டாக்டர் ராகுல் நைத்தினி, குருதியியல் மற்றும் எலும்பு
மஜ்ஜை மாற்றுதல் நிபுணர்,மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை, தில்லி, தண்டு இரத்த வங்கி பற்றி நம்மிடம் சொல்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில், தொப்புள்கொடி இரத்த சேகரிப்பு
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நகர்ப்புற பெற்றோர்களை ஈர்க்கும் அதே வேளையில், பலருக்கும் அதன் செயல்திறன் குறித்து சந்தேகம் இருக்கிறது.
நீங்கள் பெற்றோராக போகிறீர்களா? உங்கள் குழந்தையின் நலனுக்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கான பதில் எங்களிடம் இருக்கிறது.
டாக்டர் ராகுல் நைத்தினி, குருதியியல் மற்றும் எலும்பு
மஜ்ஜை மாற்றுதல் நிபுணர்,மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை, தில்லி,தொப்புள்கொடி இரத்த சேகரிப்பு
சம்மந்தமான அடிப்படை கேள்விகளுக்கு நம்மிடம் பதில் சொல்கிறார்.
1. தொப்புள்கொடி இரத்தம் என்றால் என்ன?
"தாயிலிருந்து கருவறையின் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலமாக சேரும் ரத்தம்தான் தொப்புள்கொடி இரத்தம்.இதில் அதிக அளவு ஸ்டெம் செல்ஸ் ( தண்டு உயிரணுக்கள் ) உள்ளன.
மனித உடலில் சுழற்சிக்கும் சாதாரண இரத்தம்தான் இந்த தொப்புள்கொடி
இரத்தம். அனால் இதில் அதிக அளவு ஸ்டெம் செல்ஸ் உள்ளன. இந்த உயிரணுக்களுக்கு செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளாக வளரக்கூடிய திறன் இருக்கிறது" என்று டாக்டர் நைத்தினி விளக்குகிறார்.
2. பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தம் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது?
பரிசோதனை அல்லது மாற்றுக்காக, ஒரு மனிதனின் இரத்தத்தை ஊசிமூலமாக அவன் ரத்தநாளதிலிருந்து எடுக்கப்படுகிறது. அனால் பிறந்த குழந்தைக்கு, ரத்தநாளம் அல்லாமல் தொப்புள்கொடியிலிருந்து ரத்தம் சேகரிக்கப்படும். குருதி அல்லது நோய்த்தடுப்பு சீர்குலைவுகளை குணப்படுத்த, நம் தொப்புள்கொடி இரத்தம் நமக்கு தேவைப்படும்.
தொப்புள்கொடியில் உள்ள இரத்தம் வெறும் 75 மில்லி லிட்டர்தான்.இதில் இருக்கும் பெரிய பின்னடைவு. ஆனால், இந்த உயிரணுக்கள் மிக சக்திவாய்ந்தவை. இவை திசுக்கள் மற்றும் உறுப்புகளாகவும் உருவெடுக்கும் தன்மை உடையது "என்று டாக்டர் ராகுல் நைத்தினி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
3.தொப்புள்கொடி இரத்தத்தை சேகரிப்பதனால் என்ன பயன்?
நீங்கள் எதற்காக சேகரிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. பிற்காலத்தில் உண்டாகும் நோயை குணப்படுத்துவதற்கு இந்த தொப்புள்கொடி இரத்தத்தை உபயோகிப்பதில் எந்த பயனும் இல்லை. சேகரிக்கப்பட்ட இரத்தத்தின் அதே மரபணு அமைப்பைதான் நோயாளியும் கொண்டிருப்பர். எனவே உங்கள் தொப்புள்கொடி இரத்ததினால் உங்களை நீங்களே
குணப்படுத்த முடியாது.
