கவனமான பெற்றோர்கள் செய்யாத 7 தவறுகள்

கவனமான பெற்றோர்கள் செய்யாத 7  தவறுகள்

பிள்ளைகள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, மரியாதைக்குரியவர்களாக வளர வேண்டும் என்றால், இந்த 7 தவறுகளைத் தவிர்க்கவும்!

பெற்றோராக இருப்பது எளிதல்ல. இங்கும் அங்கேயும் ஒரு சில தவறுகளைச் செய்வது இயற்கைதான்.எனினும், பெற்றோருக்குரிய இந்த 10 தவறுகளை நீங்கள் செய்யவே கூடாது.

சீரற்றதாக இருப்பது

மக்களுக்கு பொதுவாக ஒரு நடைமுறை ஒழுங்கும் வழக்கமும் தேவை.தினசரி நாம் செய்யும் விஷயங்களுக்கு  ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை பின்பற்றுவது நம் இயல்புதான். குழந்தைகள் வந்தபின், நடைமுறை ஒழுங்கை கொண்டு வளர்த்தால்தான் பிள்ளைகளுக்கு ஒழுங்கை  கற்றுக்கொடுக்கும்..

உங்கள் பிள்ளையை எதிர்மறையான சிந்தனைகளுக்கு வெளிப்படுத்துதல்

குழந்தைகளை சத்தம் போடுவது, அவர்கள் கோரிக்கைகள்  அனைத்தையும் மறுப்பது அல்லது குழந்தைகளை உணர்ச்சிரீதியாக மற்றும்

உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்ற விஷயங்களை ஒரு பெற்றோராக ஒருபோதும் செய்யக்கூடாது.

இதுபோன்ற விஷயங்கள் உங்கள் குழந்தையை மனதளவில் பாதிக்கும்.உங்கள் கோபம் எதற்கென்றே தெரியாமல் குழப்புவார்கள்.இது இன்னும் பல  சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்.

குழந்தைகள்முன் சண்டையிடுவது

குழந்தையாக பல நேரங்களில் நம் பெற்றோர்கள் சண்டையிட்டு பார்த்திருப்போம்.அல்லது, மற்ற தம்பதியினர் சண்டையிட்டும் கூச்சலிட்டு பார்த்திருப்பீர்கள்.அதை பார்த்தபோது உங்களுக்கு எப்படி இருந்தது? மற்றவர் சண்டையிடுவதை பார்ப்பது உங்களுக்கு சங்கடமாக இருந்திருக்கும் அல்லவா?உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களும் உங்கள் துணையும் சண்டையிட்டு கொள்வதை பார்த்தல் இதைவிட மோசமாக இருக்கும்.

சில நேரங்களில் சண்டையை  தவிர்க்க முடியாதுதான்.முடிந்தவரை, அந்த சண்டையை சாந்தமாக கையாளுங்கள்.அதுவும் , அவர்கள்முன் செய்யவேண்டாம். நீங்கள் வருத்தமாக இருந்தால், அந்த எதிர்மறை உணர்ச்சி அவர்களை தாக்கும் . உங்கள் சண்டைகளுக்குதங்களைத் தாங்களே குற்றம் சாட்டுவார்கள்.

குழந்தைகளுக்காக வளைந்து கொடுப்பது

உங்கள் குழந்தையுடன் நல்ல உறவு வைத்திருக்கவேண்டுமென்றால் , சில வரையறைகள் மிக முக்கியம்.இதுபோன்ற வரையறைகள்தான் பொறுப்பைக் கற்பிக்கும் .எப்போது வேண்டுமானாலும் எது  வேண்டுமானாலும் அவர்கள் விரும்புவதைச் செய்ய முடியாது என்று புரிய வையுங்கள்.

ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில முறை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் எப்பொழுதுமே விட்டுக்கொடுக்க கூடாது. இது உங்கள் குழந்தையை கெடுக்கும்.அவர்களின் சமூக வளர்ச்சியை பாதிக்கும்.

உங்கள் குழந்தைக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பது

சில சமயங்களில், கடும் அலுவலக பணிகளுக்கு நடுவில்  ஒரு பெற்றோராக இருப்பது கடினம்தான்.அனால் உங்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் என்று அடிக்கடி வலியுறுத்துங்கள்.அவர்களுடன் தரமான நேரத்தை செலவழிக்க வேண்டும்.

சில நேரங்களில், வேலையைத் தவிர்த்து,  உங்கள் குழந்தையின் டான்ஸ் கிளாஸிற்கு செல்லவும்.அல்லது கடற்கரைக்குச் செல்லுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.

தவறான எடுத்துக்காட்டாக இருப்பது

எல்லாரையும்போலவே. பெற்றோர்களும் பெர்ஃபெக்ட் இல்லை.எனினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தப்பான உதாரணமாக இருக்கக்கூடாது.

புகை பிடித்தல், கெட்ட வார்த்தையில் திட்டுவது அல்லது பிறரிடம் கோபமாக நடந்துகொள்வது போன்ற விஷயங்களை உடனடியாக  திருத்திக்கொண்டு , நல்ல மும்மாதிரியாக இருக்கப்பாருங்கள்.எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தவும் உதவும்.

பொத்திப்பொத்தி வளர்ப்பது

பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றுதான்  விரும்புகிறார்கள்.அவர்கள் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ, அல்லது மெசேஜ் பண்ணாமல் விட்டாலோ பயப்படுவது சாதாரணம்தான்.

இருப்பினும்,, சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதோடு  மட்டுமல்லாமல், தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.ஒரு நல்ல பெற்றோரின் வளர்ப்பு, பிள்ளையின் சுயமாக சந்திப்பிலும் மற்றவர்களை மதிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. ஒரு பெற்றோராக, இதுதான்

உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

Any views or opinions expressed in this article are personal and belong solely to the author; and do not represent those of theAsianparent or its clients.

Written by

theIndusparent