன்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்ன என்று தெரியுமா? நான் சந்தித்த இன்ப துன்பங்களின் அனுபவத்தினால் ஏற்படும் அணைத்து உணர்வுகளையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். அந்த அருமையான தருணங்கள்போல் முக்கியமானது நம் பிள்ளைகள் கண்ணீர் விட்டு அழுவது. இது இவர்களை உணர்வுரீதியான பலப்படுத்தும்.

என் குழந்தைகளை அழக்கூடாது என்று என்றைக்குமே சொன்னதில்லை. நீ அழு, முடிந்தால் என்னிடம் பகிர்ந்துகொள். அனால் அழுதபின், கண்களை துடைத்து உன்னை தயார்படுத்திக்கொள். வாழ்க்கை இன்னும் பல சவால்களை அளிக்கக்கூடும். இதை நான் உனக்காக ஏற்றுக்கொள்ளமாட்டேன். அனால் நீ இதை எதிர்கொள்ளும்போது, உனக்காக நான் இருப்பேன் .

Source: theindusparent

Written by

theIndusparent