ஜெனிலியா தேஷ்முக்: எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது

ஜெனிலியா தேஷ்முக்:  எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது

"என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். என்னைப்போல் மற்ற தாய்களும் இதேதான் செய்கிறார்கள்" என்கிறார் ஜெனிலியா தேஷ்முக்.

ஒரு கருவுற்ற தாயின் படபடப்பை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. விவரிக்க முடியாத உணர்ச்சிகளை அனுபவிக்கிறாள். குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து நிறைய அறிவுரைகளை பெற்று, அடுத்தபடியான பொறுப்பை சமாளிக்க அவளுக்குள் உள்ள  வலிமையை ஏற்றுக்கொள்ள  வேண்டும்.

ஒரு தாய்க்கு இது அற்புதமாக பயணம்தான். அனால், நீங்கள் இரண்டாவது முறை அம்மாவாகப் போவது, முதல் முறையை விட சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும், என்கிறார் ஜெனிலியா தேஷ்முக். இந்த 29  வயதான நடிகர், இரண்டாவது முறையாக தாயாகிறார்.அவருடைய இரண்டு மகன்களை எவ்வாறு வளர்க்க போகிறார்  என்று விளக்கினார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ப்பு

IANS நடத்திய ஒரு நேர்காணலில்,தன் குழந்தைகளை கிராமப்புற மற்றும் நகர்ப்புற உணர்திறன் கொண்டவர்களாக வளர்க்கவேண்டும் என்று ஜெனிலியா விருப்பப்படுகிறார்.

" என் கணவர் ரித்தேஷ் கிராமப்புற வளர்ப்பைக் கொண்டிருப்பதனால், என் பிள்ளைகளுக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ப்பை கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார் . குழந்தைகளை கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு வேரூன்றி வைக்க திட்டமிட்டுள்ளார்

Genelia and Riteish

பூஜைகளில் பங்கேற்கவும், அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதற்காக, தனது மூத்த மகனான ரேயானை ஊக்குவிக்கிறார். இருப்பினும், புதிய யோசனைகள் மற்றும் நவீன பெற்றோருக்குரிய நுட்பங்களை அறிமுகப்படுத்த விரும்புவதாக இல்லை என்றும் ஜெனிலியா கூறுகிறார்.

ஜெனிலியாவின் நவீன வளர்ப்புமுறை

"எனக்கு பார்ட்டிகளில் இஷ்டமில்லை. அனால் , ரியானுடன் கால்பந்து விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடுவது ,படிப்பது போன்ற நல்ல பழக்கங்களுடன் அவனுக்கு பல புதுமையான விஷயங்களை அறிமுக படுத்திக்கொண்டே இருக்கிறேன்.

இந்த வளர்ப்புமுறையை , அனைத்து பெண்களையும் போல், தன் தாயிடமும் மாமியாரிடமும் கற்றுக்கொண்டார்
ஜெனீலியாவை பொறுத்தவரை, தன் தாய் மாமியார், இருவரும், அவர்கள் பேரப்பிள்ளைகளை கையாள்வதில் இருக்கும் அமைதியும் தன்மையும்தான், இவர் இரண்டாவது கர்ப்பத்தின் போது ஓய்வெடுக்க நம்பிக்கை அளித்தது.

"என் அம்மாவும் மாமியாரும் நவீன கால பாட்டிகள்.என் சுய சிந்தனைக்கு இடம் கொடுத்து, நான் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இதைத்தான் நான் எல்லா தாய்க்கும் பாட்டிகளுக்கும் ஆலோசிக்கிறேன்.எல்லோரும் தங்களால் முடிந்ததை சிறப்பாகத்தான் செய்கிறார்கள்" என்கிறார் ஜெனீலியா.

