தில்லியில் நடந்த கொடுமை : 14 வயது பணிப்பெண் , பல் மருத்துவரால் கடித்து ,அடித்து மற்றும் தீயால் துன்புறுத்தப்பட்டார்

lead image

பல்மருத்துவர், நிதி சவுதரி, வடமேற்கு டெல்லியின் கல்யாண் விஹாரில் வசித்து வந்தார்;.நான்கு மாதங்களாக 14 வயது சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவள் என்று டில்லியை சார்ந்த மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

தாழ்த்தப்பட்டோரை பற்றி கவலைப்படுதல் என்பதை நாம் அடிக்கடி மார்தட்டிக்கொள்ளலாம். ஆனால் ,  உண்மை என்று வரும்போது பணக்காரர்கள்தான் ஏழைகளை அதிகம் சுரண்டுகிறார்கள்.கீழ்காணும் இந்த தகவல் உங்கள் இரத்தத்தை உறையவைக்கும்.14 வயது பணிப்பெண், பல் மருத்துவரால் கடித்து, அடித்து துன்புறுத்தப்பட்டார்.

பல் மருத்துவரால் கடித்து ,அடித்து மற்றும் தீயால் துன்புறுத்தப்பட்டார்  

பல்மருத்துவர், நிதி சவுதரி, வடமேற்கு டெல்லியின் கல்யாண் விஹாரில் வசித்து வந்தார்;.நான்கு மாதங்களாக 14  வயது சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இனத்தை  சேர்ந்தவள் என்று டில்லியை சார்ந்த மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த கொடுமையை கவனித்துவந்த எதிர்வீட்டுக்காரர் டில்லி மகளிர் ஆணையத்திற்கு 181  நம்பரில் அழைத்தார்

"14 வயதான ஜார்காந்தை சார்ந்த பணிப்பெண்ணை மாடல் டவுனிலிருந்து மீட்டோம். இந்த பெண் அடிக்கப்பட்டு , நெருப்பால் சுடப்பட்டு, உமிழப்பட்டு , கத்தரிக்கோலால் வெட்டப்பட்டார். மேலாக, இவர் ஒரு டாக்டர்." டி.வி. டபிள் யு வின் தலைவரான ஸ்வாதி ஜெய் ஹிந்த் ட்வீட் செய்தார்.

14 வயதான சிறுமி, வீட்டிற்குள் அடைக்கப்பட்டு பலநாட்கள் பட்டினி போடப்பட்டார்.இந்த சிறுமியை நியமித்தனர் ஒரு பிரபல டாக்டர்இந்த குளிர்காலத்தில் ஒரு சுவெட்டர் இல்லாமல் வசித்துவந்தார் அந்த சிறுமி.இரு நாளைக்கு ஒரு முறை இரண்டு ரொட்டி துண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டார். இதனால் உடல் ஆரோக்கியத்தை இழந்தது.

 

 

" அந்த சிறுமி ஒரு தைரியசாலி,அந்த டாக்டர் கல்நெஞ்சம் படைத்தவள். எப்படி ஒரு சிறு பெண்ணை இப்படி துன்புறுத்த முடிந்தது.சாப்பாடு, கம்பளி , சுவெட்டர் என்று எதுவுமே கொடுக்காமல் சித்திரவதை செய்யப்பட்டார்.இந்த மருத்துவரை  போலீசார் கைது  செய்தார்.இதற்கான அதிகபட்ச தண்டனை கொடுக்கவேண்டும்" என்று மற்றொரு ட்வீட்டில்  எழுதினர்.

டி.சி.டபிள்யூ ஒரு பத்திரிகை  வெளியீட்டில் " அந்த சிறுமி உடலில் ஆழ்ந்த காயங்கள் இருந்தது. இரும்பால் அடித்து , உடல்மேல் வெந்நீரும் ஊற்றப்பட்டாள்.

பாண்டட் லேபர் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை போலீஸ் ஆணையர், வடமேற்கு டெல்லி, அஸ்லம் கான் கூறுகிறார்.பல்மருத்துவ முதலாளி கைதுசெய்யப்பட்டு, வேலைவாய்ப்பு நிறுவனத்தையும் சோதனை செய்தனர்.

குழந்தையின் நலன்புரிக் குழுவின் பாதுகாப்பு மற்றும் டி.சி.டபிள்யு ஆலோசகரின் பாதுகாப்பில் அந்த 14  வயது சிறுமி இருக்கிறார் இந்த சம்பவம் தற்பொழுது போலீஸ் விசாரணையில் உள்ளது.

Written by

theIndusparent

app info
get app banner