கருப்பை நீக்கத்திற்கு பிறகு செக்ஸ் சாத்தியமா?

கருப்பை நீக்கத்திற்கு பிறகு செக்ஸ் சாத்தியமா?

பொதுவான கருத்திற்கு மாற்றாக, வயிற்று வலி இல்லாமல் கருப்பை நீக்கத்திற்கு பிறகும் உடலுறவு சாத்தியம்  

கருப்பை நீக்கத்திற்கு பிறகும் செக்ஸ் சவாலாக இருக்கும் என்ற பயம் இருக்கிறது.இருந்தும் , ஒரு புதிய ஆய்வு இந்த அச்சத்திற்கு சவாலளித்திருக்கிறது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில்,  அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் , குறைந்த பாலியல் திருப்தி அல்லது சுய கௌரவம் பற்றி எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாததாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கருப்பை இழந்த பிறகும், பெண்கள் உடலுறவில் திருத்தி கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அனால் , கருப்பை நீக்கத்திற்கு பிறகு ஏன் உடலுறவு வலி மிகுந்ததாக இருக்கவேண்டும்? தொடர்ந்து பார்ப்போம்.

 

கருப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு செக்ஸ்: சாத்தியமா ?

நிச்சயம்! அறுவை சிகிச்சையின் பின்விளைவுகளை பற்றி பேசுவதற்கு முன், அதன் செயமுறையை பார்க்கலாம்.

ஹிஸ்டெர்ஏக்டமி என்பது கருப்பை அகற்றும் அறுவை  சிகிச்சை . இது வயிற்று வலி  மற்றும் கருப்பை தொடர்பான எந்த நோய் சாத்தியத்தையும் அகற்றிவிடும் பின்வரும் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சிகிச்சை  நிகழ்த்தப்படுகிறது

  • கருப்பை நார்த்திசுக்கட்டிகளை நீக்க. கருப்பை உள்ளே வளரும் இந்த கட்டிகள், இரத்தப்போக்கு, தசைப்பிடிப்பு, பாலியல் வலி மற்றும் சிறுநீர் கழிக்க தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தும்.
  • கருப்பைச்சார் இறக்கத்தை சரிசெய்ய உதவும் . கருப்பை அதன் அசல் நிலையில் இருந்து இறங்கி  யோனி கால்வாய் நோக்கி செல்லும்.
  • புற்றுநோய் அல்லது கருப்பை  நீக்க .கருப்பை முட்டையிலிருந்து புற்றுநோய் செல்களை அல்லது டியூமர் கட்டிகளை அகற்றலாம்.
  • எண்டோமைட்ரியோசிஸ் குணப்படுத்தலாம்.இந்த நிலையில் ம் கருப்பையின் வெளிப்புறத்தில் ஒருவித சுவர் எழும்பும். இதனால் மலட்டுத்தன்மை, கடுமையான இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.
  • அடினோமைசிஸ் குணப்படுத்த தேவைப்படும் . இதில் ,  கருப்பையின் உட்சுவர் சிதையும்.இதனால் வயிற்று வலி மற்றும் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஹிஸ்டெர்ஏக்டமி , வயிற்று வலியை நிவர்த்தி செய்து மற்ற வியாதிகளிலிருந்தும் குணப்படுத்தும்.

கருப்பை நீக்கத்திற்கு பிறகு செக்ஸ் சாத்தியமா?

உங்கள் மருத்துவ நிலை அடிப்படையில், மூன்று வகையான அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

 

  • மொத்த கருப்பை நீக்க அறுவை சிகிச்சை : இந்த முறையில், கருப்பை வாய் உள்ளிட்ட முழு கருப்பை நீக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.அதனோடு கருவுறையுடன் பல்லுயிர் குழாய்களையும், கருப்பையையும் அகற்றலாம்.
  • ஒரு பகுதி  கருப்பை நீக்க அறுவை சிகிச்சை :  இந்த செயல்முறையின்போது, ​​ கருப்பை யின் மேல்பகுதி மட்டும் நீக்கப்படுகிறது.இது பகுதி  கருப்பை அகற்றுதல் என்று அழைக்கப்படுகிறது
  • தீவிர கருப்பை அகற்றும்இ சிகிச்சை : இந்த அறுவை சிகிச்சையில் கருப்பை, கருப்பை வாய் திசு லினிங், மற்றும் யோனி மேல் பகுதி முழுதாக அகற்றப்படும்.

இதில் எந்த அறுவை சிகிச்சையும் ஆபத்து இல்லை என்றாலும்,ஹிஸ்டரிக்டமியில் க்கவிளைவுகள் அதிகம்.

உதாரணமாக, சிகிச்சையான ஒரு வாரத்திற்கு பிறகு சில வாரங்களுக்கு இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி அனுபவிக்க நேரும்.சமீபத்திய ஆய்வு ஒன்றில், இந்த அறுவை சிகிச்சையால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

கருப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ... உங்கள் பாலின வாழ்க்கை சில நாட்கள் பாதிக்கப்படும்.எனினும்,  இதனால் உங்கள் பாலின வாழ்க்கை பாதிக்காது.