ஜெனிலியா தேஷ்முக்:  எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது

இரண்டாவது கர்ப்பத்தின் போது ஜெனீலியா எப்படில்லாம் ஓய்வெடுத்தார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

இரண்டாவது முறை தாயான தருணம்

முதல் முறை கருவுற்றபோது கவலையாக இருந்த ஜெனிலியா, இரண்டாவது முறை கருவுற்றபோது கவலையில்லாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
உண்மைதான். அவருடைய முதல் பிரசவ அனுபவம், இரண்டாவது கர்பத்தை எளிதாக பயணிக்க செய்தது.

ஒரு மனைவியாக இல்லாமல், ஒரு தாயின் கண்ணோட்டத்தை பற்றி விளக்கினார்!
"நாம் அனைவருமே கவலையின் சூழ்ச்சியில் சிக்கி கொள்கிறோம். அனால், இது சரியா தவறா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு புதிய தாயாக இருப்பதற்கும், இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பதற்கும், பக்குவமும், முதிர்ச்சியும் வந்துவிடுகிறது.

இரண்டாவது முறை கருவுற்றபோது மிகவும் அமைதியாக இருந்தேன் .வீணாக கவலை படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை. தாய்மார்களுக்கு இருக்கும் அந்த உள்ளுணர்வை நம்பினால் போதும்" என்கிறார்

கத்தோலிக்க மங்கலூர் குடும்பத்தில் பிறந்த இவர், தாய்மை தன் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்று கூறினார்.

தாய்மை எப்படி ஜெனிலியாவை இரண்டு முறை மாற்றியது

"நான் ஒரு நடிகையாக இருந்தபோது, என் வாழ்க்கை மாறியது. நான் திருமணம் செய்துகொண்ட பின்னரும் கூட வாழ்க்கை மாறியது. இதை மாற்றம் என்று சொல்லாமல் வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன்.ஒவ்வொரு ஒரு புதிய தளத்திற்கும் என்னை தயார்படுத்திக்கொள்கிறேன் .

தாய்மை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. புரிதலும் தெளிவும் தந்தது. என்னை நான் ஒரு நான் எப்போதும் ஒரு முன்னுணர்வு உள்ள பெண்ணாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் தாய்மைக்குப் பிறகு இருமடங்காக என்முன்னுணர்வு அதிகரித்திருக்கும் நினைக்கிறேன்" என்கிறார் ஜெனிலியா.

riteish deshmukh

"டேரா நால் லவ் ஹோ கயா" நடிகை "நான் ரியானை பெற்றெடுத்ததுதான் என் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியான தருணம் . அதே சமயம்.கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.
இரண்டாவது மகன் ரஹீல் பிறந்தபோது,நான் உற்சாகமான தாயாக இருந்தேன்.
"ரஹீல் பிறந்தபோது, என் உற்சாகம் குறையவே இல்லை.என் முதல் குழந்தை பிறந்த அதே சந்தோஷம்தான் இப்பொழுதும். அனால் இப்பொழுது கவலைபடாமல், தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கிறேன். என்னால் என்ன முடியுமே அதை சரியாக செய்கிறேன் "

என்கிறார் ஜெனிலியா.

ஜெனிலியாவும், கிட்டத்தட்ட எல்லா தாய்மார்களும் கடந்து செல்ல பாதையை தானும் கடந்தார். இது அவர் தன்னடக்கத்தை குறிக்கும். இரண்டாவது முறை கருவூரும் தாய்களுக்குக்கு இது நல்ல உதாரணமாக அமைகிறது.

தாய்மார்கள் அனைவரும் நினைவுகூர வேண்டிய விஷயம் ஒன்று தான். உங்கள் முதல் குழந்தை, புதிதாக பிறந்த உடன்பிறப்போடு எப்படி சேர்ந்து வாழ போகிறார் என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.எல்லாம் தன்னால் நடக்கும் . இந்த கவலையை மறந்தால், இரண்டாவது பிரசவத்தை சுமூகமாக பயணிக்கலாம்.

Source: theindusparent

Written by

theIndusparent