சிசேரியன் தாய்மார்கள் அடிக்கடி கேட்டு சோர்வடைய செய்யும் மூன்று கருத்துகள்

சிசேரியன் தாய்மார்கள் அடிக்கடி கேட்டு சோர்வடைய செய்யும் மூன்று கருத்துகள்

நீங்கள் சிசேரியன் தாய்மாரா? இந்நேரம் உங்களுக்கு ஏன் சுகப்பிரசவம் ஆகவில்லை என்றும் புணர்குழாய் வழியை ஒப்பிடும்போது எப்படி எளிதில் பெற்றுடுத்தீர்கள் என்று குடைந்திருப்பார்களே.

எனக்கு முதன்முதலில் சிசேரியன் ஆனாபோது, என்னால் இரண்டு மாதங்களுக்கு மேல் நடக்க முடியவில்லை. என்  உடல் குணமடைய மறுத்தது. மிக மெதுவாக நடந்தேன். என் வயிற்றின் கணம் தாங்க முடியாமல், அதை பிடித்து கொண்டே நடந்தேன். நான் பிடிக்காவிட்டால் எந்நேரமும் என் வயிறு கீழே விழலாம் என்பதுபோல் உணர்ந்தேன். என் முதல் அனுபவம் வலிமிகுந்ததாக இருந்தது.

இரண்டாவது முறை, நான் சீக்கரம் குண்டமடைந்தாலும்,சிகிச்சை தையல் மிகுந்த வலியை தந்தது.

எந்த பிரசவ முறை சிறந்தது என்பதை பற்றி இதுவரை நான் சிந்தித்ததில்லை. அனால் சமீபத்தில், சிசேரியன் வழி சுகப்பிரசவத்தை விட எளிதானது என்று யார் சொல்வதோ கேட்டேன். சில விஷயங்களை தெளிவு படுத்த முடிவெடுத்தேன்.

நான் கேட்ட சில கருத்துக்களை உங்களிடம் பகிர்கிறேன். இதை போன்ற வார்த்தைகளை வேறு எந்த தாயும் கேட்க கூடாது என்று வேண்டுகிறேன்.

1. ஐயோ! உன்னால் பிரசவத்தின் சுகத்தை அனுபவிக்க முடியவில்லையே

இதற்கென்ன அர்த்தம்? ஓர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து கொடுக்கும் இந்த முறையும் எப்படி போலியாகும்?
சிசேரியன் தாய்மார்கள் அடிக்கடி கேட்டு சோர்வடைய செய்யும் மூன்று கருத்துகள்

சில மருத்துவ காரணங்களால் எனக்கு சிசேரியன் முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், சுகப்பிரசவம் போல இதுவும் ஒரு முறை என்பது உண்மை.


2. “ஆஹா! இப்பொழுது நீ சுலபமான முறையில் பெற்றெடுக்கலாம்”

பெற்றெடுப்பதில் என்ன சுலபம்? சிசேரியன், உடல்பாரம் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுத்தும். என் முதல் சிகிச்சைக்கு பின் என் பச்சிளங்குழந்தைக்கு என்னால் பாலொத்த முடியவில்லை. அந்த வலி மிகவும் வேதனை மிகுந்தது. உடலைவிட, உணர்வுபூர்வமான சோர்வை அடைந்தேன்.

3. "குறைந்த பட்சம் "அந்த" இடத்தில தையல் இருக்காது"

சிசேரியன் தாய்மார்கள் அனைவருக்கும் அடிவயிற்றின் கீழ்,இடுப்புக்கூடுக்கு மேல் ஒரு தழும்பு இருக்கும். இந்த தழும்பு எப்பொழுதும் போகாது. இந்த தழுப்பு முற்றிலும் அகன்று விட்டது என்று கூறும் ஒரு தாயை நான் இதுவரை கண்டதில்லை.

நானும் அந்த தழும்புக்கு சொந்தக்காரிதான். " அந்த" இடத்தில இல்லை என்றாலும் அதை சுற்றிதான் இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் என்னுடன்தான் இருக்கும். இதற்காக நான் கலவைப்பட போவதில்லை.

Source: theindusparent

Written by

theIndusparent