குழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்

குழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்

குழந்தையின் மாலை உணவு தயார் செய்வது என்றாலே பல பெற்றோர்களுக்கு சிக்கல்தான்.கீழ் குறிப்பிட்டுள்ள குழந்தைக்கான சில எளிமையான சிற்றுண்டிகள் உங்கள் வேலை பளுவை அதிகரிக்காது.உங்கள் குழந்தைக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவைப் போலவே, மாலை சிற்றுண்டிகளும் குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்கு  முக்கியம்.மதிய உணவிற்கும் இரவு உணவுக்கும் இடையே இருக்கும் இடைவேளை அதிகம்.இரண்டு உணவுகளுக்கு இடையே,  வீட்டில் தயார்செய்யப்பட்ட சிற்றுண்டி குழந்தையின் ஆற்றலை அதிகரிக்கும் .ஆனால் குழந்தைக்கான மாலை சிற்றுண்டி தயார் செய்வது என்றாலே பல பெற்றோருக்கு திண்டாட்டம்தான்.

இதில் அதிக நேரம் செலவிடுவதும்த, தயார் செய்வதிலிருக்கும் சிரமமும் தான் பெரும் காரணம் .உங்கள் வேலை பளுவை அதிகரிக்காமல், குழந்தைக்கான சிற்றுண்டியை எப்படி தயார் செய்வது என்பதை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

குழந்தைகளுக்கு  எளிதான  மாலை சிற்றுண்டி

1 . குடிப்பதற்கான சிற்றுண்டி

குழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்

பதப்படுத்தப்பட்ட பழ சாறுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது குழந்தைக்கு ஆரோக்கியம் என்று பல பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.

 

பதப்படுத்தப்பட்ட சாறு, ஆக்ஸிஜனேற்ற தன்மை,ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து போன்றவற்றை இழந்துவிடுகிறது .இது வெறும் ஆரோக்கியமற்ற சாறு. செயற்கை வண்ணம் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படும்.

 

சாதாரண பழத்தை பாலுடன் சேர்த்தாலே சுவாரசியம் அதிகரிக்கும்.பழம் மற்றும் பாலில் இருக்கும் கேல்ஷியத்தின்  நன்மை உள்ளடங்குயிருக்கும்.பழத்தில் இருக்கும் நார்ச்சத்து பாலினால் சேதம் அடையாது.

 

பழ ஸ்மூத்தி அல்லது பழ லஸ்ஸியை குழந்தைக்கு மாலை சிற்றுண்டியாக கொடுக்கலாம்,

 1. பீனட் பட்டர் டோஸ்ட்

 

குழந்தைக்கு பட்டர் டோஸ்ட் தான்,  பெற்றோர்கள் சிந்திக்கக்கூடிய எளிமையான சிற்றுண்டி. சந்தையில் பல வகையான  கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணைகள்,  கிடைக்கும் நிலையில், பழைய வகையான பிரெட் டோஸ்டை புதுப்பிக்கலாம்.

ஆல்மண்ட் பட்டர், பீனட் பட்டர் மற்றும் ஹேஸல்நட் பட்டர் , உங்கள் சுட்டிக்கான ஆரோக்கியமான தேர்வு.

 1. வீட்டில்  தயாரிக்கப்பட்ட  எனெர்ஜி பார்ஸ்

சாக்லெட்டை சிற்றுண்டியாக உங்கள் குழந்தை சாப்பிடுகிறானா? குழந்தையின் இனிப்பு ஏக்கத்திற்கு , வீட்டில் தயாரிக்கப்பட்ட   எனெர்ஜி பார்ஸ்கொடுக்கலாம் . குழந்தைக்காக சுவையான மற்றும் ஆற்றல் மிக்க உணவாக இந்த எனெர்ஜி பார்ஸ்இருக்கும்.வீட்டு தயாரிக்கப்பட்ட  எனெர்ஜி பார்ஸ் குழந்தைகளுக்கு ஏற்ற உணவுதான்

குழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்

நட்ஸ் , வறுத்த  ஓட்ஸ் , பேரீச்சம்பழ மசியல் மற்றும் எண்ணெயை சேர்ந்து கலக்கவும்.ஒரு அச்சில் வைத்து, சில மணிநேரம் காத்திருக்கவும். கட்டியான பின்பு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு ஜாடியில் போட்டு வைக்கலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கான எளிதான சிற்றுண்டி இதுதான்.

4.பழம் மற்றும் நட்ஸ் யோகர்ட்

யோகர்ட்கு, டல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாவைக் கொண்டுள்ளது.இதனால் உங்கள் செரிமானம் மேம்படும்.சிற்றுண்டின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும்.

பழத்திலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பிள்ளையின் வளர்ச்சிக்காக அவசியம்.அதேசமயத்தில் கொட்டைகளில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

 1. முட்டை

முட்டை புரதத்தின் முழு மூலமாகும். இவை அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.குழந்தையின் வளர்ச்சிக்காகவும் ஊட்டச்சத்திற்காகவும் தேவைப்படும்.

 

இது தவிர,முட்டையில் இருக்கும் கோலைன் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும் . தோல் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு அமைப்பு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் பார்வையை  மேம்படுத்துகிறது.

 

சில முட்டை சார்ந்த உணவு இதோ

 

 • ஆம்லெட்
 • முட்டை துருவல்
 • வேகவைத்த முட்டை சாண்ட்விச்
 • வறுத்த முட்டை

 

5.காட்டேஜ் சீஸ் அல்லது பனீர்

பனீரில் அதிக புரதம் உள்ளது.பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு  பனீரின் நன்மைகள் பல கிட்டும்

குழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்

ருசியான சில பனீர் சமையல் இதோ!

 • வறுத்த தாவா பனீர்
 • வறுத்த பணீர் சாண்ட்விச்
 • பனீர் டிக்கி
 • பனீர்   ஃ பிராங்கி

 

Written by

theIndusparent