கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது

புதிய ஆராய்ச்சியின் படி, கருச்சிதைவுக்கு 6 மாதங்களுக்குள் கர்ப்பமாகும் பெண்களுக்கு, அதுத்த கருச்சிதைவுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.
அபெர்டீன் பல்கலைக் கழகத்திலுள்ள ஒரு குழு,கரு இழப்புக்கு ஆறு மாதங்களுக்குள் கருவுற்றால் பெண்களுக்கு வெற்றிகரமாக கர்ப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின்போது, மீண்டும் கருத்தரிக்க முற்படுவதற்கு குறைந்து ஆறு மாதங்கள் பெண்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறியது. ஆனால, கருச்சிதைவுக்கு ஆறு மாதங்களுக்குள் கருத்தரித்தால் மீண்டும் ஒரு கருச்சிதைவுக்கு வாய்ப்பு குறைவு என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Photo: Dreamstime
“உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக, எங்கள் மெட்டா பகுப்பாய்வு , ஆறு மாதங்களுக்குக் குறைவாக கருவூற்றுவதை உறுதிப்படுத்துகிறது” என்று டாக்டர். சோஹினி பட்டாச்சார்யா, டெலிகிராப்பில் தெரிவித்தார்.
“மருத்துவ ஆலோசனைகள் கேட்டு தாமதிக்க வேண்டாம். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக இருந்தால் போதும் ” என்று பி.பி.சி இடம் கூறினார்.
கருச்சிதைவுகளுக்குப் பின்னர் கருத்தரிப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றாலும், இதில் தெளிவில்லை. ஆனால், பட்டாச்சார்யா சில நுண்ணறிவுகளை வழங்கியுள்ளார். ” “ஒரு நபருக்கு ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், அவர்கள் தங்களை சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள், மேலும் ஊக்கமாகவும், வளமாகவும் இருக்கலாம் – ஆனால் இது யூகம்தான்”
“தம்பதியர் மனதளவில் தயாராக இருக்கும்போது மீண்டும் முயற்சி செய்யலாம்”
“இந்த மதிப்பீடு மிகவும் முக்கியமானது” கருச்சிதைவு சங்கத்தின் தேசிய இயக்குனரான ரூத் பெண்டர் அடிக் பிபிசி யிடம் கூறினார்.”கருச்சிதைவுக்குப் பிறகு விரைவில் கருத்தரிக்க முயற்சி செய்ய விரும்பும் தம்பதிகளை ஊக்குவிக்கிறது.கருச்சிதைவுக்கு பின் சீக்கிரம் கருத்தரிக்கும் தம்பதியருக்கு மனஉறுதி அளிக்கிறது. இதற்கு மேலாக, தயாராக இருக்கும் ஜோடிகளுக்கு மீண்டும் முயற்சி செய்யலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது”
ஒரு கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிக்க முயற்சிப்பது பாதுகாப்பானதுதான் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால், கப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் ஜானின் எல்சன், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தயாரானால் மட்டுமே முயற்சிக்குமாறு ஆலோசனை கூறுகிறார்.

Photo: Fotolia
” கருச்சிதைவு ஏற்படுத்தும் மன அழுத்தத்தை போக்க கவுன்செல்லிங்கொடுக்கவேண்டும் ” எல்சன் கூறினார். ” பெண்கள், வலியையும் இரத்தப்போக்குகளையும் நிற்கும் வரை காத்திருக்கவேண்டும். உடலுறவில் ஈடுபடுவதற்குமுன் ஃபோலிக் ஆசிட் சாப்பிடவேண்டும்”
Source: theindusparent