குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு : நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்

lead image

குழந்தைகளின்  மத்தியில் மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனை.ஆனால், சில எளிய கைவைத்தியங்களால் சரி செய்துவிடலாம். மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் பிள்ளைக்கு வாரத்திற்கு மூன்று முறை குடல் இயக்கம் குறைவாக உள்ளதா ?மலம் கழிக்கும்போது குழந்தைக்கு  கடினமாக இருக்கிறதா? பதில் "ஆமாம்" என்றால், அவர் மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்.இதற்கு கவலைகொள்ளவேண்டாம். இந்த பிரச்னையை எளிதில் சரிசெய்ய பல தீர்வுகள் உள்ளன.

முதலாவதாக,  குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளவேண்டும்

குழந்தைகளுக்கு ஒழுங்கற்ற மலம் கழித்தல் மற்றும் அதற்கான வைத்தியம் ?

எதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எடுத்துக்கொள்ளக்கூடாது?

குழந்தைக்கு மலம் கழிக்கும்பொழுது அதிக வலியும் சிரமமும் ஏற்பட்டால், அது மலச்சிக்கலின் தெளிவான அறிகுறியாகும்.

மலச்சிக்கல் குழந்தையின் குடல் இயக்கத்தை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.குழந்தைகள் ஒரு வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை மலம் கழிப்பார்கள். சில குழந்தைகள் வாரத்திற்கு நான்குஉரை கழிப்பார்கள்  

பின்வரும் முறைகள்தான் குழந்தைகள் மலம் களின் வழக்கமான முறைகள் :

 • இரண்டு வாரங்களுக்கு குறைவான பிறந்தகுழந்தைகள், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழிக்கவேண்டும்.
 • இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் இரண்டு அல்லது மூக்கு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருக்கக்கூடும்.குழந்தை நன்றாக உண்டு உறங்கினால் , இதை பற்றி பெரிதாக கவலைப்படவேண்டாம்.
 • ஒவ்வொரு முறை தாய்ப்பால் அருந்தியபின்பு பிறந்த குழந்தைக்கு மலம் கழிக்கும்.
 • மூன்று அல்லது நான்கு வயதிற்குட்பட்ட குழந்தை, நாளைக்கு இரு முறை அல்லது வாரத்திற்கு மூன்று முறை குடல் இயக்கம் இருக்கலாம்.

மலச்சிக்கல் எதனால் ஏற்படும்?

Remedies for constipation in children

தாய்ப்பாலிலிருந்து பார்முலாவிற்கு மாறும் குழந்தைக்கு நிச்சயம் மலச்சிக்கல் ஏற்படும்.உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பு இந்த மாற்றத்திற்கு ஏற்றதுபோல் சரிசெய்துகொள்ளும்.

குழந்தை வளர, திடமான உணவை சாப்பிட தொடங்கும் பொழுது, குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். மலத்தின் அளவு அதிகரிக்கும்பொழுது குடல் இயக்கமும் குறையும்.

குடல் இயக்க முறைமைகளை கவனத்தில் கொள்வது அவசியம் . மலம் கழிக்கும்பொழுது, சில குழந்தைகளின் முகம் சிவந்து போகும்.இது சாதாரணம்தான்.

குழந்தைகளில் மலச்சிக்கல் பொதுவான அறிகுறிகள்

குழந்தைகளில் மலச்சிக்கலின் சில பொதுவான அறிகுறிகள் இதோ!

 

 • ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள்

 

மூன்று முறைக்கும் குறைவான குடல் இயக்கம்.வலி மிகுந்ததாகவும் கடினமாகவும் இருக்கக்கூடும்.கூடுதலாக,  மலம்  பெரிய வட்டமாக இருக்கக்கூடும்.மலம் கழிக்கும்பொழுது வயிற்று வலியால் அவதிப்படலாம்.

 

 • மலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 

உங்கள் பிள்ளையின் டயப்பர்  அல்லது உள்ளாடைகளில் களிமண் போன்ற மலட்டுத் தடங்களை நீங்கள் கவனிக்கலாம்.இதுதான் மலம் மலக்குடலில் சிக்கியிருப்பதன் அடையாளம் . இரத்தம் தோய்ந்த மலம் அல்லது சில இரத்த துளிகள் தென்பட்டால், மலவாய் பிளைவு ஏற்பட்டதன் விளைவாகும்."குடலை கட்டுப்படுத்தக்கூடிய தசைகளில் ஏற்படும் பிளை வால்" இரத்த கசிவு ஏற்படும்.