கருப்பை நீக்கத்திற்கு பிறகு எப்பொழுது செக்ஸ் தொடங்கலாம்?

எல்லா மருத்துவ முறையையும் போலவே, இதனாலான மீட்பிற்கு நேரம் எடுக்கும். உங்கள்  உடல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குணமடைய வேண்டும்.செக்சிலிருந்து சிறிதுகாலம் தள்ளி இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து.

உண்மையில், அமெரிக்க மருத்துவ கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் யு.எஸ். சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களம் முதல் எட்டு வாரங்களுக்கு உங்கள் யோனிக்குள் எந்த பொருளையும் நுழைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு இரத்தப்போக்கு மற்றும் வெளியேற்றம் ஏற்படும்.உங்கள் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும் மேலும்  , மெனோபாஸ் அறிகுறிகளான ஃப்ளாஷ்கள் மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படும்.

இதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்குமா ?

ஹிஸ்ட்ரேக்டமி உங்கள் செக்ஸ் வாழ்க்கையை தற்காலிகமாக நிறுத்தும். அனால் அந்த வாழ்க்கைக்கு முற்று வைக்காது.

உண்மையில், உடல்நலம் தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹிஸ்ட்ரேக்டமியால் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில்  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நிரூபித்தது.சிலருக்கு,செக்ஸ் வாழ்க்கை மேம்பட்டதாக கூறியுள்ளனர்.உடலுறவின்போது அடி வயிற்றின் வலி இல்லாமல் இருந்ததாக தெரியவந்தது.

sex after hysterectomy

ஹிஸ்ட்ரேக்டமி உங்கள் செக்ஸ் வீரியத்தை குறைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.கருப்பை முட்டைகள் செக்ஸுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.இதனால் செக்ஸ் அனுபவிக்கமுடியாது என்றில்லை.

 

புணரின்பம்?

நீங்கள் குறைந்த புணரின்பம் அனுபவிக்கக்கூடிய வாய்ப்புள்ளது.அறுவை சிகிச்சையின்போது, கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் பல நரம்புகள் வெட்டப்படுவதால் இது நடக்கும்.

கருப்பைவாயில் இருக்கும் நரம்புகளும் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒட்டு மொத்தமாக வெட்டப்படுவதால் , உங்களால் புணரின்பம் முன்புபோல் அனுபவிக்கமுடியாது. ஆனால் இது அரிதானது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

நிபுணர் ஜெனிபர் பெர்மன், MD, லாஸ் ஏஞ்சல்ஸின் UCLA பள்ளியில் பெண் பாலியல் மருத்துவ மையத்தின் இணை இயக்குனர் " பெண்களுக்கு புணரின்பம் முன்பைவிட குறைந்தாலும், செக்ஸ் திறன் முற்றிலும் இழந்துவிடாது"

அப்படியானால், உடலுறவு இன்னமும் முன்புபோல் இருக்குமா?

முன்புபோல் அதே உடலுறவு இன்பம் இருக்குமா?

ஹிஸ்ட்ரேக்டமியால் உங்கள் யோனியின் உணர்திறன் பாதிக்காது.உங்கள் கருப்பை நீக்கும்பொழுது, கட்டாய மெனோபாஸ் ஏற்படுகிறது.

துரதிருஷ்டவசமாக, உங்கள் யோனி உலர்ந்துபோகும்.இதனால் செக்சில் வலி வரும். சிலிகான் சார்ந்த லூப்ரிகண்டு அல்லது யோனி ஈஸ்ட்ரோஜன் கிரீம்கள் அல்லது மாத்திரைகள் பயன்படுத்தலாம்.இந்த சிக்கலை உங்கள் டாக்டருடன் கலந்து  பேசினால் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றிய சில நுண்ணறிவுகளை கொடுப்பார்.

உங்களுக்கான நேரத்தை கொடுங்கள்!

கருப்பை அகற்றுதல் உங்கள் பாலியல் வாஸ்க்கைக்கு தடை விதிக்கக்கூடாது.உங்கள் செக்ஸ் வாழ்க்கை சாதாரண நிலைக்கு வந்துவிடும்.பொறுமையாக இருக்க வேண்டும். செக்ஸுக்கு சிறிதுகாலம் காத்திருங்கள்.

காலம் முடிந்தவுடன்,பல செக்ஸ் நிலைகளை முயற்சித்துப்பாருங்கள்.முக்கியமாக, உங்கள் துணையிடம் உங்கள் பிரச்னையை பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு கவுன்சிலரின் உதவியையும் நாடலாம் .

கருப்பை நீக்கிய பிறகு நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன?

ஆறு முதல் எட்டு வாரங்கள் காத்திருக்கும் காலம் முடிந்தவுடன், உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் பெறலாம் . செக்சின் போது வலியோ அல்லது இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ, உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்.

உங்கள் துணையுடன் சேர்த்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையை இனிதே தொடங்குங்கள்

Written by

theIndusparent