சாப்ஜா விதைகளின் 5 ஆரோக்கியமான நலன்கள்

சாப்ஜா விதைகளின் 5 ஆரோக்கியமான நலன்கள்

இது கோடை காலம்.அதிக வியர்வையினால் நீரிழப்பு ஏற்படும்.எனினும், உங்கள் உடலை குளிர்ச்சியாக்க , இழந்த ஊட்டச்சத்துக்களை திரும்ப பெறவும் பல இயற்கை உணவுகள் உள்ளன.

நீங்கள் மும்பை அல்லது கோடை அனுபவங்களைப் பெரும் சூடானபகுதிகளிலில் வசித்து வந்தால், சாப்ஜா விதைகள் பற்றி கேள்வி பட்டிருப்பிறீர்கள். குளிர்ச்சியான பண்புகள் காரணமாக கோடைகாலத்தில்  சாப்ஜா விதைகள் அல்லது துளசி விதைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

நீங்கள் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், உங்கள் மில்க் ஷேகில் கீழே உட்கார்ந்திருக்கும் கருப்பு ஜெல் போன்ற விதைகளை நீங்கள் கவனித்திருக்கலாம்.. இந்தியாவிற்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்தும், சாப்ஜா விதைகளின் மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

சாப்ஜா  விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்

இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கையில், சாப்ஜா பல ஆரோக்கிய நலன்களும் கொண்டிருக்கிறது. அனால் இதை பற்றி அதிகமாக பேசப்படவில்லை. ஒரு தேக்கரண்டி சாப்ஜா விதைகளில்  21 கலோரி, 2 கிராம் புரதம், 4 கிராம் கார்பெஸ் மற்றும் கொழுப்பு 0.5 கிராம் ஆகியவை இருக்கிறது, தெரியுமா? A, E, K, B வைட்டமின்கள், மெக்னீசியம், ஃபைபர், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இந்த விதைகளில் உள்ளன.

மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய  சாப்ஜா  விதைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்:

# 1 செரிமானத்தை மெருகூட்டும்

உண்மையில், சாப்ஜா விதைகள் தண்ணீரை உறிஞ்சி,தங்களைச் சுற்றியுள்ள ஜெலட்டின் பூச்சுகளை உருவாக்குகின்றன. இந்த ஜெலட்டின் பூச்சு செரிமானத்தைத் திருத்தி, உங்கள் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மலச்சிக்கலை அகற்ற உதவும்.

# 2 உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்

சாப்ஜா  விதைகள் இயற்கை குளிரூட்டிகள். கோடைகாலத்தில், உடலை குளிர்விக்கும் பண்புகளைக் கொண்டது.அதனால்தான் பலர் கோடைகால மாதங்களில் தங்கள் பழ சாறுகள் மற்றும் பாலோடு சேர்க்கிறார்கள்.

# 3 எடை குறைப்பு

தண்ணீரில் நனைத்த போது சாப்ஜா விதைகள் விரிவாக்கும் தன்மை உள்ளது. இதனால், சாப்ஜா விதைகள் உங்கள் பசியை போக்கி உங்களை முழுமையாக்கி, எடை இழப்புக்கு உதவுகிறது. தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

# 4 டயபீடீஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது . மற்றும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. துளசி,  இரத்த சர்க்கரை குறைக்கும் பண்புகளுக்கு அறியப்படுகிறது.மற்றும் அதன் விதைகள் ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

# 5 கூந்தல் மற்றும் மேனி ஆரோக்கியம்

சாப்ஜா விதைகள்  அதிகமான வைட்டமின்கள் கொண்டுள்ளது.குறிப்பாக வைட்டமின் கே, நமது மேனி மற்றும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.இது புரதம் மற்றும் இரும்பு சத்து மிக அதிகமாக இருக்கிறது.ஒரு சிறிய கப் சாப்ஜா விதைகள் நமக்கு தேவையான சத்து தரும்.

அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது:

தண்ணீரில் ,  ஒன்றுக்கு மேற்பட்ட தேக்கரண்டி  சாப்ஜா விதைகளை  30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

உங்கள் மில்க் ஷேக், பால் மற்றும் தண்ணீரில் சேர்த்து கொண்டு பகிரலாம். கோடை நாட்களில் புத்துணர்ச்சியளிக்கும்.

Source: theindusparent

Written by

theIndusparent