தன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்

தன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்

"தன் மதத்தை விட்டு வேறு எந்த ஆணையும் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டம் ஒரு பெண்ணின் மேல் விதிக்கப்படவில்லை" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு மனைவி , தன் கணவரின்  மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்று உச்சநீதிமன்றம்  தன் வரலாற்று மிக்க தீர்ப்பொன்றில் கூறியது.

ஹிந்து ஆணை திருமணம் செய்த பெண் ஹிந்துவாக மாற வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது என்றது உச்ச நீதிமன்றம்.

வேறு மதத்தவரை திருமணம் செய்துகொண்ட பார்சி பெண்ணை தன் பெற்றோர்களின் ஈமச்சடங்கிற்கு அனுமதிக்கப்படாததை மறுபரிசீலனை செய்யக்கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பார்சி பெண், குல்ரோக் எம். குப்தா பார்சி வழக்கத்தை சட்டப்பூர்வமாக அணுக முயற்சித்தார்.ஆனால் குஜராத் உயர் நீதிமன்றம் குல்ரோக்- கிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார்.

1991 ஆம் ஆண்டில் அவர் வேறு மதம் சார்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால், இவரது பார்சி பெற்றோரின் ஈம சடங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது சகோதரி ஷிராஸும், தன் மதத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டதால் , இரு சகோதரிகளும் உச்சநீதி மன்றத்தை அணுகினர்.

நீதிபதிகளான ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.எம். சந்திரசூத் மற்றும் அசோக் பூஷண் மற்றும்  தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமை வகித்த நீதிபதிகள், இதே சட்டம் பார்சி ஆணிற்கு பொருந்தாது என்று கவனித்தனர்.

கலப்பு திருமணத்தால் ஒரு பெண் அடையாளத்தை இழந்துவிட கூடாது.

தன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்

" கலப்பு திருமணமான பெண், தன் மத அடையாளத்தை விட்டுவிடவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.மேலும் சிறப்பு திருமண சட்டம், வெவ்வேறு மாதத்தில் திருமணம் செய்துகொண்ட இரண்டு நபர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மதத்தை பின்பற்றலாம் என்று கூறுகிறது" என்று நீதிபசி பெஞ்ச் கூறியுள்ளது.

பெண்களுக்கு எதிராக இத்தகைய பிரச்னை எழுந்தால், ஆண்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

" ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகும் தன் மத அடையாளத்தை பின்பற்றுகையில், பெண்ணுக்கும் அதே உரிமை வழங்கப்படவேண்டும் .." என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அடுத்த விசாரணை டிசம்பர் 14 - ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Written by

theIndusparent