குழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்

குழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்

குழந்தையின் செரிமானத்தை வலுப்படுத்துவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் .இந்த இந்திய உணவு பண்டம், ஆரோக்கியமான பயன்களை அளிக்கும் அற்புத உணவாகும்.

நெய், ஒவ்வொரு இந்திய வீட்டிலும் இன்றியமையாத அங்கமாகும். ஏனெனில், அதன் ஊட்டச்சத்து முக்கியமானது .பல்லாண்டுகளாக இந்தியர்களாகிய நாம் நம்முடைய பருப்பு மற்றும்  அல்வாக்களில் நெய்யை விரும்பி சாப்பிடுகிறோம். இன்னும் என் தாய்வீட்டிற்கு செல்கயில், அவர் எனக்கு நெய்யில் வாட்டிய சப்பாத்தியை மதியம் மற்றும் இரவு உணவாக கொடுப்பார்.

எனினும், தற்காலத்திய உடற்கட்டை  முக்கியமாக பார்க்கும் தாய்மார்கள் , நெய்யை குழந்தைகளுக்கு ஏற்றதாக பார்காததுடன் ,அதன் உணவு பண்டங்களில் சேர்க்காத தன்மையும் என்னை அதிர்ச்சி அடைய செய்கிறது.சந்தையில் கிடைக்கும் உணவு பொருட்களில், நெய்தான் ஆரோக்கியமானது .அதிலும், இந்த நெய்யை வீட்டிலேயே தயாரித்து மிக சுகாதாரமாக தங்கள் குழந்தைக்கு தரலாமே?

நீங்கள் இன்னும் இதை நம்பவில்லை என்றால் , நெய் தரும் சுகாதார பலன்களை பின்வரும் பக்கங்களில் அறிவீர்கள்.

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவு

பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதங்களுக்குள் உடல் எடை இரட்டிப்பாகிறது. அதனால்தான், அவர்களுக்கு உடல் வளர்ச்சிக்கு ஆற்றல் அவசியமாகிறது.இந்த அவசியமான ஆற்றலை நெய் அளிக்கிறது . இதனால்,அவர்களுக்கு ஆரோக்கிய வளர்ச்சியும் முன்னேற்றமும் மேற்படுகிறது.

எளிதில் செரிமானம் ஏற்படுவது

நெய்,வெண்ணெயைவிட கொழுப்புசத்து குறைவாகவும் எளிதில் ஜீரணிக்கும் உணவாகவும் இருக்கிறது.குழந்தைகளின் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானத்தை மேம்படுத்தும் கொழுப்புச்சத்துதான் அவர்களுக்கு தேவை.இன்றைய

அளவில் மிகஆரோக்கியமானதும் , குழந்தையின் குடலை பாதிக்காத உணவாகவும் நெய் இருக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

நெய், அத்தியாவசியமான வைட்டமின் A  D E மற்றும் K  நிறைந்தது.இதில், குழந்தையின் மூளைவளர்ச்சி மற்றும் திறன்படுதலுக்கான டாகோசாஹெக்சேனாயிக் அமிலம் (DHA) என்ற கொழுப்பு அமிலத்தை கொண்டுள்ளது என்று விஞ்ஞான ரீதியாக தெளிவாகிறது.
மூளை வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் நெய்யின் பங்கு ஆயுர்வேதத்தில் அறியப்பட்டுள்ளது. கற்பதிலும், நினைவாற்றலை மேம்படுத்தும் நெய் னார்பங்கு ஆற்றுகிறது
Desi-Ghee2

சமையலுக்கு சிறந்தது

நெய்யில் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால். சமைக்கும்போது, எளிதில் தீப்பிடிக்காத தன்மையும்  மிக அதிக  புகைபிடிக்கும் புள்ளியும் உள்ளது. தாவிர எண்ணெய்கள் எறிவூட்டப்பெறாத கொழுப்பை கொண்டதால் , அவற்றை அதிகமாக நெருப்பில் வாட்டுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் .இதில் பெராக்சைடு மற்றும் பிரீ ராடிக்கல்ஸ் போன்ற வேதியல் மாற்றங்கள் ஏற்படுவதினால் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அடங்கியது

நெய், வைட்டமின்களையும் தாதுப்பொருட்களையும் செரிக்கவைத்து உள்வாங்க உதவுகிறது.நெய்யின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் என்று சொல்லக்கூடிய  ஆக்சிஜெனேற்றத்தடுப்பான், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இதனால், குழந்தைகளுக்கு பருவகால நோய் ஏற்படாமல் தடுக்கிறது,

இது அவரவர் குழந்தையின் வயதையும் சுவை விருப்பத்தையும் பொறுத்தது. ஆரம்பத்தில் அரை தேக்கரண்டி அளவு நெய்யை குழந்தைக்கான பருப்பிலோ அல்லது கிச்சடியிலோ சேர்க்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தேக்கரண்டியாக உயர்த்தலாம் . ஒரு நாளில், இரண்டு தேக்கரண்டிக்கு மேல் உயர்த்த வேண்டாம். அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு.

ஆரம்ப காலகட்டத்தில், வெறும் அரை கரண்டி நெய்யை கொடுத்து பாருங்கள் .மெதுவாக இந்த அளவை அதிகரியுங்கள்.வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்தான் குழந்தைக்கு சிறந்தது.ஏனெனில், இதில் எந்த பதனப்பொருளும் செயற்கை கொழுப்பும் இல்லை.

Written by

theIndusparent