நானும் என் மாமியாரும் தோழிகளான நாள்

நானும் என் மாமியாரும் தோழிகளான  நாள்

"நீ தூங்கு. நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன்"

என் ஒரு மாத குழந்தையை அதிகாலை மூன்று மணிக்கு  தூங்கவைக்கும்பொழுது,என்  மாமியாரின் மெல்லிய குரல்  கேட்டது.

அன்று இரவு முழுவதும் என் பக்கத்தில் இருந்தார். என் தூக்கத்திற்காக  தன் தூக்கத்தை தியாகம் செய்தார். என்னுடன்  25 நாட்களாக விழித்திருந்தார். என் குழந்தை பிறந்ததும் என் கூடவே இருந்தார். என் வாழ்க்கையை கொஞ்சம் எளிதாக்க அவராலான உதவியை  செய்தார்.

என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு தாலாட்டு பாடினார்.அப்பொழுதுதான் அவரும் என்னை போல ஒரு பெண்தான் என்பதை உணர்தேன். நான் நாள்தோறும் சண்டைபோடும் பெண், திருமணமானவுடன் நான் கண்டு அஞ்சும் பெண். அதே பெண்தான் என்னைப்பற்றி இப்பொழுது கவலை படுகிறார்.

அவர் என் மாமியார்தான். இருந்தாலும், ஒரு தாய்போல் என்னை பார்த்துக்கொண்டார்.என் வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கும்போது எனக்கு உதவியாகவும் பக்கபலமாகவும் இருந்தார்.

ஒரு சார்பான கருத்தோடுதான் நாம் வளர்ந்து வருகிறோம். இதை நாம் மாற்றிக்கொள்ள என்றுமே முயற்சிப்பதில்லை. நாம் ஏன் மாமியாருக்கு எதிராகவே செயல்படுகிறோம்? ஏன் அவருடைய ஒவ்வொரு செயலையும் எதிர்க்கிறோம்? அவருக்கும் நமக்குமான உறவை நாம் என் புதுப்பிக்க கூடாது?

இந்த கேள்விகளுக்கு விடை காண,  என் மேன்மையை நிரூபிக்க  செய்யக்கூடாத விஷயங்களை நான் பட்டியலிட்டுள்ளேன்.

1. என் மாமியாரை  பற்றி எந்தவித முன்- கணிப்பும் வைத்துக்கொள்ளமாட்டேன்

அவர் சொல்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று தீர்மானித்துள்ளேன். அவரை ஏதேனும் சுடுசொல்லால் தாக்குவதற்கு முன்னால்,அவர் சொன்ன கருத்தை யோசித்து பார்ப்பேன். அவரது அனைத்து நடவடிக்கையும் தவறாக இருக்கும் என்ற அவசியமில்லை.சில விஷயங்களை அவர் நல்ல நோக்கத்திலும் சொல்லிருப்பார்.

2. தன் பேர குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு நாளும் தடை விதிக்க மாட்டேன்

dadi

எல்லா தாய்களுக்கும் தன் பேர குழந்தைகளோடு விளையாட வேண்டும் என்பது நியாயமான ஆசை. ஒரு தாயாக, அந்த ஆசைக்கு நான் என்றைக்குமே குறுக்கிடமாட்டேன்.  குழந்தைக்கு ஊட்டுவதற்கும், தாலாட்டுவதற்கும் பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுப்பதற்கும் நான் எப்போதும் தடைவிதிக்கமாட்டேன்.

நம்மை போன்ற புதிய தாய்மார்கள்தான் , குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு  சின்ன விஷயத்தையும் ஆராய்ந்து கொண்டே இருப்போம். இது குழந்தைக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல.

3. தன் மகனுடன்  நேரம் செலவிடுவதற்கு நான் குறுக்கிடமாட்டேன்

நம் மாமியார்கள்,  நம் கணவர்களோடு  நேரம் செலவிடும்போதெல்லாம் , நமக்கு எதிராக ஏதோ சூழ்ச்சி நடந்ததுபோல் தோணும்.  உண்மையில், அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கொண்டு சிரித்துக்கொள்கிறார்கள். அவர்களும், தாயும் பிள்ளையும்தானே.

4. சமையலறையை விட்டுக்கொடுப்பேன்

daughter-in-law

என் மாமியாருக்கு குடும்பத்திற்காக சமைப்பது ரொம்பவும் பிடித்த விஷயம். என் ராஜ்யத்தை என்னால் விட்டுக்கொடுக்கமுடியாது என்றாலும் , சில நாட்கள் என் சமையலறையை விட்டுக்கொடுப்பேன். தன் மகனுக்கும் பேரபிள்ளைகளுக்கும்  சமைக்க அவருக்கும் ஆசை இருக்காதா?இது அவர்களை கொஞ்சம் சந்தோஷப்படுத்தினால், வை நாட் ?

5. என் தாய்க்கு இணையான மரியாதை கொடுப்பேன்

என் மாமியாரை என்றுமே அவமரியாதையோடு நடத்தியதில்லை. இருந்தாலும், அவரை என் தாய் போல நடத்துவேன் என்று உறுதிகொண்டேன். அவரும் ஒரு மகனுக்கு தாய்தான். நாம் மதிப்பும் மரியாதையோடும் நடப்பது தவறில்லை.

Source: theindusparent

Written by

theIndusparent