கர்ப்ப காலத்தில் ஓமத்தின் நன்மைகள்

இந்த அதிசய விதைகளுக்கு குறிப்பாக சிறந்த நோய் நீக்கும் பண்புகள் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு, பெரும் சுகாதார நலன்களை வழங்கும்.
பொதுவான இந்திய சமையல் அறையில் காணப்படும் நறுமப்பொருட்களில் ஓமமும் ஒன்று.
மேலும் பிஷப் களை என அழைக்கப்படும் ஓம விதைகளை, பொடித்து அல்லது அப்படியே சாப்பிடலாம்.இது பரவலாக பருப்பு (தால்) தயாரிப்பில் ஒரு வாசனை திரவியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த அதிசய விதைகளுக்கு குறிப்பாக சிறந்த நோய் நீக்கும் பண்புகள் உண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு, பெரும் சுகாதார நலன்களை வழங்கும்.
ஓமத்தின் நலன்கள்
வாய்வு மற்றும் வீக்காதிலிருந்து இருந்து நிவாரணம்
கர்ப்ப காலத்தில்,ஹார்மோன்கள் மற்றும் ஒரு வளர்ந்து வரும் கருப்பையினால் செரிமானம் குறைந்து ,வாய்வு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
இதிலிருக்கும் தைமால், செரிமான நொதிகளின் ஆக்கத்தை அதிகரிக்க மற்றும் குடல் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.இது செரிமானத்தை விரிவுபடுத்தி, உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்கங்கள் முறைப்படுத்துதல்
பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உங்காகும் . ஓமவிதைகள் உணவை, உணவுக்குழாயில் மெதுவாக வயிற்றிற்கு கொண்டு சேர்க்கும். செரிமானம் சீராக அமையும்.
கருப்பை வலுப்படுத்துதல்
ஓம விதைகள் கருப்பையை வலுப்படுத்தும். பிரசவ நேரத்தில் இந்த வலுமை பயன்படும்.
கர்ப காலத்தில் ஊமத்தை உணவில் சேர்த்துக்கொள்வதற்காக, எங்கள் அஜ்வைன் முக்வாஸ்-ஐ சுவைத்து பாருங்கள்
தேவையான பொருட்கள்
- ஓம விதைகள் - 50 கிராம்
- வெந்தையம் - 50 கிராம்
- பெருஞ்சீரகம் - 50 கிராம்
- எள் - 50 கிராம்
- கிராம்பு 1
- பிளாக் சால்ட்- ௫ கிராம்
- எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சையின் சாறு
- அதிமதுரம் - 50 கிராம்
செய்முறை
- எலுமிச்சை சாற்றில் பிளாக் சால்டய் கலக்கவும்.
- மற்ற பொருட்களை தனிதனியாக கிண்ணங்களில் பிரித்து போடவும்.
- எலுமிச்சை சாற்றை(+பிளாக் சால்ட்) அணைத்து கிண்ணங்களிலும் சமமாக சேர்த்துகொள்ளுவும்.சிறிது நேரம் காய வைக்கணும்.
- அதை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்
- பின் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
- கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்