நகரில் ஒரு புதிய அச்சுறுத்தல் உள்ளாகி இருக்கிறது. இது நம்மை நோக்கி வருகிறது.கொடிய டெங்கு காய்ச்சல் நம்மை நோக்கி அதிவேகமாக வருகிறது.இது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அதிகமாக உள்ளது.
கட்டட வேலைகள் மற்றும் குடியிருப்பில் உள்ள தண்ணீர் டாங்கை மோசமாக பராமரிப்பது ஆகியவைதான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கியமான கரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
தலைநகரில் வேகமாக டெங்கு பரவுகிறது
இந்த சூழ்நிலையைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும், நம் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தைக்கு டெங்கு வராமல் பாதுகாப்பது உங்கள் பொறுப்புதானே?
துரதிருஷ்டவசமாக, கடந்த மூன்று மாதங்களில் டெல்லியில் 24 டெங்கு கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதற்காகவே, பெற்றோர்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ள, டாக்டர் அமிதாப் பார்டி, கூடுதல் இயக்குநர், உள் மருத்துவம், ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்,அவர்களை தொடர்புகொண்டு இந்த அச்சுறுத்தலை உடனடியாக எப்படி சமாளிக்கவும் முடியும் என்பதை கேட்டுக்கொண்டோம்.
"டெங்கு காய்ச்சல் நான்கு வித வைரஸ்களிலிருந்து தோன்றுகிறது.அய்டஸ் ஏகிப்தி கொசுவினால் பரவும் டெங்குவின் அறிகுறி காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி மற்றும் அத்துடன் தோல் வெடிப்பு ஆகியவை அடங்கும்.இதற்கான தடுப்பூசிகள் இல்லை என்றாலும், , சுகாதாரத் தரத்தை உயர்த்துவதன் மூலம், கொசு இனப்பெருக்கம் தடுக்கப்படுவதன் மூலம் இந்த நோய் தடுக்கப்படலாம் "என்று குறிப்பிட்டார்., டெங்கு நோயாளிகளின் சில பொதுவான அறிகுறிகளை எளிதாகக் கண்டறியக்கூடியதாக இருக்கும். இதை பெற்றோர்கள் நன்கு கவனிக்க வேண்டும் என்றார்.
டெங்கு நோயின் 7 அறிகுறிகள்
- கடுமையான தலைவலி
- கண்கள் பின்னால் வலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- வீங்கிய சுரப்பிகள்
- தசை மற்றும் மூட்டு வலி
- தோல் வெடிப்பு
- அதிக காய்ச்சல் 40 ° C / 104 ° F

டாக்டர் பார்டியும், சில குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் தன்மை அதிகமாக உள்ளது,அதனால் பெற்றோர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
- கொசு இனப்பெருக்கம் ஊக்குவிக்கும் அசுத்தமான நீரும், அசுத்தமான சூழலைக் கொண்டிருக்கும் ஆபத்து மண்டலத்தில் வசிக்கும் குழந்தைகள்.
- டெங்கு நோயால் முன்னால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
- குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள்
- குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை கொண்ட குழந்தைகள்
நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எந்த வகையின்கீழ் வந்தால், உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு கவனமாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக,அறிகுறிகள் டெங்குவை நோக்கி சுட்டிக்காட்டுவதாக உணர்ந்தால், வீட்டில் ஒரு ஆரம்ப சோதனை மேற்கொள்ளலாம்.
டாக்டர் பார்டி,உடல் வெப்பநிலை , குமட்டல், வாந்தி, வலி தொடர்புடைய அறிகுறிகள், தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார்.
சிறப்பு பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
இருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்தால், ஒரு நிபுணரை ஆலோசிக்க வேண்டும். தற்போது, நான்கு வகையான டெங்கு டெஸ்டுகள் உள்ளன. அவை பொதுவாக வழக்கமாக நடக்கும் டெங்கு பரிசோதனைகளாகும்.. பிளட் கவுண்ட் டெஸ்ட், என்.எஸ் 1 ஏ. ஜி டெஸ்ட், எலிசா டெஸ்ட், டி.என்.ஏ வைரஸை கண்டறிய பி.சி.ஆர் டெஸ்ட், சீரம் ஐ.ஜி.ஜி மற்றும் ஐ.ஜி.எம் டெஸ்ட் ஆகியவை அடங்கும்.
டாக்டர்கள் தேவையான மருந்தை பரிந்துரைக்கும்போது, பெற்றோர்கள் பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
1 கொசு முட்டையிடும் வசிப்பிடத்தை தடுக்க, திறந்த மற்றும் தேங்கிய நீர் ஆதாரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள்.
2 . திறந்த நீர் ஆதாரங்கள் முற்றிலும் நீக்கமுடியாமல் இருந்தால், அவற்றை மூடி, சரியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்.
3 கொசுக்கடிகளை தடுக்க கொசு வலைகள், கொசு சுருள்கள், கொசு தடுக்கும் நீராவி மற்றும் கிரீம்கள் ,முழூ கை சட்டைகள் போன்ற பாதுகாப்புகளைப் பயன்படுத்தவும்.
4 வைரஸ் காய்ச்சல் ஆரம்ப தொற்றுக்கு வேறுபட்டால், ஒரு நபர் இரண்டாவது முறையாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுவார்.
எனவே போதுமான பாதுகாப்பு உதவி செய்யுங்கள்.
Source: theindusparent