கர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்

கர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க  10 பயனுள்ள வழிகள்

ஷெர்லி கணேஷ்,ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர், பெங்களூரில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனை, கர்ப்பத்தின் பின்னர் எப்படி எடையை குறைப்பது என்று சொல்கிறார்.

ஷெர்லி கணேஷ்,ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர், பெங்களூரில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனை, கர்ப்பத்தின் பின்னர் எப்படி எடையை குறைப்பது என்று சொல்கிறார்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் வருகையை நீங்கள் கொண்டாடிவிட்டு , தாய்மையின்  பேரின்பத்தில் மகிழ்ச்சியடைந்த பிறகு, உங்கள் பழைய  உடற்கட்டை மீண்டும் சீராக்க ஆர்வமாக உள்ளீர்கள். இருப்பினும், அந்த எடையை இழக்க உதவுவதற்கு எந்த மந்திரமும் இல்லை.கர்ப்பதிற்கு பின்  எடை குறைப்பு  ஒரு தனிப்பட்ட பயணம்.

செசரியன் பிரசவத்திற்கு உட்படும் பெண்களுக்கு, சுகவீரசவத்தை விட  நீண்ட மீட்பு காலம் தேவைபடுகிறது.

செசரியன் சிகிச்சையில் ஏற்பட்ட  வெட்டு குணமடைய பல வாரங்கள் எடுக்கும். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு பல நாட்களாகும்.பெண்கள், மாதம் 2  கிலோ குறைக்க விரும்பவேண்டும்.. எட்டு வாரங்கள் கழித்து  ஏற்படும் பரிசோதனைக்கு பிறகுதான் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
weightloss

எனினும்,  உடற்பயிற்சி   ஒரு தனிநபரின் மீட்பு செயல்முறையை சார்ந்துள்ளதாகும். மேலும் , கர்ப்ப காலத்திற்கு முன் பராமரிக்கப்பட்ட உடற்கட்டு நிலையை பொறுத்தது. ஒரு நபரின் உடலை முழுமையாக சோதனை செய்வது முக்கியம் . இரத்த அழுத்தம், வலி,  கீறல் தளம்  மற்றும் அதிகப்படியான சோர்வு போன்ற அறிகுறிகளையும் கவனிப்பது  மிகவும் முக்கியம்.

மார்பக உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, உயர்ந்த புரத காலக்ட்தாகோகஸ் நிறைந்த உணவை எடுக்க வேண்டும்.வாரத்திற்கு  2 ½ மணிநேர  மிதமான ஏரோபிக் பயிற்சி- பிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திற்கு  பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 30-45 நிமிடங்களுக்கு நடை பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

ஷெர்லி கணேஷ்,ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர், பெங்களூரில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனை, கர்ப்பத்தின் பின்னர் எப்படி எடையை குறைப்பது என்று சொல்கிறார்

1. தாய்ப்பால்:

அதிகப்படியான உடைகளை குறைக்க தாய்ப்பாலூட்டுவது,  இயற்கையாகவே உதவுகிறது.பொதுவாக, 12-13 கிலோ கர்ப்ப காலத்தில் தோராயமாக எடை அதிகரிக்க கூடும்.  பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுப்பதனால், எடை நன்கு குறையும்.

2 . நிறைய குடியுங்கள்:

தாயின் உடலில் திரவம் சமநிலையை பராமரிக்க வேண்டும்.  பல பெண்கள் மலச்சிக்கல், மற்றும் பல  டெலிவரி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதை தடுக்க, குறைந்தபட்சம் 8-அவுன்ஸ் தண்ணீரை ஒரு நாளில் குடிக்கவேண்டும்.

3  உணவுக்கட்டுப்பாடு வேண்டாம்

புதிய தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.அதனால் எந்தவித உணவுக்கட்டுப்பாடு வேண்டாம். . பால் உற்பத்தியை அதிகரிக்க போதுமான கலோரிகளை ஒரு தாய் சாப்பிட வேண்டும். தாய் ஆரோக்கியமாக சாப்பிட்டால்தான். குழந்தை ஆரோக்கியமாக சாப்பிடும்.

மற்ற எடை குறைப்பு  குறிப்புகள் பற்றி படிக்க அடுத்த பக்கத்தில் தொடரவும் (Continue Reading)

4 நடைப்பயிற்சி அவசியம் :

இரத்த ஓட்டங்கள் மற்றும் பிற சிக்கல்களை தடுக்க இந்த பயிற்சி உதவுகிறது. அதே நேரத்தில்  சிசேரியன் தாய்மார்கள் சீக்கிரம் குணமடைய இந்த நடைபயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

5  உடற்பயிற்சிக்காக  நேரத்தை ஒதுக்குங்கள் :

பிரசவத்திற்கு பின், லேசான பயிற்சிகளை தொடங்குவது  நல்லது. ஏரோபிக் பயிற்சிகள், இடுப்பு சாய் மற்றும் கெகெல் பயிற்சிகள்,  இதய உடற்பயிற்சி,  கோப்ரா முன்னோக்கு வளைவு , மற்றும் அடிவயிற்று ஸ்லைடு மற்ற நன்மையான பயன்கள் இருக்கும்.

6 உங்கள் உடலை அறிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட வாழ்க்கை, பணி முறை மற்றும் உடல் தேவை உள்ளது.  இது தவிர,  ஒரு பெண்ணின் பிரசவ முறையும்கணக்கில் கொள்ள வேண்டும்.ஒரு பெண் தன் உடல் வரம்புகளை அறிந்துகொண்டு, எடை இழப்பு முறையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

7  சரியான சாப்பிடுங்கள்:   

கூடுதல் எடையை குறைக்க , உயர்ந்த புரத காலக்ட்தாகோகஸ் நிறைந்த உணவை உண்ணவேண்டும்.இதில் தானியங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் பப்பாளி ஆகியவை அடங்கும். பசிக்கு சிப்ஸை சாப்பிடுவதை விட பாதம்,முந்திரி போன்றவற்றை சாப்பிடலாமே.

8 தூக்கம் முக்கியம் :

பழைய ஜீன்ஸ் உங்களுக்கு சீக்கிரம் பற்ற வேண்டும் என்ற அவசரம் புரிகிறது.அனால், உங்கள் குழந்தையை பற்றியும் நீங்கள் நினைக்க வேண்டும். நீங்கள் சரியான தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு உங்களுக்கு மிக அவசியம்.

9 மன அழுத்தம் சீர்செய்தல் :  

தூக்கமின்மை, உங்களுக்கான நேரமின்மை மற்றும் புதிய பொறுப்புகளால் உங்களுக்கு சோர்வு ஏற்படுவது இயல்புதான்.ஆனால் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு உங்கள் உடலுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். உங்கள்  அழுத்த அளவு உங்கள் எடை குறைப்பு  திட்டங்களை பாதிக்கும்.

10 உதவி கேட்கவும்

உங்களுடைய பிசியோதெரபிஸ்ட்டை  சந்தித்து, உங்கள் அதற்கேற்றாற்போல் சரியான உடற்பயிற்சியை பரிந்துரைக்கலாம். உங்களுடைய பிசியோதெரபிஸ்ட் ஆலோசகர், உங்களை உணர்ச்சிப்பூர்வமாக ஆதரிப்பீர்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent