கர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது குறித்த 7 அற்புதமான உண்மைகள்

கர்ப்ப காலத்தில் குழந்தை உதைப்பது  குறித்த 7 அற்புதமான உண்மைகள்

கருப்பையில் குழந்தையின் முதல் உதை, அவர்களின் ஐந்து மாதம் நிறைவடைவதை குறிக்கும்.

கர்ப்பகாலத்தின் அற்புதமான தருணங்களில் ஒன்று முதல் முறையாக கருவறையில் உள்ள குழந்தை உதைப்பது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான்,உங்களுக்குள்  ஒரு உயிர் வளர்வதை உறுதியளிக்கும்.

ஒரு பெண், 'குவிகெனிங்' என்று அழைக்கப்படும் குழந்தையின் முதல் அசைவுகள், கர்ப்பகாலத்தில் 16 - 25 வாரங்களுக்குள் அனுபவிப்பாள்.எனினும், முதல் முறையாக அம்மாவாகும் பெண்கள்  

இது போன்ற  அசைவுகளை 25வது வாரங்களுக்கு மேல்தான் உணரமுடியும். நீங்கள் இரண்டாவது முறை கர்பமாக இருந்தால், ,  13 வது வாரத்தின் ஆரம்பத்திலே  உணரலாம்.

இந்த தலைப்பில் மேலும் நுண்ணறிவு பெற, டாக்டர் இந்து தனேஜா

,மூத்த ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், ஃபைடிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை, ஃபரிடாபாத் அவர்களை தொடர்பு கொண்டோம் ." கருப்பையில் குழந்தையின் முதல் உதை,  ஐந்து மாதங்கள் நிறைவடைதலையும் ,சீக்கிரம் இயங்குவதற்கான ஒரு நிலைக்கு வருவதாகவும் குறிப்பிடுகிறார்"  , ஒரு குழந்தையின் உதை, உடல் வளர்ச்சிக்கு மேலாக பல காரணங்களை குறிக்கிறது

நிபுணர் ஆலோசனை : கர்ப்ப காலத்தில் குழந்தையின் உதை நமக்கு என்ன சொல்கிறது

டாக்டர் தனேஜா, கர்ப்ப காலத்தில் ஒரு குழந்தையின் உதை குறிக்கும் 7 விஷயங்களை  பட்டியலிடுகிறார்

1. முதல் உதை வளர்ச்சியை குறிக்கும்

கர்ப்பத்திலுள்ள குழந்தையின் முதல் உதை வயது, வளர்ச்சி மற்றும் இயக்க நிலையை  குறிக்கிறது. கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் குழந்தையை அவனது / அவளது கைகளை நீட்டும்போது, அடிவயிற்றில் ஒரு சின்ன படபடப்பை உணரமுடியும்.

2 .தன் சூழலுக்கு தழுவிக்கொள்வதை குறிக்கும்

"உங்கள் உடலை அசைக்கும்போதே குழந்தையின் அசைவுகளும் கொஞ்சம்கொஞ்சமாக தெரிய வரும். உங்கள் செரிமான சத்தத்தின் எதிர்வினையாக  அவனோ/ அவளோ வயிற்றுக்குள் நீந்தலாம். அல்லது கைகால்களை நீட்டலாம்.இது குழந்தை  வளர்ச்சியில் இயல்பான ஒன்றாகும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்கிறார் டாக்டர் டேன்ஜா.

3.இடது பக்கத்தில் படுத்தால், குழந்தையின் உதைகள் அதிகமாகும்

கருவுற்ற பெண்கள்  இடது பக்கத்தில் படுத்தால், அவர் அதிகமான  உதைகளை அனுபவிக்கக்கூடும்."  இடது பக்கத்தில் படுப்பதால் குழந்தையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் .இதனால் அவர்கள் அசைவும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் இடது பக்கத்தில் படுத்துக்கொண்டு குழந்தை அதிகமாக உதைத்தால், பயப்படாதீர்கள். இது அழுத்தத்தைவிட , குழந்தையின்  ஆற்றலை   பிரதிபலிக்கிறது .

4. எதிர்கால நடத்தையை குறிக்கும்

குழந்தையின் உதைகள், எதிர்காலத்தில் அவன்  / அவள் நடத்தையை சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, கருப்பையில் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள், அவர்கள் வளரும்  ஆரம்ப காலங்களில் அவர்கள் பின்னாலே ஓடவேண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. "சமீபத்திய ஆய்வுகள், குழந்தைகளின் உதை அவர்கள் மூளை வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது" என்று டாக்டர் தனேஜா

5. ஒன்பது வாரங்கள் தாண்டிய பிறகே உதைகள் அதிகமாகும்

ஒன்பது வாரங்கள் தாண்டிய பிறகே உதைகள் அதிகமாகும்.16 - 25  வாரங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் குழந்தைகள் உதைக்கலாம்.16  வாரங்களுக்கு முன்னால் வயிற்றில் சிறிய படபடப்பு ஏற்பட்டால் கவலை வேண்டாம்.24 வாரங்கள் கழித்து, குழந்தையின் உதைகளை அடிக்கடி உணர்வீர்கள்.

6. கர்ப்பத்தின் முடிவில் குழந்தையின் உதைகள் குறைந்தால் அதன் ஆரோக்கியமின்மையை குறிக்கும்

" கர்ப்பத்தின் 28 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் உதைகள் குறைந்துவிட்டால் , உடனடியாக ஒரு டாக்டரை பாருங்கள் .  உதைகள் குறைவது ஆரோக்கியமின்மையை குறிக்கிறது.இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், பத்து உதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பதிவு செய்யுங்கள் .இது சிசுவிற்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதையும்,  தாயின் சர்க்கரை அளவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறது" என்கிறார்.

குழந்தையின் அசைவுகளை உணரமுடியவில்லை என்றால், ஒரு டம்பளர் குளிர்ந்த தண்ணீரை குடித்துவிட்டு. கொஞ்ச நேரம் நடந்து பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் 10 முறையாவது  உதைக்கவில்லையெனில், நீங்கள்  மருத்துவரை சந்தித்து ஒரு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை பெறுங்கள்

.மருத்துவர் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால்,நீங்கள் அவசரகால சிசேரியனுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

7.36 வாரங்களுக்கு பிறகு உதைகள் குறைந்தால் கவலை வேண்டாம்

டாக்டர் தனேஜா " 36 வாரங்களுக்கு பிறகு உதைகள் குறைந்தால் கவலை கொள்ள வேண்டாம். இந்த வாரம் கழித்து, கருப்பையில் இல்லாமல், விலாவில் உதைகளை அனுபவிக்கலாம்.

"ஒரு உயிரை பெற்றெடுப்பது தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் பல மணிநேரத்திற்கு குழந்தை அசைவை உணராமல் போனால் மட்டுமே கவலைப்படுங்கள். மற்றபடி, இந்த கர்பகாலத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்" என்கிறார்.

Source: theindusparent

Written by

theIndusparent