நம்பவே முடியவில்லை45  நிமிடங்களுக்கு இதயம் செயலிழந்த குழந்தை, உயிர்  பிழைத்தது!

lead image

நம்பமுடியாத உயிப்பிழைத்த கதையை படித்து தெரிந்துகொள்ளவும்

இந்த கதை, உங்களை வாழ்வின் அற்புதங்களை நம்பவைக்கும். எனினும், கடந்த வாரம் ஆராதயவிற்கு கடுமையான காலம். இதயத்தின் துளையை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்பொழுது, அவன் இதயம், சுமார் 45 நிமிடத்திற்கு செயலிழந்தது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் அவன் பிழைப்பதற்கான நம்பிக்கையை இழந்தார்கள்.

கடுமையான காலம்

மும்பையில் வாடியா மருத்துவர்கள், குழந்தையின் இதயத்தை ஒரு செயற்கை இயந்திர சுற்றோட்ட அமைப்போடு (artificial mechanical circulatory support system)இணைத்தார் .இதன்மூலம் இதய துடிப்பை சீராக்கி, குழந்தைக்கு மறுவாழு கொடுத்தார்கள். 26 மணி நேரத்திற்கு பிறகு, இதயம் சீராக இயங்க தொடங்கியது.ஆராதயா இயல்புநிலைக்கு திரும்பினான்.

"இதயம் சீராக துடிக்க நாங்கள் நடத்திய சிகிச்சை பலன் அடைய  26 மணிநேரம் தேவைப்பட்டது. எங்கள் மருத்துவர் குழுவிற்கு முழூ  நிவாரணம் கிடைத்தது . இதயம் செயல்படாமல் இருந்தாலும் நாங்கள் செயற்கையாக உயிர்ப்பிக்க முயன்றோம் .நான் , மெதுவாக, போதுமான அளவு ரத்தம் பாய, இதயத்தை செயற்கைமுறையில் புதுபித்தேன்" என்கிறார்  டாக்டர் பிஸ்வா பாண்டா, தலைமை குழந்தை இதய அறுவைசிகிச்சையாளர்,

ஆராதயா, மஹாராஷ்ட்ராவிலுள்ள துலே என்ற கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தான். அவன் தாயின் கருவறையில் இருந்தபோதே அவன் இதயத்தில் துளை இருப்பதாக அவன் தந்தை கூறுகிறார். இது போன்ற குழந்தைகளுக்கு "ப்ளூ பேபி / நீல குழந்தைகள்" என்று பெயர். ஏனெனில், இவர்கள் இதயத்தால் ஒரு குறிப்பிட்ட அளவுதான் ரத்தமும் ஆக்சிஜனையும் வெளியேற்ற முடியும்.

ஆராதயாவின் இதயத்தில் துளை இருப்பதால், இரத்த வடிகால் மிக சிறியதாக இருந்தது.போதுமான இரத்தத்தையும் ஆக்சிஜனும் இதயத்தால் வெளியிட முடியாததால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தூளேவிலுள்ள மருத்துவர்கள் கூறினார்கள். அதனால்தான், மிகுந்த எதிர்பார்ப்புடன் மும்பைக்கு வந்தோம்" என்று குழந்தையின் தந்தை., ரவீந்திர வாக் கூறினார்.

கருவறையில் கண்டறிதல்

கருவிலே இந்த பிரச்சனையை கண்டறிந்தாலும், ஆராதயாவின் தாய் பிரசவத்திற்கு ஒப்புக்கொண்டார்.

"சில தாய்மார்கள்தான்  இதுபோன்ற பிரச்னையுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க சம்மதிப்பார்கள்.பிரசவத்திற்கு பின், ஆக்சிஜன் அளவு 50-60% சதவீதம் மட்டுமே இருந்ததால், நிலைமை மோசமாக மாறியது. மார்பு நோய்தொற்று இதை மேலும் பாதித்தது" என்கிறார் டாக்டர். பாண்டா.

மின்னி போதனவாலா, வாடியா மருத்துவமனையில் தலைமை மருத்துவர், ஆராதையா போன்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லா மருத்துவ உதவியும் நிச்சயமாக அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

"வாடியா மருத்துவமனைக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். எங்கள் மகனின் வாழ்க்கையை புதுப்பித்த டாக்டர் பாண்டாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. ஒரு தொலைதூர கிராமத்தில் இருக்கும் ஏழை தம்பதி நாங்கள்.எங்கள் மகனை தங்கள் மகனை போல் பாவித்து எங்களுக்கு உதவிய அணைத்து மருத்துவ ஊழியருக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்" என்கிறார் ஆராதயாவின் தந்தை.

ப்ளூ பேபி சிண்ட்ரோம் என்றால் என்ன?

  • 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் . இத்தகைய குறைபாடுள்ள இதயத்தால், மெத்மோகுளோபின் ரிடக்ட்டேஸ் என்னும் ஆக்சிஜன்-சுமக்கும்  உயிரணு வை தயாரிக்கமுடியாது.
  • பிறவியிலே உண்டாகும் இத்தகைய குறைபாட்டின் விளைவாக, (பிராணவாயுவற்ற  இரத்தத்தினால், தோல் நீலமாகும்.(குறிப்பாக உதடுகள் மற்றும் கை கால் விரல்களின் நுனியில்)
  • பொதுவான அறிகுறிகள் : மனசோர்வு, எரிச்சல் தன்மை, சாம்பல்நிற தோல், வாய், கைகள், மற்றும் நகங்கள் நீல நிறமிடல்,சுவாச பிரச்சனை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
  • இந்த குறைபாட்டிற்கு அதிக அளவு பாதிக்கப்படும் மக்கள் நீர்நிலையில் அருகில் இருப்பவர்கள்தான்.இதில் அதிக அளவு நைட்ரைட்ஸ் இருப்பதால், சிசுவிற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

Source: theindusparent