 

 • கழிப்பறை பயன்படுத்துவதில் தயக்கம்

 

கழிப்பறைக்கு செல்வதற்கான பயம் ஏற்படலாம்.மலம் கழிக்கவும் தயங்கலாம். வலிமிகுந்த மலத்தை கழிப்பதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். பிட்டத்தை இறுக்கி மலம் கழிப்பதை தடுக்க முயற்சிக்கலாம்.

 

 • சிறுநீரக பாதையில் மாற்றங்கள்

 

உங்கள் குழந்தை அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழிக்கக்கூடும். மேலும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

 

 • பசியார்வத்தின் மாற்றங்கள்

 

முன்பை விட, சாப்பாட்டில் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். பசியின்மை, குமட்டல் மற்றும் சில நேரங்களில் வாந்தியெடுத்தல் ஆகியவற்றைக் கவனிக்கலாம்.

இந்த அறிகுறிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.இதைப்பற்றி குழந்தையே உங்களிடம் வெளிப்படையாக பேசலாம்.

எனினும், வலி ​​மற்றும் அசௌகரியம் தாங்கமுடியாதவையாக இருந்தால், உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும். சில நேரங்களில் மலச்சிக்கலின் மூல காரணத்தை கண்டறிய முழுமையான பரிசோதனை அவசியம் .

உணவு மாற்றம் மட்டுமல்லாமல் பல மருத்துவ காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்

குழந்தைகளில் கடுமையான மலச்சிக்கலின் மருத்துவ காரணங்கள்

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு : நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்

குழந்தைகளிலும் பெரியவர்களிலும் மலச்சிக்கலை தனித்தனியாகதான்  சிகிச்சையளிக்க வேண்டும். குழந்தைகளின் குடல் இயக்க முறை மாறுவதுதான் இதற்கு காரணம்.

மூன்று அல்லது நான்கு வயதுவரை, குழந்தைகளின் குடல் இயக்க முறைமையில் வளர்ச்சி ஏற்படும்.ஆகையால், இந்த வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பெரும்பான்மையான குழந்தைகள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதில்லை என்றாலும்,  சிலர் இதன் வழியை அனுபவிப்பார். நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இதோ:

 

 1. ஹைப்போ தைராய்டிசம்

தைராய்டு சுரப்பியின் வழக்கமான செயல்பாடு  குறைந்தால், குடல் தசைகளின் செயல்பாடு குறையும்.இது குழந்தைகளில் கடுமையான மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பு சோதனை செய்யப்படவேண்டும்

இந்த வகை சோதனை ரத்த பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது (ஹீல் ப்ரிக் அல்லது குத்ரி டெஸ்ட்).எந்த வயதிலும் இந்த மருத்துவ சோதனை நிகழலாம்.

2.ஹிர்ச் ஸ்பிரங் டெஸ்ட்

உங்கள் குழந்தை பிறந்ததிலிருந்து மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், ஹிர்ச் ஸ்பிரங் நோயின் காரணமாக இருக்கலாம்.

இந்த அரிதான பிறப்பு நிலைமையில், குழந்தையின் பெருங்குடலில் நரம்பு செல்கள் காணாமல் போகலாம். மூளையில் இருந்து பெருங்குடலுக்கு  கட்டளை பெற உதவும் நரம்பு செல்கள் இவை.இல்லாத நிலையில் பெருங்குடல் ஒழுங்காக செயல்படாது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் முதல் சில வாரங்களிலே அறிகுறிகளை வெளிப்படுத்துவர் . உதாரணமாக, இந்த நோய் கொண்ட  எடை குறைவான குழந்தைகள் அடிக்கடி வாந்தியெடுப்பர்.டவுன் சின்ரோம் உள்ள குழந்தைக்கு இது மிகவும் பொதுவானது.

3.மலவாய் வெடிப்பு

முன்பு குறிப்பிட்டது போல, குடலைக் கட்டுப்படுத்துகின்ற தசைகளில் பிளைவு ஏற்பட்டால் இந்த  மலவாய் வெடிப்பு ஏற்படலாம்.

ஒவ்வொருமுறை மலம் கழிக்கும்பொழுதும் வலி ஏற்படுத்தும்.

4  . பிற மருத்துவ நிலைகள்

நீரிழிவு, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்,  லெட் பாய்சனிங் மற்றும் இரத்த கனிம மற்றும் அழுத்த அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் பெருமூளை வாதம் போன்ற நரம்புக் கோளாறு கொண்ட குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.இதற்கான காரணம் பெருங்குடல் மற்றும் / அல்லது குடல் முறையின் செயல்பாட்டில் தடை ஏற்படுவதனால்தான்.

