குழந்தைகளுக்கான ஐந்து ஆரோக்கியமற்ற இந்திய காலை உணவுகள்

குழந்தைகளுக்கான ஐந்து ஆரோக்கியமற்ற இந்திய காலை உணவுகள்

இதில் கூறப்பட்ட அனைத்து காலை உணவும் நம் இந்திய வீடுகளில் அடிப்படை உணவாகும் .கண்மூடித்தனமாக நாம் நம் குழந்தைகளுக்கு  இதை தொடர்ந்து ஊட்டுகிறோம்.

காலை  உணவு மிக முக்கியம்  என்பதை நாம் நன்கு அறிவோம். நம்  அன்றாட வாழ்க்கையை ஆரோக்கியமாக முன்னெடுக்க   போதுமான ஆற்றல் தரும். ஆனால், நம் காலை உணவுகள் பலவும்  ஆரோக்கியமற்றது என்று தெரியுமா ?

என்னதான் நாம் பாரம்பரிய உணவை நேசித்தாலும், பெரும்பாலான இந்திய உணவு, எண்ணையில் பொரித்தெடுத்ததாகவும் அல்லது சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டதாக இருக்கும்.இதெல்லாம் நம் வீடுகளில் அடிப்படை உணவாகும் .கண்மூடித்தனமாக நாம் நம் குழந்தைகளுக்கு  இதை தொடர்ந்து ஊட்டுகிறோம்.

நாங்கள் எந்தெந்த உணவை குறிப்பிடுகிறோம் என்பதை ,பின்வரும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். இது முற்றிலும் உங்கள் குழந்தையின் நலனுக்காகவே எழுதியுள்ளோம்.

#1 சீரியல்ஸ்

சீரியல்ஸ்  விளம்பரங்கள் உங்களை வசீகரித்தாலும்,இந்த பதப்படுத்தப்பட்ட உணவு ஆரோக்கியமற்றது.இது சர்க்கரை மற்றும் உப்புக்கள் அதிக அளவு கொண்டிருக்கும். மேலும், இதில் இயற்கையான மூலப்பொருட்கள் இல்லை. இது போன்ற சீரியல்கள் பயன்படுத்தும்  தானியங்களை பதப்படுத்தும்போது  தன் ஊட்டச்சத்தை  இழந்துவிடும்.

உங்கள் குழந்தை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.இதற்கு பதிலாக, பால்,பழங்கள்,  மிளகும் உப்பும் கலந்த வேகவைத்த சோளத்தை கொடுக்கலாம்.முடிந்தால், வேகவைத்த முட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலுக்குத்தேவையான அணைத்து அத்தியாவசிய சத்துக்களும் சோளத்திலும் முட்டையிலும் உள்ளது.

cereals-copy

#2 பாராதாஸ்

பெரும்பாலான இந்தியர்கள் பாராதா பிரியர்கள் . அதை உருக்கிய வெண்ணெயுடன் பரிமாறினால் இன்னும் ருசியாக இருக்கும். அனால் வளரும் குழந்தைகளுக்கு இது ஆரோக்கியமான காலை உணவா என்பது சந்தேகம்தான். பாராதாவை வறுத்தெடுப்பதால், இதிலுள்ள காய்கறியில் இருக்கும் சத்துநீங்கி, தொழுப்பு சத்து அதிகமாகிவிடும்.

parantha

இதனால் நீங்கள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அதை ஆரோக்கியமாக தயார் செய்ய சில முறைகள் உண்டு.உதாரணத்திற்கு, மைதாவை தவிர்த்து, கோதுமை மாவு, சோள மாவு, கேழ்வரகு அல்லது கம்பு மாவை பயன்படுத்தி பாருங்கள். வறுத்த காய்கறிகளை சேர்க்காமல், வேகவைத்த காய்கறிகளை  சேருங்கள். சிறிய அளவில் எண்ணை சேர்த்து, தயிருடன் பரிமாறினால், உடல் செரிமானம் மேம்பட்டு கொழுப்பு சேர்வதை தவிர்க்கும்.

 

#3 துவடை-  சாம்பார்

சாம்பார் சாப்பிடுவது தவறில்லை . அனால் அதோடு  பொரித்தெடுத்த  மெதுவடைக்குதான் தடா!சில தென் இந்திய வீடுகளில் இந்த ருசியான பண்டத்தை காலை உணவாக தயார் செய்வார்கள். சாம்பாரிலிருக்கும் பருப்பும் குழந்தைகள் செரிமானத்தை கடினமாக்கும். வடையில் இருக்கும் உளுத்தம் பருப்பு, ஜீரணிக்க எளிதானது அல்ல. ஒரு காலை உணவிற்கு முக்கியமான தேவை எளிதில் ஜீரணமாவது. அனால் வடையில் அந்த குறிப்பிட தன்மை இல்லை.

vada-copy

#4 பிரெட் பட்டர் டோஸ்ட்

நாம் அனைவரும் அளவுக்கு மீறி பிரெட் பட்டர் டோஸ்ட்  சாப்பிட்டிருப்போம். இதுவும், ஆரோக்கியமற்ற காலை உணவுதான். இந்த டோஸ்ட், கார்போஹைட்ரேட் நிறைந்த மாவினாலும், கொழுப்பு நிறைந்த வெண்ணையினாலும் தாயாரானது. இதில் எந்த வித ஊட்டச்சத்தும் இல்லை.

இந்த ரொட்டி மற்றும் வெண்ணையில் பேக்கேஜிங் டப்பாவை படித்தால், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி புரியும். இவை எதுவுமே சீக்கிரம் செரிமானம் ஆகாது.

ரொட்டியும் வெண்ணையும் மட்டும் உண்ணாமல், காய்கறியும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்சோ அல்லது பிரட் போஹாவோ, நிறைய காய்கறிகள் சேர்த்துகொண்டு சாப்பிடுவது நல்லது.

#5 பூரி சப்ஜி

இந்திய வீடுகளில் பெரும்பாலும் மிக பிடித்த உணவு பூரி சப்ஜி. பூரி  எண்ணையில் பொரித்தெடுக்கப்படும் ஒரு பண்டம். இதனோடு தயார்செய்யப்படும் சப்ஜியும் எண்ணையில் வறுக்கப்பட்டது.

அதிக கலோரிகளை தவிர்க்க , பூரிக்கு  பதிலாக சப்பாத்தி செய்து, உங்கள் சபிஜியில் சிறிய அளவு எண்ணை சேர்த்துக்கொள்ளுங்கள். போஹா,  உப்புமா போன்ற மாற்று பண்டங்களும் ஜீரணிக்க எளிதானவை.

Source: theindusparent

Written by

theIndusparent