நல்ல கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு செய்யும் 7 விஷயங்கள்

நல்ல கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு செய்யும் 7 விஷயங்கள்

கணவர்களே! உங்கள் மனைவிக்கு நீங்கள் இந்த  7 விஷயங்களை செய்யாமல் இருந்தால், இதுதான் திருத்த சரியான நேரம்! இந்த பட்டியலை பார்த்து ஒரு சிறந்த கணவனாக  எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்களே! உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமப்படுத்துவது கடினம் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். இது முற்றிலும் சோர்வடையவும்  செய்யும் விஷயம். ஆனாலும், உங்கள் மனைவி உங்கள் அத்தனை முயற்சிக்கும் தகுதியானவர் என்று உங்களுக்கே தெரியும்.

உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த எதுவும் செய்ய துணிந்தவர் நீங்கள்!இதற்காகத்தான் நாங்கள் 7  முக்கியமான விஷயங்களை பட்டியலிட்டோம்.

கணவர்களே! உங்கள் மனைவிக்கு நீங்கள் இந்த  7 விஷயங்களை செய்யாமல் இருந்தால், இதுதான் திருத்த சரியான நேரம்! இந்த பட்டியலை பார்த்து ஒரு சிறந்த கணவனாக  எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்

love

இதுதான் நீங்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம்.

நல்ல கணவர்கள் எப்போதும் தன் காதலை தன் மனைவியிடம் சொல்லவும், நடைமுறையில் உணரவும் வைப்பார்கள்." லவ் யூ!" என்ற வாக்கியத்தை கேட்டாலே அவளுக்கு கஷ்டம் நஷ்டம் சோகம் எல்லாம் பறந்து போய்விடும்.இந்த எதிர்பாராத அன்பு  எப்பொழுதும் அவள் முகத்தில் ஒரு புன்னகையை தரும். நெத்தியில் ஒரு செல்ல முத்தம், எப்பொழுதாவது கட்டி தழுவினால் , அவள் நாளும் செழித்து , உங்கள் திருமண பந்தத்தையும் வலிமையாகும்.

சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருங்கள்

இப்பொழுது நீங்கள் அலுவலகத்திலிருந்து வீற்றுக்கு வருகிறீர்கள். அப்பொழுது வீடு குப்பையாக குளறுபடியாக இருந்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிடிக்காது அல்லவா? உங்கள் மனைவிக்கும் அப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களைவிட  ஒழுங்கு  குறைவாக இருப்பவர்கள்தான் என்பது பரவலான கருத்து. அதை நிலைநாட்டவேண்டாமே! உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரியுங்கள். உங்கள் மனைவி உங்களுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவிக்காமல் இருந்தாலும், நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள் .

அவளுக்காக எழுதுங்கள்

காதல் கடிதமோ, கவிதையோ, அல்ல நிகோலஸ் ஸ்பார்க்ஸ் மாதிரி காதல் புத்தகங்கள்  எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சின்ன போஸ்ட்-இட் பேப்பரில் அழாகான குறிப்புகூட போதும்.

note

ஒரு அன்பான குறிப்பை சிறிய பேப்பரில் எழுதி பாத்ரூம் கண்ணாடி, கால் அல்லது அவளது கைப்பையில் போடுங்கள்.அதைப்படிக்கும்போது, தான் ஒரு நல்ல கணவனை திருமணம் செய்துகொண்டிருக்கிறோம் என்று அவளுக்கு தோன்றும்.

வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள்

வீடு வேலைகளை சமமாகத்தான் பிரிக்கவேண்டும். அனால் சிலசமயம் அவள் வேலையையும் நீங்கள் செய்து கொடுங்கள். துணி தோய்ப்பது, , துணிகளை ஐயர்ன் செய்வது, குப்பையை பொது குப்பைத்தொட்டியில் போடுவது, பெருக்குவது, பாத்திரத்தை துலக்குவது போன்ற சிறு வேலைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அவளுக்கு மனசோர்வு தரும் எந்த வேலையிலும் அவளுக்கு உதவுங்கள். நீங்கள் செய்யும் இந்த சிறு உதவிதான், அவளுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.

சமையல் செய்யுங்கள்

நீங்கள் சிறந்த சமையல்கலை வல்லுனராக இருக்கவேண்டாம். மனைவிக்காக சமைத்தால் அவளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியை அவள் பாராட்டுவாள். ஒரு நல்ல காலைஉணவுடன் வியப்பூட்டுங்கள். இல்லை, நல்ல காண்டில் லைட் டின்னருடன் ஆச்சரியப்படுத்துங்கள். உங்கள் அர்ப்பணிப்பை கண்டு மனமுருகுவாள்.

உங்கள் சமையல், மனைவி அளவிற்க்கு நன்றாக இல்லாவிட்டாலும், எல்லா கணவனும் இதை மனைவிக்காக செய்தே ஆகவேண்டும்.

அடிக்கடி பாராட்டுங்கள்

cooking

நேர்மறை வலுவூட்டல் எல்லாவித உறவிற்கும் பொருந்தும். இதில் திருமணம் ஒரு விதிவிலக்கல்ல. உங்கள் மனைவி உங்களுக்கு பேரழகியாக இருக்கலாம், உலகிலே அவள்தான் சிறந்த தாயாக தோணலாம் . அனால் அவளிடம் வெளிப்படையாக சொன்னதுண்டா? மனம்விட்டு பாராட்டுங்கள். அவளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.

ஆழமான உரையாடல்களை நிகழ்த்துங்கள்

உங்கள் மனைவிதான் உங்களுடைய சிறந்த தோழி. ஆழமான, தனிப்பட்ட, நெருக்கமான உரையாடல்களை அவளோடு எப்பொழுதும் நிகழ்த்துங்கள். இதுவரை நீங்கள் உரையாடினதில்லை என்றால் , சீக்கிரம் தொடங்குங்கள் . நீங்கள் ஆரம்பித்தால், அவளும் தன் மனம் விட்டு பேசுவாள். கணிப்பாக , நீங்கள் தினமும் உங்கள் மனைவியுடன் பேசுவீர்கள். ஆனால், விடியும்வரை பேசி நெடு நாட்கள் ஆகிவிட்டதா? அப்போ நீங்கள் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது .

இந்த 7  விஷயங்களையும் நீங்க செய்ததுண்டா? இதை செய்து பார்த்து, உங்கள் மனைவி எவ்வளவு சந்தோஷ பட்டாள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Source: theindusparent

Written by

theIndusparent