தற்பொழுது, உறுப்புகளை மறுஆக்கம் செய்வதற்கு மட்டுமே இதை தொப்புள்கொடி இறந்ததை பயன்படுத்த முடியும் .வேறு குருதி சம்மந்தமான குறைபாடுகளை குணப்படுத்த பரிசோதித்துதான் பார்க்கமுடியும்" என்கிறார் நிபுணர்.

4.தனியார் இரத்தவங்கிகளை அணுகலாமா?
தனியார் வங்கிக்கும் பொது வங்கிக்கும் உள்ள வேறுபாட்டை அறியவேண்டும்.தனியார் இரத்த வங்கி சுய பயன்பாட்டிற்கு மட்டுமே உதவும். அனால், அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பு பொது வங்கியில்தான் இருக்கிறது.
தற்பொழுது, தொப்புள்கொடி இரத்தத்தை 80 குருதி சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு மட்டுமே ஆங்கிரீகரிக்கப்பட்டுள்ளது. அனால், இதுபோல் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் , அவருக்கு சொந்தமான தொப்புள்கொடி இரத்தத்தை அவராலே பயன்படுத்த முடியாது . நோய் உண்டாக்கிய மரபணு கட்டமைப்பு அந்த தொப்புள்கொடி இரத்தத்திலும் இருக்கும். வேறொருவர் இரத்தத்தைதான் பயன்படுத்தவேண்டும்
"என்று விளக்குகிறார்.
"எதிர்காலத்தில் மருத்துவ கண்டுபிடிப்புகளை நம்பி தனியார் வங்கியில் சுய பயன்பாட்டிற்காக சேகரிப்பது அவரவர் விருப்பம்.ஆனால் தனியார் வங்கியை நான் பரிந்துரைக்க மாட்டேன். தனியாருக்கு நோ! பொது வங்கிக்கு யெஸ்!" என்று சொல்கிறார்.
5.தொப்புள்கொடி இரத்தத்தால் என்ன பயன்?
இது ஸ்டெம் செல் மறுஉருவாக்கதிற்கு பயன்படுத்தப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மற்றும் தண்டு இரத்தம் மாற்றுதலுக்காகவும் பயன்படுகிறது.இதனால் இரத்தக் கோளாறுகளை மட்டும்தான் குணப்படுத்த முடியும். பிற மற்றும் நரம்பியல் சீர்குலைவுகளை சீர்படுத்த முடியாது"
ரத்த புற்றுநோய் நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவருடைய உடன்பிறப்புக்கு 25 சதவிகிதம் மட்டுமே பொருந்தும் வாய்ப்பு இருந்தால், தொப்புள்கொடி இரத்த உயிரணுக்கள் ஒரு உயிர்காப்பானாக இருக்கும்.
6 .எந்தெந்த கோளாறுகளை தொப்புள்கொடி இரத்தம் குணப்படுத்தும்?
". ஓவ்வொரு ஆண்டும் 10,000 - 12,௦௦௦ இந்திய குழந்தைகளை பாதிக்கும் தலசீமியா எனப்படும் குருதியழிவுச் சோகையை குணப்படுத்த முடியும்
இரத்தப் புற்றுநோய்கள்,லுகேமியா, இரத்த சோகை மற்றும் சில நோய்த்தடுப்பு குறைபாடுகளை ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
"தொப்புள்கொடி இரத்த உயிரணுக்கள் எந்தவிதத்திலும் நோயாளியை பாதிக்காது. முழு பொருத்தமாக இல்லாவிட்டாலும், தொப்புள்கொடி இரத்தத்தை உபயோகிக்கலாம் "
7.இதன் தேவை அதிகரித்துள்ளதா
"ஆமாம், புற்றுநோய் மற்றும் இரத்தக் குறைபாடுகள் அதிகரித்து வருவதால், தொப்புள்கொடி இரத்ததின் தேவையும் அதிகரித்துள்ளது" என்கிறார் டாக்டர் ராகுல் நைத்தினி.
Source: theindusparent