சில சமயங்களில், குழந்தையின் மலம் நீர் போன்ற தன்மை உடையதாக இருக்கும்.வழக்கமாக, மலம் கழிக்க தெரிந்த குழந்தைக்கு ஏற்பட்டால் இதற்கு என்கோபிரேசிஸ் என்று பெயர்.இந்த நிலையில், குழந்தைக்கு தன குடல் இயக்கத்தின்மேல் எந்த கட்டுப்பாடும் இருக்காது.

இந்த நிலைமைகளில், அளவை பொருட்படுத்தாமல் குழந்தைகள் மலம் கழிப்பார்கள்.

நாள்பட்ட மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க நேரம் எடுக்கும் .மலச்சிக்கல் சிகிச்சையளிக்கக்கூடியதாக இருப்பதால் இதற்காக கவலைப்படவேண்டாம்.உங்கள் பொறுமையும் ஒத்துழைப்பும் இருந்தால் குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு எளிதில் வைத்தியம் செய்யலாம்

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கான  தீர்வு.

குழந்தைகளில் மலச்சிக்க லுக்கு பல வீடு வைத்தியங்கள் உள்ளன .இதை வீட்டிலே முயற்சி செய்யலாம்.ஒவ்வொன்றாக அதை பற்றி பேசலாம்

1   போதுமான  திரவ உட்கொள்ளல்

தண்ணீர் மற்றும்  சாறு உள்ளிட்ட போதுமான அளவு திரவங்களை உட்கொள்வது அவசியம்.இது குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.

 • கைக்குழந்தை : உங்கள் குழந்தைக்கு  ஃபார்முலா கொடுக்கவேண்டுமானால் , கொடுக்கப்பட்ட  வழிமுறைகளின்படி தண்ணீரின் சரியான அளவை கொண்டு சேர்க்கவேண்டும் . தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு  மலச்சிக்கல் ஏற்படுவது அரிதுதான்.இருப்பினும், தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய காரணத்தினால் குழந்தை அடிக்கடி மலம் கழிக்கக்கூடும்.ஆறு வயதுவரை குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதை தவிர்க்கவும்   
 • ஆறு மாதம் : ஆறு மாதத்திற்குமேல் குழந்தை கடினமான உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும். திரவத்திலிருந்து கடினமான உணவை உட்கொள்ளும் சமயம், குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும்.குழந்தையின் மலம் கடினமாக இருந்தால், பியர் மற்றும் ப்ரூன் சாறை கொடுக்கலாம். இவை மலச்சிக்கலை விடுவிக்க உதவும்.இந்த சாறுகளின் அளவு 7 - 30 மில்லி லிட்டர் அளவில் இருக்கவேண்டும் .குழந்தை வளரும்போது இது படிப்படியாக அதிகரிக்கலாம்.
 • ஒன்பது மாதம் :  உங்கள் பிள்ளைக்கு ஒன்பது மாதங்களுக்கு மேல் வயதுற்றால், , 22 முதல் 45 மில்லி லிட்டர் பழச்சாறை அறுத்தலாம். சாறை விட பழங்களே மேலானது.இதில் ஒட்டுமொத்த ஃபைபர் கொண்டிருக்கும்.

 

 1. உயர் ஃபைபர் உணவு

பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடலில் சேரும் ஃபைபர், பார்லி மற்றும் கோதுமை போன்றவை உடலின் கழிவுகளை மென்மையாக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு எளிதாக தீர்வு கிட்டும்

 

 • ஆறு மாதம் : அதிக தாய்ப்பால் மற்றும் தண்ணீருடன் இந்த வயதில் உங்கள் குழந்தைக்கு ஃபைபர் நிறைந்த உணவை அறிமுகப்படுத்தலாம், பிரௌன் அரிசி,  பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், கொடிமுந்திரி,அத்தி, பீச்  மற்றும் பிளம்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.வேகவைத்த பச்சை காய்கறி மற்றும் கீரைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
 • ஒன்பது மாதங்கள் : ஒன்பது மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள்,  உயர் ஃபைபர் உணவு (20-25 கிராம்), மலத்தை மென்மையாகவும் எளிதாகவும் கழிக்க உதவும். ஒரு கப் பழம், ஒரு கப் காய்கறிகள், மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவை கொடுப்பது முக்கியம்.தினசரி அடிப்படையில் ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை ரொட்டி ஆகியவற்றைச் சேர்க்கவும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற நார்ச்சத்து அதிகம் இல்லாத உணவுகளை குறைக்கலாம்.
 1. மென்மையான மசாஜ்

சில நேரங்களில், குழந்தைகளுக்கு மலச்சிக்கலை கடக்க ஒரு வித அழுத்தம் தேவைப்படும்.இதற்காகத்தான் மென்மையான உடல் மசாஜ் தேவைப்படுகிறது.இதுதான் குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு மிக எளிதான சிகிச்சையாகும்.

