குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள்

குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம்: பெற்றோர்கள் எங்கே வரம்பு மீறுகிறார்கள்

"என் பிறந்தநாள் கொண்டாட்டமும் ஒரு கிளப் ஹவுசில் நடக்கவேண்டும்" என்று என் ஐந்து வயது ஆகப்போகும் மகள், நவ்யா , கூறுகிறாள்.

இந்த சனிக்கிழமையன்று ஒரு பிறந்த நாள் விழாவில் இருந்து நாங்கள் திரும்பியபோது, "என் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டமும் இது போன்ற  ஒரு கிளப் ஹவுசில்தான்  நடக்கவேண்டும்" என்று என் ஐந்து வயது மகள், நவ்யா கூறினாள்.

" டாட்டூ ஓவியரையும் மேஜிக் செய்பவரையும் எப்படி தொடர்பு கொள்வது? அவரது  ஃபோன்  நம்பர் உங்களிடம் இருக்கா"? என்று என் மகள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

இந்நாளில் எல்லா பிறந்த நாள் கொண்டாட்டங்களையும்போல், நாங்கள் கலந்து கொண்ட பார்ட்டியும், நாம் வாழும் சமுதாயத்தில்  பரவலாக பேசப்பட தேவையான எல்லா கூறுகளையும் கொண்டிருந்தது. விழாவின் தலைப்பு "சூப்பர்ஹீரோஸ்" .வந்த குழந்தைகள் எல்லோரும் சூப்பர்மேன், ஐயன் மேன் போல்  தோற்றமளித்தார்கள்.  டாட்டூ ஓவியர், மந்திரவாதி, செல்ஃபி பூத் - என்று குழந்தைகளை உற்சாகப்படுத்தும் அனைத்து

வேடிக்கைகளும்  இருந்தது.
birthday magician

பியர் பிரஷரை சமாளிப்பது

அந்த பார்ட்டியில் நாங்கள் சந்தோஷமாக  இருந்தபோதிலும், என் மகள் வைத்த "சிறிய கோரிக்கைகள்" என்னை யோசிக்கவைத்தன. ஒரு பிறந்தநாள் பார்ட்டி என் குழந்தைமேல் ஏற்படுத்திய மன தாக்கத்தையும், அவளது சிந்தனை எவ்வாறு பாதித்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

கடந்த சில மாதங்களில் இத்தகைய சம்பவங்கள் பொதுவானதாகி வருவதாக உணர்ந்தேன்.சில வாரங்களுக்குமுன், பான்சி டிரஸ் தீம்- கொண்ட பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தாள். பிரோசென் படத்தில் வந்த  "நீல நிறத்தில் எல்சாவைப் போல்" ஒரு டிரெஸ் கேட்டு அடம்பிடித்தாள்.

அவள் விரும்பிய அடுத்த விஷயம், அவள் தோழி வீட்டில் பார்த்ததுபோல் ஒரு  " கிட்சன்செட்" . பிறகு  பளபளப்பான ஸ்கூட்டருக்கு ஆசை பட்டாள். இந்த சிறிய விஷயங்களை   எளிதாக வாங்க முடியும் என்றாலும், ஒரு பெற்றோராக எங்கே நாம் வரம்பு மீறுகிறோம் என்றுதான் கேள்வி.

நான் ஒரு  முற்போக்கான  தாய். உங்களுக்கே தெரிந்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக,என்னால் பியர் பிரஷர் என்று சொல்லப்படும் சகாக்களின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

 

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என் மகளின் நண்பர்கள் மட்டுமே எங்கள் பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு வருகை தந்திருக்கிறார்கள் அனால் இப்பொழுது, என் மகளுக்கு 5 வயது ஆகப்போகிறது. என் மகளை ,பியர்  பிரஷர் மற்றும் மற்ற தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்க போகிறேன் என்று தெரியவில்லை.

எனக்கு கவலை தரும் இன்னொரு விஷயம்  பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன்  தொடர்புடைய  வணிகம். இரண்டு வயது குழந்தைகளுக்கு தன் பிறந்தநாள் எப்படி கொண்டாடப்பட்டது என்பது தெரியாது., இது பெற்றோர்கள் முற்றிலும் தங்கள் திருப்திக்காக செய்கிறார்கள். சரிதானே?

நமக்கு  பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது நண்பர்களுடன் விளையாடவும், அம்மா சமைத்த சமோசா, ஜலேபி போன்ற சுவையான தின்பண்டங்களை சாப்பிடுவதும்தான் இருந்தது.இதோபோன்ற சாதாரண கொண்டாட்டங்கள் தற்பொழுது ஆடம்பர திருவிழாவாக உருவெடுத்துள்ளது. உங்கள் பார்ட்டி எவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் சமூக

அந்தஸ்து கூடும்.விருந்தினர் வருகைக்கு கொடுக்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட மக்ஸ், புகைப்பட  ஃபிரேம்கள், பார்பிகள் அன்று பட்டியல் நீடிக்கிறது. இந்த தீய சுழற்சியை நிறுத்த முடியாதோ என்ற பயம் எழுகிறது!

அது தனிப்பட்ட விருப்பம்தான். இதற்கு மேல்  அறிவுரைகளை நான் பகிர விரும்பவில்லை. ஒரு பெற்றோராக, நாம்தான் நம் குழந்தைக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.  நம் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். மற்றும் நம்மை கண்மூடித்தனமாக பின்பற்றுங்கள்.எனவே நாம் அவர்களிடம் முன்வைக்கும் விஷயங்களை பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், நாம் எல்லோரும் செய்யக்கூடிய விஷயம்  ஒன்றுதான்.பிறந்தநாளை கொண்டாடுவது  நல்லதுதான் என்றாலும், அன்பும், முத்தமும் அரவணைப்பும்தான் வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கிறது

என்று குழந்தைக்கு புரியவைக்க வேண்டும்.மேலும், இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக இருக்கும் நல்ல நட்பை பற்றியும் நண்பர்கள் பற்றியும் சொல்லி கொடுங்கள்.அன்பும் நட்பும் தவிர,

வாழ்க்கையில்வேறு என்ன வேண்டும்?

Source: theindusparent

Written by

theIndusparent