குழந்தையை படுக்கவைத்து, கால்களை கடிகார வாழியாக சுழற்ற வேண்டும்.இது வாயு மற்றும் மலச்சிக்கலை வெளியேற்ற உதவும்

4  சூடான குளியல்

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு காணும் போது, சூடான குளியலை தேர்வு செய்யலாம்

தொட்டியில் சூடான தண்ணீரில் குளிப்பதனால் தசைகள் மற்றும் மலக்குடல் ஆசுவாசப்படுத்தலாம் . இதனால் மலம் கழிப்பது எளிதாகும்

டாக்டர்களின் பரிந்துரைப்பால்,  கிளிசரினால் மலக்குடலுக்கு உயர்வாய் முயற்சிக்கலாம்.கூம்பு வடிவ கிளிசரினை குழந்தையின் மலவாயில் சொருகலாம்.சிறிது நேரத்தில் கரைந்து,மலத்தை கடக்க எளிதாக்குகிறது.

குழந்தையின் மலச்சிக்கலுக்கு மலமிளக்கிகளை பயன்படுத்தவேண்டாம்.

சிக்கலுக்கான தீர்வாக மட்டுமல்லாமல் ,இதை தடுப்பதற்கான சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தடுப்பு மருந்துகள்

குழந்தைகளில் மலச்சிக்கல் தடுக்கும் வரையில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் : உணவு முறை  மற்றும் கழிப்பறை பயிற்சி.

Remedies for constipation in children

 1. குழந்தைகளுக்கான உணவு
 • 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள். தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.பார்முலாவிற்கு  மாறினாலும் தகுந்த அளவு தண்ணீர் சேர்த்து மட்டுமே கொடுங்கள்.
 • 12 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் குறுநடை போடும் குழந்தைக்கு உயர் ஃபைபர் உணவு (20-35 ஜி.எம். / நாள்) கொடுங்கள்,போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தவும். ஒரு கப் பழம் அல்லது காய்கறி உண்பதும் முக்கியம்.முன்பு குறிப்பிட்டபடி, ஓட்ஸ், முழு கோதுமை பழுப்பு அரிசி, பீன்ஸ் மற்றும் நார் நிறைந்த உணவை கொடுக்கவும்.

குழந்தைக்கு எடுத்துக்காட்டாக நீங்களும் அதையே சாப்பிடுங்கள்.ஃபைபர் நிறைந்த உணவு குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வயிற்றுக்கு நல்லது.

 1. கழிப்பறை பயிற்சி

கழிப்பறை உபயோகிக்க ஆரம்பித்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும்.இந்த புதிய மாற்றத்தை எளிதாக்க பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ளவும்.

 • சிறுநீர் அல்லது மலம் கழிக்க தோன்றினால் குழந்தையை கழிப்பறைக்கு செல்ல பழக்குங்கள். நாம் மலம் கழிக்க ஊக்குவிக்க மலக்குடல்கள் சிக்னல்களை அனுப்பும் . அந்த சைனல்களை புறக்கணித்தால், மலம் கழிப்பது கடினமாகிவிடும்.அதனால் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை கழிப்பறை உபயோகிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள்
 • குடல் இயக்கங்களுக்கு ஒரு வழக்கமான அட்டவணையை உருவாக்குங்கள்.இது குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்த சிகிச்சையாகும் . உணவுக்கு  பிறகு கழிப்பறைக்கு செல்ல விரும்புவர் குழந்தைகள்.சாப்பிட பின்பு குழந்தைகளை கேளுங்கள். உங்கள் இருவருக்கும் இந்த வழக்கம் உதவும்.
 • குழந்தையை அமர்வு பகுதியில் மலம் கழிக்க சொல்லித்தரவும் : இது தசைகளை ஆசுவாசப்படுத்தி மலம் கழிப்பதை எளிதாக்கும் .கூடுதலாக, உடற்பயிற்சியும் நல்ல உணவும் குழந்தைக்கு அவசியம்.

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு  இந்த சிகிச்சைகள் பின்பற்றினால், உங்கள் பிள்ளையின் அசௌகரியத்தையும் வலியையும் நீக்கிவிட உதவலாம்.மலச்சிக்கல் ஒரு சிகிச்சை அளிக்க முடியாத மருத்துவ நிலை அல்ல என்பதை நினைவில் கொள்க

மொத்தத்தில், குழந்தைக்கு அதிக நீர், நார்ச்சத்து நிறைந்த உணவு மற்றும் கழிப்பறை பயிற்சி மிக அவசியம்.

Written by

theIndusparent

app info
get app banner